நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வார்த்தையும் வாழ்க்கையும்




வார்த்தை மிக வலிமையானது
ஒரு வார்த்தைதானே என்று வீணடித்து விடாதே
அது உன் வாழ்க்கையாகவும் இருக்கலாம்

உதிர்க்கும் வார்த்தையை உயர்ந்ததாக உதிரப்பழகு
பிறரை உருக்குலைக்கும்படியாக செய்துவிடாதே

உன் வார்த்தையில் வலியும் உண்டு வாஞ்சையும் உண்டு
அதை நீ பயன்படுத்தும் முறையில், வாஞ்சையே மேன்மை

வார்த்தை அம்பு போன்றது அதை செலுத்தும்முறை
தெரியாவிட்டால் விட்டவனிடமே வந்து சேரும்

ஒரு வார்த்தை வெல்லும்
ஒரு வார்த்தைக் கொல்லும் என்பார்கள்


நம் வார்த்தை நம்மை வெல்ல வைக்காவிட்டாலும்
பிறரை கொல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

வார்த்தை நெருப்பைவிட மோசமானது தவறான
ஒரு சொல் சுற்றத்தையே சுட்டெறித்துவிடும்

நம்மிடம் வார்த்தை சுத்தமாக இருக்கவேண்டும்
வார்த்தைதவறியவன் தன்னிலிருந்து ஒருபடி கீழிறங்கிவிடுகிறான்

ஒரு வார்த்தைதானே என நினைத்தால்
அது நம் வாழ்க்கையையே மாற்றிவிடும்

ஒரு பொன்தானே தவறிவிட்டால் என்ன விடுவோமா?
அதைவிட பலமடங்கு மேன்மையானது வார்த்தை

வாயிலிருந்து வழுக்கிவிழும் வார்த்தை
வாளைவிடக் கூர்மையானது

வார்த்தைகளை வசப்படுத்த தவறியன்
வாழ்க்கையை வழுவிலக்கச்செய்கிறான்

வார்த்தைக்குள்தான் வாழ்க்கை இருக்கிறது
ஆதலால்
வார்த்தைகளை உதிர்ப்பதற்கு முன்னால்

ஒருமுறைக்கு பலமுறை யோசி
வாழ்க்கை வாழ்வது ஈசி..



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

23 கருத்துகள்:

  1. //உன் வார்த்தையில் வலியும் உண்டு வாஞ்சையும் உண்டு
    அதை நீ பயன்படுத்தும் முறையில், வாஞ்சையே மேன்மை//

    Excellent Malikka

    பதிலளிநீக்கு
  2. நல்ல ஆழமான கருத்துக்கள். நானும் யேசித்துப் பேச முயற்ச்சிகின்றேன். நல்ல அறிவுரைப் பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நல்ல கருத்துள்ள, கவணத்தில் கொள்ளவேண்டிய வரிகள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. //நம்மிடம் வார்த்தை சுத்தமாக இருக்கவேண்டும்
    வார்த்தைதவறியவன் தன்னிலிருந்து ஒருபடி கீழிறங்கிவிடுகிறான்//

    யக்கா நொம்ப கரீக்டா சொல்ரீக்க

    கவிதா எல்லாம் நல்லா எல்தீ கீறக்க
    (டேய் கவிதா இல்ல கவித... கவித...)

    பதிலளிநீக்கு
  5. வார்த்தைகள் மண்ணில் சிந்திய கடுகு மாதிரி கொட்டிய பின்பு எடுப்பது கஷ்டம்

    ~~தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு~~

    வள்ளுவனும் சொன்ன உண்மைக்கூற்று

    கவிதையும் அதையே உணர்த்துகிறது சகோதரி..

    பதிலளிநீக்கு
  6. நல்ல கருத்தாழமிக்க கவிதை மலிக்கா...

    பதிலளிநீக்கு
  7. //உதிர்க்கும் வார்த்தையை உயர்ந்ததாக உதிரப்பழகு
    பிறரை உருக்குலைக்கும்படியாக செய்துவிடாதே//
    அற்பதமான வரிகள் தோழி

    பதிலளிநீக்கு
  8. அர்த்தமுள்ள வரிகள் மலிக்கா , கரெக்டா சொல்லியிருக்கிங்க

    பதிலளிநீக்கு
  9. அர்த்தமுள்ள வரிகள் மலிக்கா , கரெக்டா சொல்லியிருக்கிங்க

    பதிலளிநீக்கு
  10. /thenammailakshmanan கூறியது...
    //உன் வார்த்தையில் வலியும் உண்டு வாஞ்சையும் உண்டு
    அதை நீ பயன்படுத்தும் முறையில், வாஞ்சையே மேன்மை//

    Excellent Malikka/

    ரொம்ப தேங்ஸ் thenammailakshmanan.
    தங்களின் முதல்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, மீண்டும் மீண்டும் வருக..

    பதிலளிநீக்கு
  11. /பித்தனின் வாக்கு கூறியது...
    நல்ல ஆழமான கருத்துக்கள். நானும் யேசித்துப் பேச முயற்ச்சிகின்றேன். நல்ல அறிவுரைப் பதிவு. நன்றி./

    மிக்க நன்றி பித்தனின் வாக்கு..

    பதிலளிநீக்கு
  12. /S.A. நவாஸுதீன் கூறியது...
    நல்ல கருத்துள்ள, கவணத்தில் கொள்ளவேண்டிய வரிகள். வாழ்த்துக்கள்/

    வாழ்த்துக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி நவாஸண்ணா..

    பதிலளிநீக்கு
  13. கருவாச்சி கூறியது...
    //நம்மிடம் வார்த்தை சுத்தமாக இருக்கவேண்டும்
    வார்த்தைதவறியவன் தன்னிலிருந்து ஒருபடி கீழிறங்கிவிடுகிறான்//

    யக்கா நொம்ப கரீக்டா சொல்ரீக்க./

    நொம்ப நன்றீங்க..

    கவிதா எல்லாம் நல்லா எல்தீ கீறக்க
    (டேய் கவிதா இல்ல கவித... கவித...)/

    யாரந்த கவிதா? ஓ கவிதையா,, மிக்க மகிழ்ச்சிங்க..

    பதிலளிநீக்கு
  14. /தியாவின் பேனா கூறியது...
    நல்ல பதிவு./

    மிக்க நன்றி தியா...

    /பிரியமுடன்...வசந்த் கூறியது...
    வார்த்தைகள் மண்ணில் சிந்திய கடுகு மாதிரி கொட்டிய பின்பு எடுப்பது கஷ்டம்

    ~~தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு~~

    வள்ளுவனும் சொன்ன உண்மைக்கூற்று

    கவிதையும் அதையே உணர்த்துகிறது சகோதரி../

    நல்ல நல்ல உதாரணங்கள்.
    மிக்க நன்றி வசந்தமான சகோதரரே..

    பதிலளிநீக்கு
  15. /Mrs.Menagasathia கூறியது...
    நல்ல கருத்தாழமிக்க கவிதை மலிக்கா../

    வருகைக்கும் கருத்துக்கும்
    மிக்க நன்றி. மேனகாசத்தியா..

    பதிலளிநீக்கு
  16. /வெண்ணிற இரவுகள்....! கூறியது...
    //உதிர்க்கும் வார்த்தையை உயர்ந்ததாக உதிரப்பழகு
    பிறரை உருக்குலைக்கும்படியாக செய்துவிடாதே//

    அற்பதமான வரிகள் தோழி/

    மிகுந்த மகிழ்ச்சி தோழரே..

    பதிலளிநீக்கு
  17. /sarusriraj கூறியது...
    அர்த்தமுள்ள வரிகள் மலிக்கா , கரெக்டா சொல்லியிருக்கிங்க/

    வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி சாருக்கா..

    பசங்க எப்படி இருக்காங்க?..

    பதிலளிநீக்கு
  18. தோழி சலாம் நலமா அருமையான வார்தைகள். என் உம்மா சொல்லுவங்க. ஒரு வார்தை வெளியிட முன் தொண்டையில் ஒர் நிமிடம்வைத்து யோசித்த பின் தான் பேச வேண்டும்.என்று. இன்று பேசில் மட்டுமல்ல இமெயில் எஸ் எம் எஸ் என்று அனைத்திலும் மிகவும் கவனம் தேவை.

    பதிலளிநீக்கு
  19. !!!!!!!!!!!!
    (unka kavaithaiyai entha varthayil parattuvathu endru theriyavillai...)


    - trichy syed

    பதிலளிநீக்கு
  20. !!!!!!!!!!!!
    (unka kavaithaiyai entha varthayil parattuvathu endru theriyavillai...)


    - trichy syed

    பதிலளிநீக்கு
  21. !!!!!!!!!!!!
    (unka kavaithaiyai entha varthayil parattuvathu endru theriyavillai...)


    - trichy syed

    பதிலளிநீக்கு
  22. கவிதை வரிகள் மிக அருமை.
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது