நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அடிப்பெண்ணே


சித்திரைப்பெண்ணே, உன்சினத்தால் வாழ்வை சீரழித்துவிடாதே

வைகாசி பெண்ணே உன்வரம்புமீறிய வார்த்தையால் வாழ்வை
வதைத்துக்கொள்ளாதே.


ஆணிபெண்ணே, உன்ஆதாரமில்லாத ஆத்திரத்தால் வாழ்வை அழித்துவிடாதே.

ஆடிப்பெண்ணே, உன்அளவுக்குமீறிய ஆட்டத்தால் வாழ்வை அஸ்தமனம்மில்லாமல் ஆக்கிக்கொள்ளாதே.

ஆவணிப்பெண்ணே, உன்ஆணவத்தால் வாழ்வை அலங்கோலம் ஆக்கிவிடாதே.

புரட்டாசிப்பெண்ணே, உன்பொல்லாதாத குணத்தால் வாழ்வை புண்ணாக்கிக்கொள்ளாதே

ஐப்பசிப்பெண்ணே, உன்ஐயத்தைமீறி அதிகாரம் செய்யாதே

கார்த்திகைப்பெண்ணே, உன்கற்புக்கு கலங்கதை கற்பித்துவிடாதே

மார்கழிப்பெண்ணே, உன்மனம்போனபோக்கில் வாழ்வை நடத்திவிடாதே

தைப்பெண்ணே, உன்தவறினால் வாழ்க்கையை தவறவிட்டுவிடாதே

மாசிப்பெண்ணே, உன்மரபுகளை மறந்துவிட்டு வாழ்ந்துவிடாதே

பங்குனிப்பெண்ணே, உன்பண்பான குணத்தால் மற்றவைகளை தவிர்ந்து
பவித்ரமானதாய் உன்வாழ்வை பளிச்சென்று ஆக்கிக்கொள்.......

[டிஸ்கி] பெண் என்ற இடத்தில் ஆணென்றும் போட்டுக்கொள்ளலாம்.
எப்படி ஒரே கல்லில்.......]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

18 கருத்துகள்:

  1. டைட்டில்ல இருக்கிற பெண்ணை மட்டும் சும்மா விட்டீங்க? :)

    பதிலளிநீக்கு
  2. /பீர் | Peer கூறியது...
    டைட்டில்ல இருக்கிற பெண்ணை மட்டும் சும்மா விட்டீங்க? :)//

    ஹா ஹா அவங்களை வைத்துதானே இத்தனையும்:}

    எங்கே இத்தனைநாளா காணோம்..

    பதிலளிநீக்கு
  3. நன்றாக சொன்னீர்கள்..ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு குணம்...ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.........

    பதிலளிநீக்கு
  4. மறுபடியும் ஒரு வித்தியாசமான கவிதை தோழியிடம் இருந்து.நீங்க கவிதை உலக கமல் :)

    பதிலளிநீக்கு
  5. ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல. எதையும் விடுறதா இல்லை. எல்லாத்தையும் கவிதைக்குள்ள கொண்டு வந்துடுவீங்க இன்னும் கொஞ்ச நாளில்.

    பதிலளிநீக்கு
  6. மல்லிக்,புதுசா இருக்கு.
    அசத்துங்க.பாம்பின் கால் பாம்பறியும்ங்கிறாப்போல இருக்கு

    பதிலளிநீக்கு
  7. /புலவன் புலிகேசி கூறியது...
    நன்றாக சொன்னீர்கள்..ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு குணம்...ஒரே கல்லுல ரெண்டு மாங்கா........./

    ஆணுக்கும் பொருந்துமுன்னும் சொன்னோம்
    அப்ப ஒரேக்கல்லில் மூணு மாங்காய்........
    மிக்க நன்றி புலிகேசி..

    /பீர் | Peer கூறியது...
    பிஸியா இருக்கோம்ல.../


    ஓ பிஸியாகவா சரி சரி நம்பிக்கிட்டோம்...

    பதிலளிநீக்கு
  8. S.A. நவாஸுதீன் கூறியது...
    வித்தியாசமான இடுகை.

    மிக்க நன்றி நவாஸண்ணா..

    /S.A. நவாஸுதீன் கூறியது...
    ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல. எதையும் விடுறதா இல்லை. எல்லாத்தையும் கவிதைக்குள்ள கொண்டு வந்துடுவீங்க இன்னும் கொஞ்ச நாளில்./

    கொண்டுவந்துதான் பார்ப்போமே வந்தா கவிதை, வரலைன்னாலும் நம்மக்கு அது கவிதைதான். ஹா ஹா,

    பதிலளிநீக்கு
  9. /பூங்குன்றன்.வே கூறியது...
    மறுபடியும் ஒரு வித்தியாசமான கவிதை தோழியிடம் இருந்து.நீங்க கவிதை உலக கமல் :)/

    மிகவும் சந்தோஷம் தோழமையே..

    அதுசரி யார் அந்த கமல்????????:[

    பதிலளிநீக்கு
  10. /ஹேமா கூறியது...
    மல்லிக்,புதுசா இருக்கு.
    அசத்துங்க.பாம்பின் கால் பாம்பறியும்ங்கிறாப்போல இருக்கு/


    என்ன ஹேமா நம்மைபற்றி இப்படியா நடுக்கூடத்தில் போட்டு உடைப்பது, பாம்புன்னதும் நம்மைகண்டு ஓடிடப்போறாங்க.. பாவம் வருகிற பச்சைப்புள்ளைங்க..

    பதிலளிநீக்கு
  11. "அடிப்பெண்ணே" பன்னிருமாதங்களில் வித்தியாசமான கவிதை.

    பதிலளிநீக்கு
  12. பன்னிரு பெண்களும் அழகு

    விஜய்

    பதிலளிநீக்கு
  13. //
    [டிஸ்கி] பெண் என்ற இடத்தில் ஆணென்றும் போட்டுக்கொள்ளலாம்.
    எப்படி ஒரே கல்லில்.......]//

    அப்போ

    ஆவணி ஆணே

    மாசி ஆணே

    இப்பிடி மச்சான கூப்பிட்டுப்பாருங்களேன் சகோ.....
    அவ்வ்வ்வ்.....

    பதிலளிநீக்கு
  14. வித்தியாசமான கற்பனை....அதற்கு பொருத்தமான வார்த்தைகள்......ரொம்ப நல்ல இருக்கு....ஆனால்... அதென்ன டிஸ்கி.. அப்படின்னா என்ன அர்த்தம். நேரம் இருந்த என்ன அர்த்தம்னு கொஞ்சம் சொல்லுங்க... ஏன்னா நிறைய இடத்துல இதை பார்கிறேன்

    பதிலளிநீக்கு
  15. கவிதைகள் அனைத்தும் அற்புதம். 'நீரோடை' மிளிர்கிறது, பளபளக்கிறது, ஒளிர்கிறது, சல சலக்கிறது கலக்குறீங்க தோழியே! வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. Penkal eppadi irrukanum? Eppadi erukka koodathu? endra kelvikku kavithail pathil sooli irruntheerkal...

    - trichy syed

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது