நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அறம் செய மற


அன்பை மற
ஆணவத்துடன் நட
இறுமாப்புடன் இரு
ஈகை செய்யாதே
உதாசினப்படுத்து
ஊதாரியாய் இரு
எதிர்த்து பேசு
ஏளனமாய் நட
ஐயப்படாதே
ஒருவருக்கும் உதவாதே
ஓரவண்ஜனை செய்
ஔவையாராய் ஆகாதே..

எதை ஒன்றை செய்யச்சொன்னாலும்
அதற்கு எதிர்மறையாய்
செய்வதுதானே மனிதகுணம்

தயவுசெய்து இதையும் படித்துவிட்டு
இதற்க்கும் எதிர்மறையாகவே
செய்து பாருங்களேன்........





ஒருமுறை

 மனிதனுக்காக  படைக்கப்பட்ட
அனைத்தும் ”ரீயூஸ்”
மனிதன் மட்டும் ”ஒன்யூஸ்”

[இது சும்மா ஒரு ஷைடு பிட்]



அன்புடன் மலிக்கா
 இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

22 கருத்துகள்:

  1. /// எதிர்மறையாகவே
    செய்து பாருங்களேன் ///

    superuuuuuuuuuu.

    பதிலளிநீக்கு
  2. உங்க இந்த பதிவு ரொம்ப ரொம்ப மோசம்.சுத்த வேஸ்ட். ஸாரி..நானும் பின்னூட்டத்தை கொஞ்சம் எதிர்மறையா எழுதினேன்.வித்தியாசமான பதிவு தான் இது.

    பதிலளிநீக்கு
  3. சுத்த மோசமுங்க.....
    எதை எப்படி எழுதனும் என்று ஒரு விவஸ்தை இல்லை...?
    வலைப்பூ ஆரம்பித்து விட்டால் இப்படி எதாவது கைக்கு வந்ததை எழுதி விடுவதா...?
    -
    -
    -
    -
    -
    -
    பயந்துடாதீங்க மல்லிகா...இதுவும் ஒரு எதிர்மறை கருத்து தான்....
    உண்மையில் நல்ல கருத்துள்ள கவிதை...தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  4. அட இது நல்லா இருக்கே. அசத்துங்க

    பதிலளிநீக்கு
  5. வித்தியாசமா சிந்திக்கிறீங்களே. சூப்பர் போங்க.

    பதிலளிநீக்கு
  6. //தயவுசெய்து இதையும் படித்துவிட்டு
    இதற்க்கும் எதிர்மறையாகவே
    செய்து பாருங்களேன்........
    //

    அதானே., முதல்ல படிச்சவுடன் பயந்துட்டேன்.

    பதிலளிநீக்கு
  7. ம் :) கவிதை நல்லாயிருக்கு, வித்தியாசமா யோசித்திருக்கிறீங்க. ஆனா இப்படி நடப்பவர்களே எத்தனையோ பேர் இருக்காங்களே மலிக்கா!

    பதிலளிநீக்கு
  8. ஹை... புதிய ஆத்திச்சூடி...

    நவீன ஔவையாரே வருக..

    நிறைய இதுபோல் தரும்

    பதிலளிநீக்கு
  9. அக்கா ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு.

    பதிலளிநீக்கு
  10. அட இப்பிடியும் புரட்டிப் போட்டு எழுதிப் பார்க்கலாமோ !

    பதிலளிநீக்கு
  11. நல்ல இருக்குங்க சகோதரி

    விஜய்

    பதிலளிநீக்கு
  12. ஓ -- க்கு என்ன போட போறீங்கன்னு பாத்தேன்..

    “ஓரவஞ்சனை..” நல்ல வார்த்தை..

    இந்த மாதிரி அகர வரிசை பதிவுகள் போடும் போது தளை தட்டும் எழுத்துக்கள் ஓ--ஔ....

    *****
    உங்க பேர்ல (நீரோடை) ஏற்கனவே முரளிகண்ணன் எழுதுறதா நியாபகம்... உங்களுக்கு தெரியுமா??

    பதிலளிநீக்கு
  13. /பூங்குன்றன் வேதநாயகம் கூறியது...
    உங்க இந்த பதிவு ரொம்ப ரொம்ப மோசம்.சுத்த வேஸ்ட். ஸாரி..நானும் பின்னூட்டத்தை கொஞ்சம் எதிர்மறையா எழுதினேன்.வித்தியாசமான பதிவு தான் இது./

    ஓ இதுதான் எதிர்மறையா? வித்தியாசத்துக்கே வித்தியாசமா? சூப்பரப்பூ...

    பதிலளிநீக்கு
  14. /கேசவன் .கு கூறியது...
    /// எதிர்மறையாகவே
    செய்து பாருங்களேன் ///
    superuuuuuuuuuu.
    /
    நன்றி கேசவன்..


    /வானம்பாடிகள் கூறியது...
    அட இது நல்லா இருக்கே. அசத்துங்க/

    எல்லாம் உங்களாண்ட கத்துகிட்டதுதான் வானம்பாடிகள்.
    மிக்க நன்றி..

    /லெமூரியன்... கூறியது...
    ஹா ஹா ஹா ...கலகுறீங்க மலிக்கா...!/

    சிரிப்புக்கு நன்றி. லெமூரியன்...

    பதிலளிநீக்கு
  15. /கீழை ராஸா கூறியது...
    சுத்த மோசமுங்க.....
    எதை எப்படி எழுதனும் என்று ஒரு விவஸ்தை இல்லை...?
    வலைப்பூ ஆரம்பித்து விட்டால் இப்படி எதாவது கைக்கு வந்ததை எழுதி விடுவதா...?
    -
    -
    -
    -
    -
    -
    பயந்துடாதீங்க மல்லிகா...இதுவும் ஒரு எதிர்மறை கருத்து தான்....
    உண்மையில் நல்ல கருத்துள்ள கவிதை...தொடருங்கள்...
    /

    வாங்க கீழை ராசா. வரும்போதே ராசாதி ராச, ராச மார்த்தாண்ட, ராச கம்பீர, என கலகிட்டு வாறீங்க. முதல் வருகைக்கும். வசைபாடியதுபோன்ற வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    தொடர்ந்துவந்து வசைபாடுங்கள் அப்போதுதான் வரவேற்பறை கலகலன்னு இருக்கும்...

    பதிலளிநீக்கு
  16. /S.A. நவாஸுதீன் கூறியது...
    வித்தியாசமா சிந்திக்கிறீங்களே. சூப்பர் போங்க./

    ரொம்ப சந்தோஷம் நவாஸண்ணா..



    /சுவையோ சுவை கூறியது...
    அக்கா ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு./

    வாங்கம்மா மின்னலுகளா. ஆரம்பிச்சிட்டீங்களா சுவையோ சுவையின்னு. வாழ்த்துக்கள். சோனியா...மற்றும் ஃபர்ஜானா. ஃபாயிஜா..

    /

    பதிலளிநீக்கு
  17. /அக்பர் கூறியது...
    அதானே., முதல்ல படிச்சவுடன் பயந்துட்டேன்./

    பயந்துட்டீங்களா அக்பர், பயப்பிடக்கூடாதுன்னுதான் முதலேயே நம்ம படத்தை போட்டேன்.

    முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி,தொடர்ந்துவாருங்கள்..

    /
    ஹேமா கூறியது...
    அட இப்பிடியும் புரட்டிப் போட்டு எழுதிப் பார்க்கலாமோ !/

    ஆமா ஹேமா.எழுதிபார்த்துட்டோமுல்ல..

    பதிலளிநீக்கு
  18. /யாழினி கூறியது...
    ம் :) கவிதை நல்லாயிருக்கு, வித்தியாசமா யோசித்திருக்கிறீங்க. ஆனா இப்படி நடப்பவர்களே எத்தனையோ பேர் இருக்காங்களே மலிக்கா!/

    என்ன செய்ய யாழினி அவர்களெல்லாம் அவர்களாகவே திருந்தோனும்..

    மிக்க நன்றி.முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும்.. மீண்டும் வருக..

    /கவிதை(கள்) கூறியது...
    நல்ல இருக்குங்க சகோதரி

    விஜய்/

    வாங்க [கவிதைகள்]தாங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயண்ணா...

    பதிலளிநீக்கு
  19. /கடைக்குட்டி கூறியது...
    ஓ -- க்கு என்ன போட போறீங்கன்னு பாத்தேன்..

    “ஓரவஞ்சனை..” நல்ல வார்த்தை..

    இந்த மாதிரி அகர வரிசை பதிவுகள் போடும் போது தளை தட்டும் எழுத்துக்கள் ஓ--ஔ..../

    வாங்க வாங்க கடைக்குட்டி.தாங்களின் வருகைக்கு மிகவும் மகிழ்ச்சி கருத்துக்களுக்கு மிக்க நன்றி..

    *****
    /உங்க பேர்ல (நீரோடை) ஏற்கனவே முரளிகண்ணன் எழுதுறதா நியாபகம்... உங்களுக்கு தெரியுமா??/

    அப்படியா!!!!!!!! நான் இதுவரை பார்த்தில்லையே. இதே தலைப்பிலா?
    பிளாக் ஐ டி தெரியுமா?

    பதிலளிநீக்கு
  20. /இராகவன் நைஜிரியா கூறியது...
    ஹை... புதிய ஆத்திச்சூடி...

    நவீன ஔவையாரே வருக..

    நிறைய இதுபோல் தரும்/

    ஹை. நிஜமாவேவா, ரொம்ப சந்தோஷமாக இருக்கு இராகவன்சார்..
    ஆனா நான் ஒளவையாரில்லம்மா..

    மிக்க நன்றி சார்...

    பதிலளிநீக்கு
  21. Padikkumpoothu atherchiyaka irrunthathu... Amaithiyana Malikkava eppadai eluthi irukkanga..? endru ninaithen... Mudivai padithapoothu asanthu pooi viden...

    !repuS !mahtuprA

    - trichy syed

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது