நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஏன் விடிந்தாய்!


அறியாத வயது
ஆசைகள்
நிறைம்பிய மனது


சிறகுகளில்லாமல்
இறக்கைகட்டிப்
பறந்தது
இரவில்


எப்போது விடியும்
எப்போது
விடியுமென


விடிய விடிய
விழித்திருந்தன
விழிகள்
தந்தையின்
வரவுக்காக


பொழுதும் புலர்ந்தது
விழியும் ஒளிர்ந்தது
வந்தது தந்தையல்ல


தந்தை
தவறிவிட்டாரென்று
துயரத் தந்தி


கதறிக் கதறி
அழுதது கண்கள்
கருமணிகள்
கழண்டு
விழுமளவிற்க்கு


பதறித் துடியாய்
துடித்தது மனது
பொழுது
ஏன் விடிந்ததென்று........




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

16 கருத்துகள்:

  1. இலகுவாக தொடங்கி கடைசியில் திடும் என தாக்கும் சோகம்.

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப சோகமான கவிதை, படிப்பவருக்கும் சோகத்தை ஏற்படுத்தும் வரிகள்.

    பதிலளிநீக்கு
  3. பதறித் துடியாய்
    துடித்தது மனது
    பொழுது
    ஏன் விடிந்ததென்று........
    .............மனதை கலங்க வைத்த கவிதை.

    பதிலளிநீக்கு
  4. Entha kavithaiyai padithu

    கதறிக் கதறி
    அழுதது கண்கள்
    கருமணிகள்
    கழண்டு
    விழுமளவிற்கு...

    பதிலளிநீக்கு
  5. மனச ரொம்ப கஷ்டப் படுத்ரீன்களே...நிறைய வலிகளோடு இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  6. அப்படியே காட்ச்சியை வரிகளில் கொண்டு வந்து இருக்கீங்க வலிகளோடு

    பதிலளிநீக்கு
  7. /மலர்வனம் கூறியது...
    Entha kavithaiyai padithu

    கதறிக் கதறி
    அழுதது கண்கள்
    கருமணிகள்
    கழண்டு
    விழுமளவிற்கு/

    கவிதையை படித்து வடித்த கண்ணீரல்ல சகோதரரே.
    நிஜத்தில் அனுபவித்த வலியின் வேதனை பசுமரத்து ஆணியாய் மனத்தில் பதிந்தது இன்னும் வலியுடன்..

    பதிலளிநீக்கு
  8. /சைவகொத்துப்பரோட்டா கூறியது...
    இலகுவாக தொடங்கி கடைசியில் திடும் என தாக்கும் சோகம்/

    சோகம் தாங்கியதால் தான் இக்கவிதையே வந்தது.

    நன்றி பரோட்டோ..

    பதிலளிநீக்கு
  9. /S.A. நவாஸுதீன் கூறியது...
    ரொம்ப சோகமான கவிதை, படிப்பவருக்கும் சோகத்தை ஏற்படுத்தும் வரிகள்./

    என் சோகம் என்னோடு போகட்டுமண்ணா. ஏதோ தோனியதை எழுதிவிட்டேண்ணா..




    jailani கூறியது...
    first ஓட்டு போட்டோம்ல./

    போட்டாச்சா நன்றி ஜெய்லானி

    பதிலளிநீக்கு
  10. /Chitra கூறியது...
    பதறித் துடியாய்
    துடித்தது மனது
    பொழுது
    ஏன் விடிந்ததென்று........
    .............மனதை கலங்க வைத்த கவிதை/

    கலங்கித்தான் எழுதினேன் தோழி. நன்றி சித்ரா..

    பதிலளிநீக்கு
  11. /கமலேஷ் கூறியது...
    மனச ரொம்ப கஷ்டப் படுத்ரீன்களே...நிறைய வலிகளோடு இருக்கிறது.../

    கஷ்டப்படுத்திவிட்டேனா கமலேஷ் சிலநேரம் தாங்கமுடிவதில்லை இதுபோன்ற வேதனைகளை அதான் இப்படி கொட்டிவிடுவது..

    பதிலளிநீக்கு
  12. /நட்புடன் ஜமால் கூறியது...
    அப்படியே காட்ச்சியை வரிகளில் கொண்டு வந்து இருக்கீங்க வலிகளோடு./

    நினைவுகள் அறியா வயதானபோதும்
    நெஞ்சைவிட்டு மறையாத நிகழ்ச்சியானதால் நிழலபோல் காட்சிகள் நிழலாடுகிறது ஜமால்காக்கா.

    பதிலளிநீக்கு
  13. அன்புடன் மலிக்கா கூறியது...
    /மலர்வனம் கூறியது...
    Entha kavithaiyai padithu

    கதறிக் கதறி
    அழுதது கண்கள்
    கருமணிகள்
    கழண்டு
    விழுமளவிற்கு/

    கவிதையை படித்து வடித்த கண்ணீரல்ல சகோதரரே.
    நிஜத்தில் அனுபவித்த வலியின் வேதனை பசுமரத்து ஆணியாய் மனத்தில் பதிந்தது இன்னும் வலியுடன்..


    Sakoothari... Unkal manathil ulla valikalai eraivan lesakivaikka prayer pannukiren...

    பதிலளிநீக்கு
  14. சில இரவுகள் விடியாமலே இருக்க நிறைய பேர் விரும்புகிறோம்..:(

    பதிலளிநீக்கு
  15. /பலா பட்டறை கூறியது...
    சில இரவுகள் விடியாமலே இருக்க நிறைய பேர் விரும்புகிறோம்/

    விரும்புகிறோம் ஆனால் அது நடப்பதில்லை. இருந்தாலும் இறைவன் என்ன விரும்புகிறானோ அதில்தான் நன்மையுள்ளது சரிதானே பாலா..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது