அரையடி
ஆறடியை
வீழ்த்துகிறது
எலும்புகள்
இல்லையென்று
எதை
வேண்டுமென்றாலும்
பேசுகிறது
தன் நாவால்
பிறருக்குத் தரும்
துன்பங்கள்
தனக்கே புரிந்தும்
தடம் புரள்கிறது
பிறரை
தடுமாறவைக்கிறது
நாவிலிருந்து
நழுவி விழும்
சொல்லில்
நேர்மை தவறுகிறது
நாளொரு பேச்சி
நிமிடத்திற்கொரு
வார்த்தை –என
நன்மதிப்பை
இழந்து விடுகிறது
அரையடி நாவின்
பொய்களை நம்பி
அநியாயமாய் பலரை
அழியவைக்கிறது
நாவைக்கொண்டு
நம்பிக்கை துரோகம்
நாளும் செய்து
நன்மையை இழக்கிறது
அரையடி நாக்கே
அன்பாயிருக்க அழகாய்
பழகிக்கொள்
அனைவரின் மனதிலும்
ஆட்சி செய்திட
விழிப்பாய் இருந்துகொள்...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
கஷ்டமான விஷயம்தான்.......
பதிலளிநீக்குநாவடக்கம் ரொம்ப கஷ்டந்தான்.............
பதிலளிநீக்குஅழகாய் சொல்கிறிர்கள் மலிக்கா, நாவடக்கம் இல்லாதவர்கள் அதனாலேயெ ஒருநாள் அழிவார்கள்.
பதிலளிநீக்குயாகவரானாலும் நா காக்க
பதிலளிநீக்குநல்லா சொன்னீங்க
யாகவரானாலும் நா காக்க
பதிலளிநீக்குநல்லா சொன்னீங்க
நாவடக்கம் மிக முக்கியம்தான். நல்ல கருத்துள்ள கவிதை மலிக்கா.
பதிலளிநீக்குநாவடக்கம் மிக முக்கியம்தான். நல்ல கருத்துள்ள கவிதை மலிக்கா.
பதிலளிநீக்குஎலும்பில்லா நாக்கு என்னஎன்னவோ பண்ணுதில்ல...
பதிலளிநீக்குசிந்திக்க வைத்த பதிவு :-)
சரியா சொன்னீங்க!
பதிலளிநீக்குஎதையும் பேசும் முன் கொஞ்சம் யோசிப்பது நல்லது, அழ்கான அறிவுரை அருமயான எழுத்துக்களில் சொல்லியிருக்கீங்க. படம் செம க்யூட்!!
பதிலளிநீக்குநல்ல நாக்குங்க
பதிலளிநீக்குகலக்கலா இருக்குங்க...வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநல்ல கருத்துக்கள். நாக்கு என்ன பண்ணுங்க. அதை உபயோகப் படுத்துவனின் தவறுகளுக்கு.
பதிலளிநீக்குநன்றி.
காலத்திற்கேற்ற கவிதை.
பதிலளிநீக்குநாக்கை எங்கள் கட்டுக்குள் வைக்கவேணுமே தவிர நாக்கின் கட்டுக்குள் நாங்கள் அகப்பட்டால் அவ்ளோதான்.
பதிலளிநீக்குநேக்கு தெரிந்ததெல்லாம்
பதிலளிநீக்குநாக்கு இரு வழி பேசும்
ஒன்று இரு விழி பார்த்ததை
மற்றொன்று இரு செவி கேட்டதை,
இதில் மனம் மனமுவந்து
அலசாவிடில் நாக்கு போக்கு
நோக்கு தெரிந்ததே...
நன்றி தோழி
(துபாயில் வானலை வளர் தமிழ் நிகழ்வில் பாராட்டு
பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள்.)
நல்ல கருத்துள்ள கவிதை அக்கா.நாவடக்கம் மிக மிக முக்கியம்
பதிலளிநீக்குKannaki கூறியது...
பதிலளிநீக்குஅழகாய் சொல்கிறிர்கள் மலிக்கா, நாவடக்கம் இல்லாதவர்கள் அதனாலேயெ ஒருநாள் அழிவார்கள்.
Nalla karuthu...
Kuttees padam sirippai varavalaithathu...
எழும்புகள்
இல்லையென்று
எதை
வேண்டுமென்றாலும்
பேசுகிறது
Above lines i like it.
//எழும்புகள் //
பதிலளிநீக்குஇது எலும்புகள். யாகாவாராயினும் நாகாக்க நினைவு வருகிறது. நல்ல கவிதைங்க மலிக்கா
The tongue like a sharp knife... Kills without drawing blood = Buddha
பதிலளிநீக்குVijay
யாகவரானாலும் நா காக்க
பதிலளிநீக்குஅரையடி
பதிலளிநீக்குஆறடியை
வீழ்த்துகிறது//
உண்மைதான்
இதுவரை கண்டுபிடிக்கப்படாத
கொடுமையான ஆயுதங்களைவிடவும்
கொடுமையான ஆயுதம் நா!!
மிக சரியாக சொன்னீர்கள்.
பதிலளிநீக்குகவிதை அருமை!அருமை!
தொடரட்டும் உங்கள் பணி.
புலவன் புலிக்கேசி சொல்லி வந்தேன்.வந்த பிறகு உணர்ந்தேன் தாமதமாக வந்திருக்கிறேனே என்று.
பதிலளிநீக்குஉள்நாக்கில் புறப்பட்ட வார்த்தைகள்,நுனிநாக்கு வருமுன் நாம் சொல்ல இருக்கும் வாக்கியத்தின் இனிமையக் கூட்டி இன்னாவின் கடுமையைக் குறைத்துப் பேசப் பழகிக் கொண்டால் இந் நா மதிக்கப்படும்.சரிதானே