நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சிரித்துப்பார்


சிரிப்பு என்பதின் அர்த்தமே சிறப்பு
சிரித்துப்பார் உன் சிந்தனைகள் சிறகடித்துப்பறக்கும்
சிரிக்கும்போது சிந்தும் கண்ணீரில்
சிதைந்துபோன மனம்கூட சுகம்காணும்

புன்னகை சிந்தியபடி சிரித்த முகமாய் இரு
பொல்லாதவர்கூட உன்முகம்கண்டு புன்னகை பூத்திடுவர்
ஒரு பாலைவனமே பூத்து குலுங்கியபோதும்
அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா

சிரிக்கத்தவறியவரின் வீட்டில்சோகங்கள் குடிகொள்ளும்
சிரிப்பதால் சிந்தைகூட சில நேரம் சிலிர்த்துக்கொள்ளும்
நம்மை  மிருக்கத்திடமிருந்து  மாற்றிய மனித மிச்சம்

எதுவுமே அளவுக்கு மீறிவிட்டால் ஆபத்து
சிரித்து வாழ பழகு பிறர் உன்னை கண்டு
சிரித்து வாழ்வதிலிருந்து விலகு..............

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

18 கருத்துகள்:

  1. சரிதான் மலிக்கா...சிரிக்கத் தெரிந்தவனுக்கு இந்த உலகமே சொந்தக்காரர்கள். முறைக்கத் தெரிந்தவனுக்கு விரோதிகள். நல்ல கவிதை

    பதிலளிநீக்கு
  2. /// சிரித்து வாழ பழகு பிறர் உன்னை கண்டு
    சிரித்து வாழ்வதிலிருந்து விலகு ///

    சிந்திக்க வேண்டிய வரிகள் தான் !

    பதிலளிநீக்கு
  3. /நம்மை மிருக்கத்திடமிருந்து மாற்றிய மனித மிச்சம்/

    அருமை. அழகான கவிதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. இந்த வரிகள் அருமை...

    ஒட்டுப்போடுங்கன்னு விட்டா பிளக்ஸபேனர் அடிச்சு ஒட்டுருவிங்க போல... போட்டாச்சு போட்டாச்சு

    பதிலளிநீக்கு
  5. இந்த வரிகள் அருமை...

    ஒட்டுப்போடுங்கன்னு விட்டா பிளக்ஸபேனர் அடிச்சு ஒட்டுருவிங்க போல... போட்டாச்சு போட்டாச்சு

    பதிலளிநீக்கு
  6. சிரிப்பு எல்லாம் வியாதிகளுக்கும் நல்ல மருந்து.சிரிக்க பழகி விட்டால் பின்பு எல்லாமே அழகா தோன்றும்.இதை கவி வடிவில் சொன்ன தோழிக்கு "சிரிப்பு பதிவர்" ஸாரி "சிறப்பு பதிவர்" பட்டம் தரலாம்.கவி ரொம்ப அழகா இருக்குங்க.

    பதிலளிநீக்கு
  7. //சிரிக்கத்தவறியவரின் வீட்டில்சோகங்கள் குடிகொள்ளும்
    சிரிப்பதால் சிந்தைகூட சில நேரம் சிலிர்த்துக்கொள்ளும்
    நம்மை மிருக்கத்திடமிருந்து மாற்றிய மனித மிச்சம்//

    உண்மைதானே....

    கவிதை நன்று.....

    பதிலளிநீக்கு
  8. //இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்//

    இது என்ன????????

    பதிலளிநீக்கு
  9. மலிக்கா சிரிப்பு பற்றிய உங்கள் கவிதை அருமை அதுவும் குழந்தைச் சிரிப்பு என்பதால் ஒருபடி மேல்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல ரசனை மலிக்கா ..சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்துவிடாதே...

    பதிலளிநீக்கு
  11. மனிதனையும் விலங்கையும் வேறுபடுத்தி காட்டுவது சிரிப்பு மட்டுமே

    பதிலளிநீக்கு
  12. குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
    தமிழ்நெஞ்சம்

    பதிலளிநீக்கு
  13. //ஒரு பாலைவனமே பூத்து குலுங்கியபோதும்
    அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா//

    கவிதை நல்லா இருக்கு. மழலைச் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. மிக்க நன்றி, புலவன் புலிகேசி ..

    மிக்க நன்றி, கேசவன்

    மிக்க நன்றி, வானம்பாடிகள்

    மிக்க நன்றி,சாருக்கா

    மிக்க நன்றி,பாலாஜி
    //இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்//

    இது என்ன????????

    அதுவா பாலாஜி நீங்கள் எத்துனையாவது நபராக இதை வாசிக்கிறீர்கள் என காட்டிக்கொண்டு இருந்தது, தற்போது //இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்//

    என்றுமட்டும் காட்டுகிறது வெக்கப்பட்டு ஒளிந்துகொண்டதுவோ என்னவோ..

    பதிலளிநீக்கு
  15. மிக்க நன்றி: தியா

    மிக்க நன்றி: வெண்ணிறவு கார்த்திக்

    மிக்க நன்றி: நவாஸுதீன் அண்ணா

    பதிலளிநீக்கு
  16. /நாஞ்சில் பிரதாப் கூறியது...
    இந்த வரிகள் அருமை...

    ஒட்டுப்போடுங்கன்னு விட்டா பிளக்ஸபேனர் அடிச்சு ஒட்டுருவிங்க போல... போட்டாச்சு போட்டாச்சு/

    வாங்க நாஞ்சில் பிரதாப். முதமொறையா வந்திருக்கீங்க,ஓட்டும் போட்டிருக்கீங்க மிக்க நன்றிங்க,

    நல்ல ஐடியாவா இருக்கே [பிளாக்கில் பேனர் அடிச்சி ஒட்டுறது]

    தொடர்ந்து வாருங்கள்

    பதிலளிநீக்கு
  17. / பூங்குன்றன் வேதநாயகம் கூறியது...
    சிரிப்பு எல்லாம் வியாதிகளுக்கும் நல்ல மருந்து.சிரிக்க பழகி விட்டால் பின்பு எல்லாமே அழகா தோன்றும்.இதை கவி வடிவில் சொன்ன தோழிக்கு "சிரிப்பு பதிவர்" ஸாரி "சிறப்பு பதிவர்" பட்டம் தரலாம்.கவி ரொம்ப அழகா இருக்குங்க/

    பட்டமெல்லாம் தரனுமூங்குறீங்க வாங்கிக்கிறேன் தோழமையே மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  18. /TamilNenjam கூறியது...
    குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
    தமிழ்நெஞ்சம்/

    முதல் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி தமிழ்நெஞ்சம் தொடர்ந்து வாருங்கள்..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது