நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தீராத!!!!!!!!


சாந்தியைத்தேடி சன்னிதானத்தில்
கூட்டங்கள்
சந்தடிசாக்கில் சிந்துபாடும்
சாத்தான்கள்

அமைதியைநாடி அல்லபடும்
உள்ளங்கள்
அடிநாக்கிற்கடியில் அடிமைப்படும்
பேதைகள்

நியாயங்களைதேடி நிரம்பிவழியும்
வழக்குகள்
நீதிதவற போடப்படும் நியாயமற்ற
வாய்தாக்கள்

வரிசையாக ரேசனில்நின்று பசியைபோக்கும்
பாமரர்கள்
வரியேயில்லாமல் வாரிவாரி கொள்ளையடிக்கும்
பணபேய்கள்

சுற்றிச்சுற்றி சுற்றிச்சுற்றி தொடர்ந்து நடக்கும்
கொடுமைகள்
சொன்னாலும் கொண்டாலும் தீராது என்பதே
உண்மைகள்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

19 கருத்துகள்:

  1. வரிசையாக ரேசனில்நின்று பசியைபோக்கும்
    பாமரர்கள்?"
    லேட்டாத்தானே? சின்ன சின்ன வரிகளில் வாழ்க்கையை படம் பிடித்திருக்கீறீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. ////வரிசையாக ரேசனில்நின்று பசியைபோக்கும்
    பாமரர்கள்
    வரியேயில்லாமல் வாரிவாரி கொள்ளையடிக்கும்
    பணபேய்கள்////

    ஏழைகளிடம் போதுமென்ற அளவுக்கு கொட்டிக்கிடப்பது ஏழ்மை மட்டுமே.

    மீண்டும் ஒரு நல்ல கவிதை மலிக்கா.

    பதிலளிநீக்கு
  3. //சுற்றிச்சுற்றி சுற்றிச்சுற்றி தொடர்ந்து நடக்கும் கொடுமைகள்
    சொன்னாலும் கொண்டாலும் தீராது என்பதே உண்மைகள்...//

    கவிதை மிக நன்று தோழி.

    பதிலளிநீக்கு
  4. சுற்றிச்சுற்றி சுற்றிச்சுற்றி தொடர்ந்து நடக்கும்
    கொடுமைகள்
    சொன்னாலும் கொண்டாலும் தீராது என்பதே
    உண்மைகள்...


    சத்தியமான வார்த்தைகள், உடலில் உள்ளத்திலும் உணர்வுகள் அற்ற ஜடங்களாய் மக்கள் வாழப் பழகிவிட்டனர் என்பதும் உண்மை. நல்ல கவிதை மலிக்கா. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. //சுற்றிச்சுற்றி சுற்றிச்சுற்றி தொடர்ந்து நடக்கும்
    கொடுமைகள்
    சொன்னாலும் கொண்டாலும் தீராது என்பதே
    உண்மைகள்...//

    உண்மை, உண்மை, உண்மை.

    பதிலளிநீக்கு
  6. "Thiratha" kavithaikali padithapoothu intha samukathinmethu "Thiratha" kovam vanthathu...

    Samuka akkarai ulla kavithai!

    Unkal kavithai "Thiratha" nathiyai... selkirathu...

    - Trichy Syed

    பதிலளிநீக்கு
  7. //நீதிதவற போடப்படும் நியாயமற்ற
    வாய்தாக்கள்//

    அது தான இங்க நடக்குது.. அருமை!

    பதிலளிநீக்கு
  8. //சுற்றிச்சுற்றி சுற்றிச்சுற்றி தொடர்ந்து நடக்கும்
    கொடுமைகள்
    சொன்னாலும் கொண்டாலும் தீராது என்பதே
    உண்மைகள்...//

    ஏன் தீராது சகோ

    தீரும் நாள் வருவதுக்கு ரொம்ப நாளில்லைன்னு நம்புவோமே....

    பதிலளிநீக்கு
  9. /பிரியமுடன்...வசந்த் கூறியது...
    //சுற்றிச்சுற்றி சுற்றிச்சுற்றி தொடர்ந்து நடக்கும்
    கொடுமைகள்
    சொன்னாலும் கொண்டாலும் தீராது என்பதே
    உண்மைகள்...//

    ஏன் தீராது சகோ

    தீரும் நாள் வருவதுக்கு ரொம்ப நாளில்லைன்னு நம்புவோமே..../

    நம்புவோம் சகோ. நம்பிக்கொண்டே இருப்போம்..நம்பிக்கைதானே வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
  10. ////வரிசையாக ரேசனில்நின்று பசியைபோக்கும்
    பாமரர்கள்
    வரியேயில்லாமல் வாரிவாரி கொள்ளையடிக்கும்
    பணபேய்கள்////

    கவிதை மிக நன்று தோழி.

    பதிலளிநீக்கு
  11. நம்பிக்கைதானே வாழ்க்கை.

    intha vari pidithirunthathu...

    - Mrs. Sabira Syed

    பதிலளிநீக்கு
  12. /அண்ணாமலையான் கூறியது...
    வரிசையாக ரேசனில்நின்று பசியைபோக்கும்
    பாமரர்கள்?"
    லேட்டாத்தானே? சின்ன சின்ன வரிகளில் வாழ்க்கையை படம் பிடித்திருக்கீறீர்கள்./

    மிக்க நன்றி அண்ணாமலையாரே..

    பதிலளிநீக்கு
  13. S.A. நவாஸுதீன் கூறியது...
    ////வரிசையாக ரேசனில்நின்று பசியைபோக்கும்
    பாமரர்கள்
    வரியேயில்லாமல் வாரிவாரி கொள்ளையடிக்கும்
    பணபேய்கள்////

    /ஏழைகளிடம் போதுமென்ற அளவுக்கு கொட்டிக்கிடப்பது ஏழ்மை மட்டுமே./

    நிஜமான நிஜம் நவாஸண்ணா..

    /மீண்டும் ஒரு நல்ல கவிதை மலிக்கா/

    மிக்க மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  14. /பூங்குன்றன்.வே கூறியது...
    //சுற்றிச்சுற்றி சுற்றிச்சுற்றி தொடர்ந்து நடக்கும் கொடுமைகள்
    சொன்னாலும் கொண்டாலும் தீராது என்பதே உண்மைகள்...//

    கவிதை மிக நன்று தோழி.
    /

    மிக்க நன்றி தோழமையே

    பதிலளிநீக்கு
  15. பித்தனின் வாக்கு கூறியது...
    சுற்றிச்சுற்றி சுற்றிச்சுற்றி தொடர்ந்து நடக்கும்
    கொடுமைகள்
    சொன்னாலும் கொண்டாலும் தீராது என்பதே
    உண்மைகள்...


    /சத்தியமான வார்த்தைகள், உடலில் உள்ளத்திலும் உணர்வுகள் அற்ற ஜடங்களாய் மக்கள் வாழப் பழகிவிட்டனர் என்பதும் உண்மை. நல்ல கவிதை மலிக்கா. நன்றி./

    அதுவே வாழ்க்கையென்றகிவிட்டதால்
    வலிக்கவில்லை அவர்களுக்கு,,

    மிக்க நன்றி பித்தனின் வாக்கு..

    பதிலளிநீக்கு
  16. /அக்பர் கூறியது...
    //சுற்றிச்சுற்றி சுற்றிச்சுற்றி தொடர்ந்து நடக்கும்
    கொடுமைகள்
    சொன்னாலும் கொண்டாலும் தீராது என்பதே
    உண்மைகள்...//

    உண்மை, உண்மை, உண்மை.
    /

    நன்றி நன்றி நன்றி..

    பதிலளிநீக்கு
  17. /வாசமுடன் கூறியது...
    நிஜம்தான். இருந்தாலும் என்ன செய்ய????????..
    / என்ன செய்ய???????? மிக்க நன்றி வாசமுடம்

    பதிலளிநீக்கு
  18. /மலர்வனம் கூறியது...
    "Thiratha" kavithaikali padithapoothu intha samukathinmethu "Thiratha" kovam vanthathu...

    Samuka akkarai ulla kavithai!

    Unkal kavithai "Thiratha" nathiyai... selkirathu...

    - Trichy Syed/
    மிகுந்த மிகிழ்சி மிக்க சந்தோஷம் .மலர்வனம்

    பதிலளிநீக்கு
  19. /ஜான் கார்த்திக் ஜெ கூறியது...
    //நீதிதவற போடப்படும் நியாயமற்ற
    வாய்தாக்கள்//

    அது தான இங்க நடக்குது.. அருமை!/

    சொல்லிக்கொண்டே இருப்போம் என்றாவது நியாயங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்..

    மிக்க நன்றி ஜான்..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது