நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வீரம் வென்றது

ஐந்தறிவு ஜீவன்
அரண்டு துடிக்க

ஆறறிவு ஜீவன்
அடக்க நினைக்க

கையிரண்டைக் கொண்டு
கொம்பிரண்டைப் பிடிக்க

கோபம்கொண்டு
கொதித்தெழுந்து
குடல்தனை சரிக்க


குற்றுயிராய் குனங்கி
உயிர்தனை வதைக்க
வீரம் வென்றது
ஐந்தறிவைக் கொண்டு.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

22 கருத்துகள்:

  1. நல்ல கவிதை மலிக்கா. மிகவும் அருமை. அந்த மாட்டின் கீழே விழுந்து கிடப்பவர், அந்த பகுதியின் பிரபல மாடு அடக்குவபர். இந்த வார ஆனந்த விகடனில் அவர் மனைவின் பேட்டி வந்துள்ளது. நன்றி. சமையலறை பாகம் 2 படித்துவிட்டு என்னைத் திட்டவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. உண்மை உண்மை.

    கவிதையிலும் வீரம் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. ஜல்லி கட்டை எதிர்க்கும் ஒரு கவிதை...ரொம்ப நல்லா இருக்கு.....வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  4. அருமை மலிக்கா!! ஐந்தறிவுதான் வெல்லும் இவ்விளையாட்டுக்களில்!!

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு கவிதை மனிதர்கள் வீரத்தை காட்டுகிறேனெனச்சொல்லி தன்னுயிரையும் துறக்க தயாராகிவிடுகிறார்கள். தன் குடும்பத்தை மறந்த நிலையில்..

    பதிலளிநீக்கு
  6. உண்மை. உண்மை..உண்மை உண்மை....

    சொன்னாலும் புரியமருக்கும் மனிதராகிவிட்டார்களே என்ன செய்ய..

    வேதனையுடன்

    பதிலளிநீக்கு
  7. ////வீரம் வென்றது
    ஐந்தறிவைக் கொண்டு.////

    வாவ். நச் வரிகள்மா. மீண்டும் ஒரு அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  8. அம்மாமா சூப்பர் அழகு அர்தமுள்ள கவி. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. இதுக்கு பேர்தான் வீர விளையாட்டாம் (இது ஒரு வகை தற்கொலையே, சாவு தெரிந்தும் இறங்குவது), பெற்றவர்களை காப்பாற்றுவது யார்?

    பதிலளிநீக்கு
  10. mikavum arumai arumai

    ithaivida veendumaa oru kavithai

    நல்லாயிருக்குங்க

    பதிலளிநீக்கு
  11. அவசியான கருத்து அறிந்துக்கொண்டால் நலமே

    நட்புடன் மதி

    பதிலளிநீக்கு
  12. வீரம் வென்றது
    (ஐந்தறிவைக் கொண்டு.)என்று தலைப்பு இட்டால் இன்னுமொரு அவார்டே கிடைத்திருக்கும்.
    சூப்பர்.........
    ரொம்ப நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  13. சும்மா நச்னு இருக்கு. இந்த கொடுமைகள் தடுக்கப் பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  14. Enai kiramathu Jallikattai parkumpoothellam entha kavithai ninaivukku varum...

    Jalikattil lavakamai mattin koompai pidipathaibool penavaikondu lavakamana varthaikali pidikkireeral...

    பதிலளிநீக்கு
  15. மிக தெளிவாக சொல்லியுள்ளீர்கள்

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  16. azaku malikka madeam solla varththaiye illai mathi

    பதிலளிநீக்கு
  17. வாங்க மதி வாங்க கரெக்டா வந்திட்டீங்க நன்றிப்பா

    பதிலளிநீக்கு
  18. /நட்புடன் ஜமால் கூறியது...
    காட்சி கண் முன்னே ... :(//

    மிக்க நன்றி ஜலால்காக்கா


    Chitra கூறியது...
    true!/

    மிக்க நன்றி சித்ரா

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது