புல்வெளி அதன்மேல்
பச் பச்சென இச்சிட்டபடி
பதிந்தன கால்கள்
புல்வெளிமேல்
படுத்திருந்த பனித்துளிகள்
பதிந்து பதிந்து
சென்ற கால்களை
கிச்சுகிச்சு மூட்ட
இரவு வானத்தில்
விழித்திருந்த வெண்ணிலா
இவளின்
இன்முகத்தைக் கண்ணடித்திட
இரைந்து கிடந்த
நட்சத்திரத்தின் ஒளியை
இமைக்காமல்
இவளும் ரசித்திட
அமைதியான இரவுக்குள்
ஆவாரம்பூவின் வாசம்
அதோடு சில்லென்றெக்
காற்று கன்னத்தைஉரச
அந்நேரம்பார்த்து
தொலைப்பேசியும் சினுங்கிட
அன்புச்செல்லத்தின்
அழைப்பும் வந்திட
அத்திப்பூப்போன்று
அதரத்திலொன்று தந்திட
ரசிக்கவைத்து
மனம்
இனிக்கவைத்த
புல்வெளிக்கும் பனித்துளிக்கும்
வெண்ணிலாவுக்கும் நட்ச்சத்திரத்திற்கும்
ஆவாரம்பூவுக்கும் தொலைப்பேசிக்கும்
பிரிய மனமில்லாமல்
பிரியா விடை சொல்லியபடியே
பாவையவள் மெல்லநடந்தாள்
தன் மனமுழுதும் மகிழ்வாய்....
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
கவிதை ரொம்ப ரொம்ப சூப்பர் தோழி..ஆமாம்.யாரு அந்த அன்புசெல்லம்!!!???
பதிலளிநீக்கு//அமைதியான இரவுக்குள் ஆவாரம்பூவின் வாசம்
பதிலளிநீக்குஅதோடு சிலுசிலுன்னுகாற்று கன்னத்தைஉரச
அந்நேரம்பார்த்து செல்போனும் சினுங்கவே
அன்புச்செல்லத்தின் அழைப்பும் வந்திட
அத்திப்பூவாய் அதரத்திலொன்று தந்திட//
ரசித்தேன் கவிதையூனூடே வர்ணிக்கப்பட்ட வரிகளை.....
/க.பாலாசி கூறியது...
பதிலளிநீக்கு//அமைதியான இரவுக்குள் ஆவாரம்பூவின் வாசம்
அதோடு சிலுசிலுன்னுகாற்று கன்னத்தைஉரச
அந்நேரம்பார்த்து செல்போனும் சினுங்கவே
அன்புச்செல்லத்தின் அழைப்பும் வந்திட
அத்திப்பூவாய் அதரத்திலொன்று தந்திட//
ரசித்தேன் கவிதையூனூடே வர்ணிக்கப்பட்ட வரிகளை...../
வர்ணிக்கப்பட்ட வரிகளை ரசித்து வர்ணித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி பாலாஜி..
/பூங்குன்றன்.வே கூறியது...
பதிலளிநீக்குகவிதை ரொம்ப ரொம்ப சூப்பர் தோழி..ஆமாம்.யாரு அந்த அன்புசெல்லம்!!!???
/
ரொம்ப ரொம்ப சூப்பருக்கு. சந்தோஷம் தோழமையே..
ஓஅதுவா அது அது அன்புசெல்லமுன்னா செல்லம்தான்..
கவிதை அருமையா இருக்கு மலிக்கா!
பதிலளிநீக்குமென்மையான வரிகள் தன்மையான வார்த்தைகளோடு. அழகான கவிதை. உங்கள் கற்பனை வளம் ஆச்சரியப்பட வைக்கிறது. நம்மால் இந்த மாதிரி எழுத முடியலையேன்னு என் மேல் எனக்கு ஆதங்கமாவும் இருக்கு. பாராட்டுக்கள் மலிக்கா.
பதிலளிநீக்கு/ S.A. நவாஸுதீன் கூறியது...
பதிலளிநீக்குமென்மையான வரிகள் தன்மையான வார்த்தைகளோடு. அழகான கவிதை. உங்கள் கற்பனை வளம் ஆச்சரியப்பட வைக்கிறது. நம்மால் இந்த மாதிரி எழுத முடியலையேன்னு என் மேல் எனக்கு ஆதங்கமாவும் இருக்கு. பாராட்டுக்கள் மலிக்கா./
நிஜமாலுமே மனம் சந்தோஷமாக இருக்கு நவாஸண்ணா..
உங்களின் கவிகளை நான் படித்திருக்கிறேன், அதில் வார்தைகளை அணிவகுப்பு அதன் அழமான அர்த்தம்பொதிந்த
வரிகளின் வார்த்தெடுப்பு,
இதெல்லாம் நிச்சியம் எனக்கு வராது.
என் மனதில் தோன்றும் எண்ணதை வார்தைகளாக்கி அதை எழுத்துக்களின் மூலம் வடிவம் கொடுக்கிறேன்.
மன்னிக்கவும் கிறுக்கி வைக்கிறேன்
அதுகூட கவிதை என்று எனக்கு அங்கிகாரம் வழங்கி ஊக்கம் கொடுக்கும் தாங்களைபோன்றரின் பெருந்தன்மைக்கு மிகுந்த கடைமைப்பட்டிருக்கிறேன்..
மிக்க நன்றி நவஸண்ணா..
/அனுபவம் கூறியது...
பதிலளிநீக்குகவிதை அருமையா இருக்கு மலிக்கா!/
தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அனுபவம்...
வர்ணனணைகள் அருமைங்க, பனித்துளிகளின் கிச்சுகிச்சு மூட்டல், நிலா கண்ணடித்தல் என...
பதிலளிநீக்குகலக்குறீங்க. வாழ்த்துக்கள்.
பிரபாகர்.
வாழ்த்துக்கள் மலிக்கா , இனிய நடை கவிதை ,மிக எளிய நடையில் எழுதியிருக்கிற்ர்கள். எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க
பதிலளிநீக்கு/பிரபாகர் கூறியது...
பதிலளிநீக்குவர்ணனணைகள் அருமைங்க, பனித்துளிகளின் கிச்சுகிச்சு மூட்டல், நிலா கண்ணடித்தல் என...
கலக்குறீங்க. வாழ்த்துக்கள்.
பிரபாகர்./
வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டேயிருந்தால் இன்னும் கலக்கலாம்.
மிக்க நன்றி பிரபகரண்ணா..
/sarusriraj கூறியது...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மலிக்கா , இனிய நடை கவிதை ,மிக எளிய நடையில் எழுதியிருக்கிற்ர்கள். எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க/
அது எப்படின்னு தெரியலக்கா . எதைப்பார்த்தாலும் இப்படி அதுவாவருது[ ரூம் போட்டெல்லாம் யோசிக்கலை அக்ககோவ்] மிக்க நன்றி சாருக்கா..
கவிதையும்,படங்களும் கண்களையும்,மனதினையும் கட்டிப்போடுகின்றது மலிக்கா.சபாஷ்.
பதிலளிநீக்குNilavelichathil nadanthuvantha kulumaiyana wunarvai arpatuthithathu unkal kavithai!
பதிலளிநீக்கு- trichy syed
ஸாதிகா கூறியது...
பதிலளிநீக்குகவிதையும்,படங்களும் கண்களையும்,மனதினையும் கட்டிப்போடுகின்றது மலிக்கா.சபாஷ்.
- yes. ithai nan aamoothikireen!
trichy syed