நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கடலும் படகும்

கடற்கரை யோரம்
காலை நேரம்
அலை கடல் என்னை
அன்பாய் அழைக்க
ஆசையாய் ஓடினேன்
ஓரமாய் ஒரு படகு
ஒய்யாரமாய் ஆடிநிற்க

அதிலேர ஆசையாயென
கடல் கேட்க
ஆமாமென்று நானும்
தலையசைக்க
அலைகள் தள்ளிவிட
படகும் எனதருகே வர

அதிலேறி அமர்ந்தும்
அலைகள் அசைந்தாட
என்மனமும் சேர்ந்தாட
படகும் இசைந்தாட
ஆழ்கடலை நோக்கி
அதிவேகமாய்ச் செல்ல

சற்று நேரத்தில்
சடசடவென
படகைச் சுற்றி
சுரா மீன்கள்
சூழ்ந்துகொள்ள

அடியிலிருந்து ஏதோ எழ
எனதருகில் வந்துவிழ
அதிர்ந்தெழுந்த வேளையில்
அழகிய ஆன்மா ஒன்று
என்னிடம்
அன்பாய் பேசியது

வா என்றழைத்ததும்
வந்துவிட்டாய்
வந்ததில் தவறில்லை
உனக்கு வாழ்க்கையின்
விபரம் விளங்கவில்லை

ஆழ்கடல் போன்றதுதான்
இவ்வுலகம்
அதில்அசையும்
இப் படகு போன்றதுதான்
உன் வாழ்வும்

கடலலைகளில் ஏற்படும்
ஏற்ற இரக்கங்கள்
உன் வாழ்வின்
இன்ப துன்பங்கள்

உலகக் கடலில்
நீராடிப் போராட
உனக்கு வேண்டும்
இரு துடுப்பு

இதோ
தன்னம்பிக்கையென்னும்
தைரியத்துடுப்பை தந்துவிட்டேன்
இறைநம்பிக்கையென்னும்
இன்னொரு துடுப்பை
உனக்குளே உருவாக்கு

என்று சொல்லி
இருந்த இடத்திலிருந்து
இனிமையாய்
மறைந்த சிலநொடியில்
மாபெரும் அலையொன்று
எனைநோக்கி
மார்த்தட்டி எழுந்துவர

தன்னம்பிக்கை ஒருகையில்
இறைநம்பிக்கை மறுகையில்
இரு துடுப்புகளாய்
நான் மாற்றி
இழுத்துச் செலுத்தினேன்
வேகமாய் என்படகை

அலையடித்து அதன் ஈரம்
என்கால்களைத் தழுவிய
அந் நேரம்
அதிர்ந்து கண்விழித்தால்

நான் கடற்கரையிலும்
என்மனம் படகிலும்..

இந்த கவிதை இம்மாத கடலும் படகும் என்ற தலைப்பிற்கு
தமிழ்தேர் இதழுக்காக நான்எழுதி வெளியான கவிதை

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

33 கருத்துகள்:

  1. சாரதா விஜயன்31 ஜனவரி, 2010 அன்று 9:04 AM

    /வா
    என்றழைத்ததும்
    வந்துவிட்டாய்
    வந்ததில் தவறில்லை
    உனக்கு
    வாழ்க்கையின்
    விபரம்
    விளங்கவில்லை/

    எப்படிடி மகளே உனக்குமட்டும் வார்த்தைகள் கோத்துநிக்கின்றன அருமையோ அருமை உன்னால் தமிழ்தேருக்கு பெருமையோ பெருமை..

    மெயில் கண்டாயா? இன்று உனக்கு அனுப்பியமெயில் ரிட்டன் வருது எனக்கு. அப்பா ரொம்ப கேட்டார் உன்னை.

    பதிலளிநீக்கு
  2. வார்த்தைகளை கோர்த்தெடுத்து பின்னியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான எழுத்து நடை, எடுத்துரைத்த கருத்துக்கள் அற்புதம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. //தன்னம்பிக்கை
    ஒருகையில்
    இறைநம்பிக்கை
    மறுகையில்
    இரு துடுப்புகளாய்
    நான் மாற்றி
    இழுத்துச்
    செலுத்தினேன்
    வேகமாய்
    என் படகை//

    அருமை. கனவென்றாலும்

    //என் மனம்
    படகிலும்..//

    இருக்கையில் இல்லை ஏதும் கவலை. நனவிலும் இந்த வேகம் குறையாமல் செலுத்திடலாம் வாழ்க்கைப் படகை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. அழகான ஒரு கதை கவிதையாய் நீரோடையில் மிதக்கிறது. ரொம்ப பிடிச்சிருக்கு தங்கச்சி.

    புது டெம்ப்ளேட் நல்லா இருக்குதுமா.

    பதிலளிநீக்கு
  6. கவிதை ரொம்ப அருமை ...

    தன்னம்பிக்கையும் இறை நம்பிக்கையும் இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்பதை ஆணித் தரமாக சொல்லுதே உங்க கவிதை ...

    நல்ல அருமையான கவிதை

    ஒவ்வொரு வரியிலும் உணர்வுகள் பேசுதே ...

    பதிலளிநீக்கு
  7. வயதில் நீங்கள் சிறியவரானாலும் இறைபக்தியில் பெரியர்களான எங்களை மிஞ்சிவிட்டீர்கள். உங்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. கடற்கரை யோரம்
    காலை நேரம்
    அலை கடல்
    என்னை
    அன்பாய் அழைக்க
    ஆசையாய்
    ஓடினேன்


    ஓரமாய்
    ஒரு படகு
    ஒய்யாரமாய்
    ஆடிநிற்க/

    வரிகளில் விளையாடியிருக்கீங்க சூஊஊஊஊஊஊஊஉப்பர் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. அருமையான வரிகள்.

    இறை நம்பிக்கை, தன்னம்பிக்கை இரண்டுமில்லாமல் வாழ்க்கை இல்லை.

    பதிலளிநீக்கு
  10. நல்ல வார்த்தை தேர்வு.. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. அருமையாக எழுதியுள்ளீர்கள்

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  12. ///அலை கடல்
    என்னை
    அன்பாய் அழைக்க//
    ///நான்
    கடற்கரையிலும்
    என் மனம்
    படகிலும்..///
    அட நல்லா இருக்கே...

    பதிலளிநீக்கு
  13. பொதுவா எனக்கு கவிதை படிக்க பொறுமையிருக்காது.. ஆனா பொறுமையா படிச்சாதான் அதோட அர்த்தம் விளங்குது.. ரொம்ப ரொம்ப அருமை சகோதரி. நிச்சயம் உங்கள் பிள்ளைகள் குடுத்து வைத்தவர்கள். மாஷா அல்லாஹ்

    பதிலளிநீக்கு
  14. மல்லிக்கா...கடலில் படகு போலவே வார்த்தைகளிம் அமைதியாய் அழகாய் கோர்த்திருக்கு சகோதரி.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. நல்ல எழுத்து நடை..

    வாழ்த்துக்கள்..

    நன்றி..

    பதிலளிநீக்கு
  16. பிரமாதமான கவிதை. மனம் படகில் என முடித்தவிதம் அருமை.

    பதிலளிநீக்கு
  17. உலகக் கடலில்
    நீராடிப் போராட
    உனக்கு வேண்டும்
    இரு துடுப்பு.

    நிச்சயமாக உண்மை. அழகிய வரிகள் கொடுத்து சிந்திக்கவைத்த தோழியே மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  18. மலிக்கா, அழகான கவிதை. அலையடித்துக் கொண்டிருந்த என் மனது இதைப் படித்து கொஞ்சம் சாந்தமாயிருக்குது. நன்றி.

    பதிலளிநீக்கு
  19. என்னையும் அப்படியே படகில் கூப்பிட்டு சென்று விட்டீர்கள்.

    கவிதை + படம் அருமை. மனதுக்கு இதமாய் இருக்கு, மலிக்கா.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. என்னனு சொல்றதுங்க... சில பேரு எழுதுற கவிதை உண்மையா புரியவே பலநாட்கள் கூட ஆகும்... பத்து வாட்டி படிச்சா தான் புரியும்.... உங்களோட கவித ஏதோ கத சொல்ற மாத்ரி எழிமையா இருக்கு.... பெரிய ஆளுதான் நீங்க....

    பதிலளிநீக்கு
  21. //எப்படிடி மகளே உனக்குமட்டும் வார்த்தைகள் கோத்துநிக்கின்றன அருமையோ அருமை உன்னால் தமிழ்தேருக்கு பெருமையோ பெருமை..//

    எல்லாம் இறைவனின் செயல்தாம்மா
    முகம் தெரியவில்லையென்றாலும் என்னை மகள்போல் அனுகும் உங்களைப்போன்றவர்களை இணைத்துதந்த இறைவனுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது சரிதானேமா..

    /மெயில் கண்டாயா? இன்று உனக்கு அனுப்பியமெயில் ரிட்டன் வருது எனக்கு. அப்பா ரொம்ப கேட்டார் உன்னை//

    அதுமா நிறைய மெயில் சேர்ந்துவிட்டதால் ரிட்டன் ஆகிருக்கு இப்போ கிளியராச்சிம்மா.

    நானும் அப்பாவை மிக மிக கேட்டதாக சொல்லவும்..உங்கள் அன்புக்கு நன்றி சொல்லவிருப்பமில்லைம்மா.. ஆசிர்வதியுங்கள்..

    பதிலளிநீக்கு
  22. /புலவன் புலிகேசி கூறியது...
    வார்த்தைகளை கோர்த்தெடுத்து பின்னியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்/

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி புலவா முருகவேல்..

    பதிலளிநீக்கு
  23. /தன்னம்பிக்கையும் இறை நம்பிக்கையும் இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்பதை ஆணித் தரமாக சொல்லுதே உங்க கவிதை ...

    நல்ல அருமையான கவிதை /

    ஸ்டார்ஜன் சொன்ன அத்தனையும் உண்மை. அதே ஆமோதிக்கிறேன் வாழ்த்த்துக்கள் மலிக்கா

    பதிலளிநீக்கு
  24. //தன்னம்பிக்கை
    ஒருகையில்
    இறைநம்பிக்கை
    மறுகையில்
    இரு துடுப்புகளாய்
    நான் மாற்றி
    இழுத்துச்
    செலுத்தினேன்
    வேகமாய்
    என் படகை//

    இது எனக்கு மிகப் பிடித்தது மலிக்கா அருமையா இருக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  25. ஆழ்கடல்
    போன்றதுதான்
    இவ்வுலகம்
    அதில்அசையும்
    இப் படகு
    போன்றதுதான்
    வாழ்வும்


    கடலலைகளில்
    ஏற்படும்
    ஏற்ற இரக்கங்கள்
    வாழ்வின்
    இன்ப துன்பங்கள்


    உலகக் கடலில்
    நீராடிப் போராட
    உனக்கு வேண்டும்
    இரு துடுப்பு


    இதோ
    தன்னம்பிக்கையென்னும்
    தைரியத் துடுப்பை
    தந்துவிட்டேன்
    இறைநம்பிக்கையென்னும்
    இன்னொரு
    துடுப்பை
    உனக்குளே உருவாக்கு



    தன்னம்பிக்கை
    ஒருகையில்
    இறைநம்பிக்கை
    மறுகையில்
    இரு துடுப்புகளாய்
    நான் மாற்றி
    இழுத்துச்
    செலுத்தினேன்
    வேகமாய்
    என் படகை


    Thathuvarthamana Kavithai. Ennamoo nalla visayam solkirathu unkal kavithaikal.

    பதிலளிநீக்கு
  26. Ini Kadalaiyum... Patakaiym parkumboothu unkalin intha kavithai ninivukku varum...

    பதிலளிநீக்கு
  27. தன்னம்பிக்கை
    ஒருகையில்
    இறைநம்பிக்கை
    மறுகையில்
    இரு துடுப்புகளாய்
    நான் மாற்றி
    இழுத்துச்
    செலுத்தினேன்
    வேகமாய்
    என் படகை


    ................... உண்மையில், இந்த துடுப்புக்கள் இல்லாமல்தான் பலரின் படகுகள் ஆட்டம் காண்கின்றன.

    பதிலளிநீக்கு
  28. Chitra
    1 பிப்ரவரி, 2010 11:59 pm தன்னம்பிக்கை
    ஒருகையில்
    இறைநம்பிக்கை
    மறுகையில்
    இரு துடுப்புகளாய்
    நான் மாற்றி
    இழுத்துச்
    செலுத்தினேன்
    வேகமாய்
    என் படகை


    ................... உண்மையில், இந்த துடுப்புக்கள் இல்லாமல்தான் பலரின் படகுகள் ஆட்டம் காண்கின்றன.


    Correct opinion Chitra Madam!

    பதிலளிநீக்கு
  29. /SUFFIX கூறியது...
    அருமையான எழுத்து நடை, எடுத்துரைத்த கருத்துக்கள் அற்புதம். வாழ்த்துக்கள்./

    மிகுந்த மகிழ்ச்சி ஷஃபியண்ணா மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  30. ராமலக்ஷ்மி கூறியது...
    //தன்னம்பிக்கை
    ஒருகையில்
    இறைநம்பிக்கை
    மறுகையில்
    இரு துடுப்புகளாய்
    நான் மாற்றி
    இழுத்துச்
    செலுத்தினேன்
    வேகமாய்
    என் படகை//

    அருமை. கனவென்றாலும்

    //என் மனம்
    படகிலும்..//

    இருக்கையில் இல்லை ஏதும் கவலை. நனவிலும் இந்த வேகம் குறையாமல் செலுத்திடலாம் வாழ்க்கைப் படகை! வாழ்த்துக்கள்!/

    நிச்சயமாக மேடம் நம்பிக்கைகுறையாமல் எதிர்நோக்குவோம்..

    மிக்க நன்றி மேடம்..

    பதிலளிநீக்கு
  31. /S.A. நவாஸுதீன் கூறியது...
    அழகான ஒரு கதை கவிதையாய் நீரோடையில் மிதக்கிறது. ரொம்ப பிடிச்சிருக்கு தங்கச்சி./

    அதேதான் அண்ணா கதையாக எழுதயிருந்தேன் கவிதையாக்கமுடியுமான்னு பார்த்தேன்
    அதான் இது ரொம்ப மகிழ்ச்சிண்ணா

    புது டெம்ப்ளேட் நல்லா இருக்குதுமா..//

    எத்தனைபோராட்டத்திற்குப்பிறகு அப்படி இல்லண்ணா..

    பதிலளிநீக்கு
  32. Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
    கவிதை ரொம்ப அருமை ...

    தன்னம்பிக்கையும் இறை நம்பிக்கையும் இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்பதை ஆணித் தரமாக சொல்லுதே உங்க கவிதை ...

    நல்ல அருமையான கவிதை

    ஒவ்வொரு வரியிலும் உணர்வுகள் பேசுதே .../

    ரொம்ப சந்தோஷம் ஸ்டார்ஜன். மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  33. நிலவன் கூறியது...
    வயதில் நீங்கள் சிறியவரானாலும் இறைபக்தியில் பெரியர்களான எங்களை மிஞ்சிவிட்டீர்கள். உங்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள்/

    மிக்க நன்றி நிலவன் சார் பாப்பா நல்லாயிருக்காளா..




    /சல்மான் கூறியது...
    கடற்கரை யோரம்
    காலை நேரம்
    அலை கடல்
    என்னை
    அன்பாய் அழைக்க
    ஆசையாய்
    ஓடினேன்


    ஓரமாய்
    ஒரு படகு
    ஒய்யாரமாய்
    ஆடிநிற்க/

    வரிகளில் விளையாடியிருக்கீங்க சூஊஊஊஊஊஊஊஉப்பர் வாழ்த்துக்கள்/

    வாங்க சல்மான் மிக்கநன்றி,,,....

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது