நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தன்வினைஇரவு பகலை விழுங்கியத்தொடங்கிய பொழுது, மாலைச்சூரியனும் ஓய்வுஎடுத்துக்கொள்ள மேற்குநோக்கி மறைந்துகொண்டிருந்தான்.
அந்நேரம் வரவேண்டிய சந்திரனையும் காணைவில்லை, காலையில் வேலைக்கு சென்ற சந்திரனையும் காணவில்லை
வாசல்படியில் அமர்ந்திருந்த இளம் வயதான புவனா, இருட்டும் தொடங்கிரிச்சு இந்த மனிதன் எங்கு போனார் இன்னும் வரலையேயென்று நினைக்கும்போது,


அப்பா இன்னும் வரலையாமா என கேட்ட தன் மகன் சிவாவிடம் இப்பவந்திடுவார் நீபோய் தங்கைக்கூட உள்ளேயிரு அப்பாவந்ததும் எல்லாரும் சோறு சாப்பிடலாம் எனச்சொல்லியதும் தலையை ஆட்டியபடியே உள்ளே சென்றான் 11 வயதான சிவா.


வாசலிலிருந்து எழுந்த புவனா ரோட்டோரமாகவாவது போய்பார்த்து வரலாம் என எழுந்தபோது, தள்ளாடியபடி வந்து நின்றான் சந்திரன். அவனைப்பார்த்ததும் மனம் அம்மாடியோ என்றிருந்தாலும்,
கோபம் வீறிட்டு எழுந்தது இன்றுமா? ஏன் இப்படி எங்களை கொல்லாமல் கொல்றீங்க இப்படியே தினம் தினம் குடித்துவிட்டுவந்தா குடும்பம் என்னா ஆகுறது, பிள்ளைகள்வேற வளர்ந்து கேள்விகேட்க ஆரம்பிச்சிட்டாங்க இன்னமும் இப்படியே இருந்தா எப்படி என வந்தகோபத்தை வேகமாக பேச எத்தனித்தபோதும் தனிந்தகுரலிலேயே சொல்லிக்கடிந்தாள்.


குழந்தைகள் வீட்டிலிருக்கு நாம சண்டைப்போட அதுக நம்மளபாத்து நாளைக்கு கெட்டுபோகுமே, தெய்வமே இதுக்கு விடிவே கிடையாதா என சந்திரனின் கைகளைபிடித்து அழைத்துச்சென்றாள். செல்லம்மா என் செல்லமால்ல என புலம்பியபடி. இனி தெய்வத்தின்மீது சத்தியமா குடிக்கமாட்டேன் நம்பு எனைநம்பு என்றபடியே அவளின் பின்னாலேயே சென்றான்.
ஆடியபடியே வந்த தந்தையைக்கண்ட பிள்ளைகள் அப்பாவுக்கு என்னாச்சிமா வழக்கம் போலத்தானா என முகம்சுளித்தான் சிவா.
3 வயதான லதா அப்பாவின் ஆட்டத்தைப்பார்த்து ஆடுறாரு அப்பா ஆடுறாரு என சிரித்தாள்.


சாப்பிட்டுமுடித்து குழந்தைகள் தூங்குவதற்கு அந்த குடிசையின் ஒரு ஓரத்தில் ஒட்டுப்போட்டுக் கிடந்தபாயை எடுத்துவிரித்து அவர்களை உறங்கச்சொல்லி தன் கிழிந்த சேலையில் ஒன்றை அவர்கள்மேல் போர்த்திவிட்டு திரும்பியபோது, தலைகீழாக படுத்திருந்தான் கணவன் அருகே வந்தாள் சாப்பிட்ட வாய்க்கூட சரியாக கழுவாமல் கையை வாயில்வைத்தபடி அப்படியேக்கிடந்தான். அவனை நிமிர்த்திபோட்டு சரிசெய்துவிட்டு கட்டாந்தரையிலேயே தலையில் கைவைத்தமர்ந்தாள்.


இவள் விடியவிடிய இரவை விழுங்கிக்கொண்டிருந்தாள். இப்போது பகல் இரவை விழுங்கிக்கொண்டிருக்க காலை 6 மணி. சந்திரன் எழுந்து கொல்லைப்பக்கம்போய் குளித்துவந்து இரவு நடந்தது எதுவுமே தெரியாதபோல்,புவனா பசங்க எழும்பலையா,
கவர்மெண்ட் ஸ்கூலுன்னாலும் டைமுக்கு போகனும் நீயும் அந்த டாக்டரம்மா வீட்டுக்கு வேலைக்கு போகனும் இப்படி பொருப்பேயில்லாமல் காலங்காத்தால தலையில் கைவைத்து உக்காந்திருக்கே எழுந்திரு என்று அதட்டினான்.


விடியவிடிய அழதகண்ணீர் கன்னத்தை வரட்ட, ஏங்க ஒன்னு சொல்லட்டுமா, என்ன சொல்லு இனிமே குடிக்காதீங்க, பிள்ளைகளும் பெரிசாயிட்டாங்க அதுகளுக்குன்னு ஏதாவது செய்யனும், நான் டெய்லி வேலைக்கு போனாலும் குடும்ப நடத்துறது கஷ்டமாக இருக்கு நீங்க கூலி வேலைசெய்து சம்பாரிக்கிற 200, 300.யும் இப்படி தினமும் சூதாடியும் குடிச்சிட்டும் வந்துடுறீங்க அப்புறம் எப்படிங்க குடும்பம் நடத்துரது என சொல்லிமுடிக்கும் முன்னே விழுந்தது பளாரென்று ஓர் அடி.


எனக்கே புத்திமதியாடி சொல்லுர, ஐய்யா எம்புட்டு குடித்தாலும் ஸ்டெடியா இருப்பேண்டி, இதோ இன்னைக்கு பார் நேற்று சூதாட்டத்தில்விட்ட 200, ரூபாய இன்னைக்கு டபுளா கொண்டுவரேன். சரி சரி மசமசன்னு பேசிகிட்டே நிக்காமா ஏதாவது இருந்தா கொடு துண்ணுட்டு நான்கிளம்புறேன்.
இன்னிக்கி பெரியவரு வீட்டுல ஏதோ வேலயிருக்காம் அதமுடிச்சா
நிறைய கூலிதரேன்னாரு அதுகிடைச்சதும், கொஞ்சமா குடிச்சிட்டு
நேற்றுவிட்ட பணத்த புடிச்சிட்டு வந்து உங்கிட்ட கொடுக்கிறேன் அப்பப்பாரு இந்த சந்திரன் எப்புடுடின்னு, என்று சொல்லியபடியே எள பசங்களா எழுந்திறீங்க எழுந்திறீங்க என சிவாவை கால்கலாலேயே எட்டித் தட்டிவிட்டான்.


புவனா இருந்த பழையகஞ்சியை அவனுக்கு கொடுத்து அனுப்பிவிட்டு, பசங்களுக்கு பக்கத்துவீட்டு இட்லிகட ஆயாவிடம் கடன்சொல்லி இட்லிவாங்கிக்கொடுத்து சிவாவை பள்ளிக்கூடத்துக்கு கிளப்பினாள்
சட்டையணியும்போது சிவாக்கேட்டான் அம்மா எப்பவுமே இந்த ஒருசட்டையைதானே துவச்சி துவச்சிபோடுறேன் எப்பமா புது சட்டவாங்கிதருவா என கேட்டமகனின் முகம்பார்க்கும்போது
வந்தக்கண்ணீரை அடக்கினாள்.


அன்னைமுகத்தில் கவலைகோடு ஓடியத்தையறிந்த சிவா, யம்மா சும்மாக்கேட்டேன்ம்மா இன்னும் கொஞ்சநாளுளபாரு உனக்கு நான் சம்பாரிச்சுத்தாரேன் எனசொன்ன மகனைகட்டிக்கொண்டு அழுதாள்.
சிவாவை பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு லதாவைகைபிடித்துக்கொண்டு டாக்டரம்மாவீட்டைநோக்கி நடந்தாள்.


மாலை 5 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது அம்மா அம்மா எனக்கத்தியபடி தலைதெறிக்க ஓடிவந்தான் சிவா, என்னடா சிவா இப்படி ஓடிவர, அம்மா அப்பா அப்பா,
சொல்லு என்னாச்சி சொல்லுடா. இல்லம்மா எங்க பள்ளிக்கூடத்துக்கு பக்கதுல இருக்கிற சாராயக்கடையில அப்பா விழுந்து கிடக்குறாராம்மா பக்கதுல நிக்கிறவங்க அவரு செத்துட்டாருன்னு சொல்லுறாங்கம்மா என்றபோதே இருண்டது கண்கள், தலைசுற்றியது என்னாடா சொல்லுர என்று இருவரையும் இழுத்துக்கொண்டே ஓடினாள் புவனா.


சாராயக்கடை வாசலில் ஒரேகூட்டம் கூட்டத்தை விளக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தவளுக்கு அதிர்ச்சி, அங்கே சந்திரன் வாயில் நுரைதள்ளியபடி அலங்கோலமாக கிடந்தான் அவன் சட்டைபாக்கெட்டிலிருந்து சில பத்துக்கள் சிதறிக்கிடந்தன, என்னங்க என்னாச்சி எழுந்திறீங்க எழுந்திறீங்க என அவனை தட்டி எழுப்பினாள், நிறையதடவை எழுப்பியும் அவன் உணர்ச்சியிழந்த மரக்கட்டையாக மரணித்துக்கிடந்தான். இருகுழந்தைகளையும் கட்டிக்கொண்டு கதறினாள்


சற்று நேரத்தில் போலீஸ்ஜீப் வந்தது, சாராயக்கடையினுள்ளே நுழைந்து சோதனை நடத்தியது அப்போதுதான் தெரிந்தது சாராயம் விசமாகியிருப்பது
விசமாகிப்போன சாரத்தையருந்திய சந்திரனோடு இன்னும் 4, 5. பேர் மரணமாகிகிடக்க சற்றுநேரத்துக்கெல்லாம் சாராயக்கடை வாசலில் ஒப்பாரி ஓலமிட்டு கூக்குரலெழுப்பி அழுதார்கள் மனைவி மக்களும், தாய் தந்தைகளும்.போலீஸ் கடையைச்சுற்றிலும் தேடியபோது சாராயக்கடை முதலாளி எஸ்கேப்.


சந்திரனை நம்பி வந்த மனைவி, பெற்றெடுத்த பிள்ளைகள், அவனுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை அவர்களின் மனநிலையை ஒருபோதும் அவன் உணர்ந்துக்கொண்டதுமில்லை.
தினமும் குடித்து குடும்பத்தின் நிம்மதி, மானம், அமைதி, அனைத்தையும் கெடுத்துக்கொண்டிருந்த சந்திரன், இன்று அதே குடியால் தன்னையே இழந்தான் அவனைப்பொருத்தமட்டில் அவன் சுகம் அவனுக்கு பெரிதாகிப்போக போதையிலே மாண்டுபோனான்.
.
தன் தந்தையின் மரணம் சிவாவுக்கு அதிர்ச்சியைத்தரவில்லை சிறுவயதிலிருந்தே தந்தையின் குணநலத்தை அறிந்துவந்ததால் அவன் இல்லையென்றாலும் தம்மால் வாழமுடியும் என்ற நிலைக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டவனாய் அழுதுகொண்டிருந்த அன்னையையும் தங்கையும் ஒருசேர அணைத்து அம்மா அழாதேமா அழாதே,
இத்தனைநாள் நீ பட்ட கஷ்டம்போதும் எழுந்திரி இனி நான் உன்னை பாத்துப்பேன் வாம்மா வா என அழைத்தான்.


புவனா கீழே அலங்கோலமாக கிடந்த சந்திரனைப்பார்த்து பெற்றபிள்ளை உனக்காக ஒருசொட்டு கண்ணீர்விடக்கூட தயாரகயில்லை நீ செய்த பாவம். நான் பொறுத்தேன் உன்னை மனதார ஏற்றதால். ஆனால் காலத்தை பார்த்தாயா நீசெய்த வினை உன்னையே அழித்துவிட்டது
நீயும் அழிந்து எங்கள் மனநிம்மதியையும் அழித்துசென்றுவிட்டாயே!


மதுவும், சூதும், உன்னை மதிமயங்கசெய்து மரணத்தின் பிடியில் தள்ளிவிட்டது. மதிகெட்ட உன்னைப்போன்றவர்களால் மரணத்திற்கே அவமானமும் வந்துவிடுகிறது
மதிக்கவேண்டிய பெற்ற பிள்ளைகளே மிதிக்கின்ற அளவுக்கு கொண்டுசென்றுவிட்டதே இந்த உன்னுடைய இழிவான செயல் என அவள் நினைதுக்கொண்டிருக்கையில்.


கடைசி காரியத்தைக்கூட கள்ளுக்கடை வாசலியே செய்துவிடுமா என்றமகனின் வார்த்தையில் தெரிந்த வீரியத்தை உணர்ந்தவளாய்,
தன் கழுத்தில் தொங்கிய நிறம் மாறிப்போன மஞ்சள்கயிற்றை கழட்டி சந்திரனின் மார்மீதுவைத்துவிட்டு தன் இருகைகளிலும் தம்பிள்ளைகளை பிடித்தபடி திரும்பிப்பார்க்காமல் நடந்தாள்..


[டிஸ்கி] கதை எழுதிப்பார்ப்போமே என்று கதையென நானே நினைத்து எழுதியுள்ளேன் இதுக்குபேர் கதையின்னா கதைகளுக்கு பெயர் என்னவாம் என யாரோ முனுமுனுப்பது தெள்ளதெளிவாய் கேட்கிறது.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

31 கருத்துகள்:

 1. கதையும் கதையின் கருவும் நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள் தங்கச்சி.

  பதிலளிநீக்கு
 2. குடி குடியை கெடுக்கும் சொல்லுறீங்க

  கதை ரொம்ப நல்லா இருக்கு

  பதிலளிநீக்கு
 3. கதை நன்றாகவே இருக்கிறது. இனிமே நான் கதை வுட முடியாது போல :))

  பதிலளிநீக்கு
 4. //S.A. நவாஸுதீன்
  3 பிப்ரவரி, 2010 3:26 pm
  கதையும் கதையின் கருவும் நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள் தங்கச்சி.//

  அதே அதே....

  பதிலளிநீக்கு
 5. எல்லோரும் ஓடியாங்க கத கதை அருமை

  கவிதையே பார்த்த இந்த வலைத்தளம் இன்று ஒரு குடி குடியை கெடுக்கும் கதை சொல்லிருக்கு... அருமை அருமை.. தொடருங்க‌

  பதிலளிநீக்கு
 6. நானும் கவிதையோன்னு நினைத்து படித்து வந்தேன். கதை நல்லா இருக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 7. கதை ரொம்ப நல்லாயிருக்கு மலிக்கா.வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 8. ஆழமான கருத்து சொல்லியிருக்கீங்க சகோ இன்னும் இதுமாதிரியான சென்மங்கள் இருந்துட்டுத்தான் இருக்காங்க புவனா போலவே நிறைய புவனாக்கள் வாழ்க்கையை இழந்து தவிச்சுட்டு இருக்காங்க கண்முன்னாடியே பாத்திருக்கேன்

  கவிதைக்கடுத்து கதாசிரியரும் ஆயாச்சு வாழ்த்துகள் சகோ.... சில பிழைத்திருத்தம் இருக்கு ....

  பதிலளிநீக்கு
 9. அருமையான கருத்துள்ள கதை. கவித்துவம் உண்டு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. //அன்னைமுகத்தில் கவலைகோடு ஓடியத்தையறிந்த சிவா, யம்மா சும்மாக்கேட்டேன்ம்மா இன்னும் கொஞ்சநாளுளபாரு உனக்கு நான் சம்பாரிச்சுத்தாரேன் எனசொன்ன மகனைகட்டிக்கொண்டு அழுதாள்.//

  இந்த இடம் சூப்பர் மலிக்கா..

  //கதை எழுதிப்பார்ப்போமே என்று கதையென நானே நினைத்து எழுதியுள்ளேன் இதுக்குபேர் கதையின்னா கதைகளுக்கு பெயர் என்னவாம் என யாரோ முனுமுனுப்பது தெள்ளதெளிவாய் கேட்கிறது.
  //

  இதுவும் கதைதான். ஆனா வழக்குமொழியில் எழுதியிருந்தால் யதார்த்தம் வெளிப்பட்டிருக்கும். நல்ல முயற்சி மலிக்கா. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. கதையும் கருத்துக்களும் மிக அருமை. நல்ல முயற்ச்சி. கோர்வையாக உள்ளது. நன்றி.

  பதிலளிநீக்கு
 12. நல்ல கருத்து மலிக்கா.

  முதல் முயற்சி என்கிறீர்கள். அருமை.
  தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 13. பிரியமுள்ள தங்கச்சிக்கு...

  நீங்க நல்லா கவிதை எழுதுவீங்கங்கறது எல்லாருக்கும் தெரியும்!

  இப்படி சிறுகதையும் நல்லா எழுதுறதையும் பாக்கறப்ப வியந்து போகிறேன்.

  "அம்மா... அழாதேமா... அழாதே...
  இத்தனைநாள் நீ பட்ட கஷ்டம்போதும். எழுந்திரி.. இனி நான் உன்னை பாத்துப்பேன்.."

  - படிக்கறப்ப அழுகை வந்தது...

  "மதுவும், சூதும், உன்னை மதிமயங்கசெய்து மரணத்தின் பிடியில் தள்ளிவிட்டது. மதிகெட்ட உன்னைப்போன்றவர்களால் மரணத்திற்கே அவமானமும் வந்துவிடுகிறது"

  - கதையிலும் கவிதை சொல்லி இருந்தீங்க!

  என்றும் மாறா அன்புடன்...
  திருச்சி சையது.

  பதிலளிநீக்கு
 14. கதை மிக அருமையாய் வருதே மலிக்கா பாராட்டுக்கள் மா

  பதிலளிநீக்கு
 15. நன்றி மலிக்கா பொலிஸ் அது சிலோன் தமிழ் என்பதால் அப்படியே விட்டுவிட்டேன் மலிக்கா

  பதிலளிநீக்கு
 16. S.A. நவாஸுதீன் கூறியது...
  கதையும் கதையின் கருவும் நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள் தங்கச்சி.

  மிகுந்த மகிழ்ச்சி நவாஸண்ணா..

  பதிலளிநீக்கு
 17. /S Maharajan கூறியது...
  குடி குடியை கெடுக்கும் சொல்லுறீங்க /

  அதேதான் மஹா

  /கதை ரொம்ப நல்லா இருக்கு/
  மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 18. /சைவகொத்துப்பரோட்டா கூறியது...
  கதை நன்றாகவே இருக்கிறது. இனிமே நான் கதை வுட முடியாது போல :))/

  அவ்ளோ நல்லாவாயிருக்கு:]

  மிக்க நன்றி பரோட்டா.. அச்சோ சைவகொத்துப்பரோட்டா..

  பதிலளிநீக்கு
 19. SUFFIX கூறியது...
  //S.A. நவாஸுதீன்
  3 பிப்ரவரி, 2010 3:26 pm
  கதையும் கதையின் கருவும் நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள் தங்கச்சி.//

  அதே அதே...

  ஓகோ அப்படியா நன்றி ஷஃபியண்ணா...

  பதிலளிநீக்கு
 20. /அபுஅஃப்ஸர் கூறியது...
  எல்லோரும் ஓடியாங்க கத கதை அருமை/

  ஓடியாந்து கதைக்கு காலில்லை என்று சொல்லிடப்போறாங்க அபு..

  /கவிதையே பார்த்த இந்த வலைத்தளம் இன்று ஒரு குடி குடியை கெடுக்கும் கதை சொல்லிருக்கு... அருமை அருமை.. தொடருங்க‌/

  ஆமா அபு இனி இடையிடையே கதையும் எழுதலாமுன்னு இருக்கேன்
  எல்லாம் நம்ம தோழமைகள்தரும் ஊக்கம்தான் மிகுந்த மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 21. /jailani கூறியது...
  நானும் கவிதையோன்னு நினைத்து படித்து வந்தேன். கதை நல்லா இருக்கு வாழ்த்துக்கள்/

  அச்சோ ஏமாந்தாச்சா இனி அடிக்கடி இதபோல வரமுன்னு நினைக்கிறேன்
  நன்றி ஜெய்லானி..

  பதிலளிநீக்கு
 22. /Mrs.Menagasathia கூறியது...
  கதை ரொம்ப நல்லாயிருக்கு மலிக்கா.வாழ்த்துக்கள்!!/

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மேனகா சத்தியா..

  பதிலளிநீக்கு
 23. /பிரியமுடன்...வசந்த் கூறியது...
  ஆழமான கருத்து சொல்லியிருக்கீங்க சகோ இன்னும் இதுமாதிரியான சென்மங்கள் இருந்துட்டுத்தான் இருக்காங்க புவனா போலவே நிறைய புவனாக்கள் வாழ்க்கையை இழந்து தவிச்சுட்டு இருக்காங்க கண்முன்னாடியே பாத்திருக்கேன்/

  ஆமா சகோ. எத்தனையோ பேர் இப்படி ஆனா பெரியயிடங்களிலும் வீட்டுக்குள்ளே நடக்குது வெளியில் தெரியாமா படித்தவர்களே இப்படி செய்யும்போதுதான் மிகவும் வருத்தமாக இருக்கு

  /கவிதைக்கடுத்து கதாசிரியரும் ஆயாச்சு வாழ்த்துகள் சகோ.... சில பிழைத்திருத்தம் இருக்கு/

  அச்சச்சோ அப்படியா அதெல்லாமில்லை சகோ உங்களைவிடவா கதாசிரியரே
  மிக்க நன்றி ப்ரியமான சகோதரா!!!

  திருத்திட்டேன் சகோ.

  பதிலளிநீக்கு
 24. /நசரேயன் கூறியது...
  ரவுடி ஆகிட்டீங்க/

  கதையெழிதிட்டா ரவுடியா?
  அப்போ நானும் ரவுடிதான்.

  ஹை அப்படியெல்லாம் சொல்லமாட்டேன்


  /Chitra கூறியது...
  அருமையான கருத்துள்ள கதை. கவித்துவம் உண்டு. வாழ்த்துக்கள்/

  மிகுந்த மகிழ்ச்சி தோழி சித்ரா. மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 25. புலவன் புலிகேசி கூறியது...
  //அன்னைமுகத்தில் கவலைகோடு ஓடியத்தையறிந்த சிவா, யம்மா சும்மாக்கேட்டேன்ம்மா இன்னும் கொஞ்சநாளுளபாரு உனக்கு நான் சம்பாரிச்சுத்தாரேன் எனசொன்ன மகனைகட்டிக்கொண்டு அழுதாள்.//

  இந்த இடம் சூப்பர் மலிக்கா../


  மிக்க நன்றி தோழா

  //கதை எழுதிப்பார்ப்போமே என்று கதையென நானே நினைத்து எழுதியுள்ளேன் இதுக்குபேர் கதையின்னா கதைகளுக்கு பெயர் என்னவாம் என யாரோ முனுமுனுப்பது தெள்ளதெளிவாய் கேட்கிறது.
  //

  இதுவும் கதைதான். ஆனா வழக்குமொழியில் எழுதியிருந்தால் யதார்த்தம் வெளிப்பட்டிருக்கும். நல்ல முயற்சி மலிக்கா. வாழ்த்துக்கள்/

  ஓ அப்படியா, இனி எழுத முயற்ச்சிக்கிறேன் முருகா. மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 26. கண்ணகி கூறியது...
  கதை நல்லா இருக்கு../

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கண்ணகி..


  //பித்தனின் வாக்கு கூறியது...
  கதையும் கருத்துக்களும் மிக அருமை. நல்ல முயற்ச்சி. கோர்வையாக உள்ளது. நன்றி.//

  மிக்க நன்றி.. திவாகர் சார்..

  பதிலளிநீக்கு
 27. /ராமலக்ஷ்மி கூறியது...
  நல்ல கருத்து மலிக்கா.

  முதல் முயற்சி என்கிறீர்கள். அருமை.
  தொடருங்கள்/

  வாங்க மேடம் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 28. மலர்வனம் கூறியது...
  பிரியமுள்ள தங்கச்சிக்கு...

  நீங்க நல்லா கவிதை எழுதுவீங்கங்கறது எல்லாருக்கும் தெரியும்!

  இப்படி சிறுகதையும் நல்லா எழுதுறதையும் பாக்கறப்ப வியந்து போகிறேன்.

  "அம்மா... அழாதேமா... அழாதே...
  இத்தனைநாள் நீ பட்ட கஷ்டம்போதும். எழுந்திரி.. இனி நான் உன்னை பாத்துப்பேன்.."

  - படிக்கறப்ப அழுகை வந்தது...

  "மதுவும், சூதும், உன்னை மதிமயங்கசெய்து மரணத்தின் பிடியில் தள்ளிவிட்டது. மதிகெட்ட உன்னைப்போன்றவர்களால் மரணத்திற்கே அவமானமும் வந்துவிடுகிறது"

  - கதையிலும் கவிதை சொல்லி இருந்தீங்க!

  என்றும் மாறா அன்புடன்...
  திருச்சி சையது.


  மிகுந்த சந்தோஷம். அதுவும் இரட்டிப்பு சந்தோஷம் ஏனென்றால் இன்று தாங்கள் தமிழிலேயே கருத்துக்கள் தந்தது மிக அருமை.

  ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி மிக்க நன்றி சையதண்ணா..

  பதிலளிநீக்கு
 29. thenammailakshmanan கூறியது...
  கதை மிக அருமையாய் வருதே மலிக்கா பாராட்டுக்கள் மா.

  தாங்களி பாராட்டுக்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்..  /thenammailakshmanan கூறியது...
  நன்றி மலிக்கா பொலிஸ் அது சிலோன் தமிழ் என்பதால் அப்படியே விட்டுவிட்டேன் மலிக்கா/

  ஓ அப்படியா,, நன்றிமா..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது