நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தகுமோ



வானத்தின் நிலப்பரப்பில்
பலவண்ண நிறங்களை நிரப்பி
வில்லாய் வளைந்திருந்த
வானவில்லை பார்த்ததும்
விசுக்கென்று வந்தது -இளம்
விதவைக்குக்கோபம்

சட்டென்று  பார்வையை உயர்த்தி
சஞ்சலத்தோடு பேசினாள் 
சற்றுநேரத்திற்கு
வந்துபோகும் உனக்கே
பலவர்ணங்களிலும்
பட்டாபிஷேகம்   

ஆனால்  என்னைப்பார்!

பலவண்ண நிறத்தையும்
துறந்து
பால்வண்ண வெள்ளையை
அணிந்து
மனதில் சோகங்களை
சுமந்து
பட்டுப்போனபூவாய்
பரிதவித்து நிற்கிறேன்
என்று...



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

21 கருத்துகள்:

  1. சட்டென்று பார்வையை உயர்த்தி
    சஞ்சலத்தோடு பேசினாள் சற்றுநேரத்திற்கு
    வந்துபோகும் உனக்கே பலவர்ணங்களிலும்
    பட்டாபிஷேகம்
    //
    நல்ல பெண்ணிய எழுத்தாளர் நீங்கள்

    பதிலளிநீக்கு
  2. /பலவண்ண நிறத்தையும் துறந்து
    பால்வண்ண வெள்ளையை அணிந்து
    மனதில் சோகங்களை சுமந்து
    பட்டப்போனபூவாய் பரிதவித்து நிற்கிறேன் என்று.../

    அருமை. அழகான கவிதைகள் படைக்கிறீர்கள். தவறாக நினைக்காதீர்கள். ஒரு முறை எழுத்துப் பிழை பாருங்கள். சாப்பாட்டில் கல் மாதிரி உருத்துகிறது

    //பட்டப்போனபூவாய் //

    பட்டுப்போன பூவாய்.

    பதிலளிநீக்கு
  3. /வெண்ணிற இரவுகள்....! கூறியது...
    நல்ல பெண்ணிய எழுத்தாளர் நீங்கள்/

    மிகுந்த மகிழ்ச்சி மிக்க சந்தோஷம்,
    வெண்ணிறமான கார்த்திக்...
    தாங்களின் தொடர் கருத்துக்களுக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  4. நாளுக்கு நாள் உங்கள் எழுத்தில் நல்ல முன்னேற்றம் காண்கிறேன். இன்னும் சிறப்பாக நல்ல படைப்புகள் தர வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  5. /அருமை. அழகான கவிதைகள் படைக்கிறீர்கள்./

    ரொம்ப ரொம்ப நன்றி வானம்பாடிகளார்.

    /தவறாக நினைக்காதீர்கள். ஒரு முறை எழுத்துப் பிழை பாருங்கள். சாப்பாட்டில் கல் மாதிரி உருத்துகிறது

    //பட்டப்போனபூவாய் //

    பட்டுப்போன பூவாய்.//

    சாப்பாட்டில் இருந்த கல்லை எடுத்துவிட்டேன் இனி கல்வராமல் பார்த்து அரிசி கலைகிறேன்.
    இதுபோன்று எழுத்துப்பிழைகளைச்சுட்டினால்தான் என்போன்றவர்களுக்கு அதுமிகுந்த ஊக்கத்தை தரும், தொடர்ந்து ஊக்கதரவேண்டுகிறேன்..மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  6. //பலவண்ண நிறத்தையும் துறந்து
    பால்வண்ண வெள்ளையை அணிந்து
    மனதில் சோகங்களை சுமந்து
    பட்டுப்போனபூவாய் பரிதவித்து நிற்கிறேன் என்று...//

    நன்றாக உள்ளது...

    பெண்ணின் வலி பெண்ணுக்குத்தான் புரியும்...

    பதிலளிநீக்கு
  7. அன்பு சகோதரி தற்போது தான் உங்கள் வலைத்தளத்தை கண்டேன் மிக அழகாக கருத்துகளை சொல்கிறீர்கள் வாழ்த்துகள். நீங்கள் விதவை வானவில்லைப் பார்த்து சொல்வது போல் எழுதப்பட்ட கவிதையில் விதவைக்கு வெண் புடவையை சொல்லியிருக்கிறீர்கள் அப்படிஎந்த சட்டமும் இஸ்லாதில் இல்லை. விதவையும் கலர் புடவை கட்டலாம்.

    ஒரு வேலை மாற்று மத சதோரிகளுக்கு சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கவிதை நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  8. வருக வருக தங்களின் வரவு நல்வரவாகட்டும் ராஜாகாமல்,

    மாற்று மத சதோரிகளுக்காகவும்தான்,

    இஸ்லாத்தில் கலர் கட்டலாம் வெள்ளைதான் கட்டவேண்டும் என்ற கட்டாயமில்லை

    இருந்தபோதும்
    நம்மிலும் பல இடங்களில்,
    இதுபோன்ற நிலைகள் இன்னும் மாறவில்லை என்பதுதானே உண்மை..

    தொடர்ந்துவாருங்கள்,
    கருத்துக்கள் தாருங்கள்;

    பதிலளிநீக்கு
  9. /S.A. நவாஸுதீன் கூறியது...
    நாளுக்கு நாள் உங்கள் எழுத்தில் நல்ல முன்னேற்றம் காண்கிறேன். இன்னும் சிறப்பாக நல்ல படைப்புகள் தர வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்./

    தொடர்ந்த தொடர்கருத்துக்கள்தந்து ஊக்கம் தரும்போது, இன்னும் நன்றாக செய்யவேண்டும் என்ற எண்ணங்கள் மேலோங்குகிறது,

    நவாஸண்ணா தாங்களின் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிகுந்த சந்தோஷம்.
    இறைவனின் துணைகொண்டு நல்லபடைப்புகளை தரமுயல்கிறேன் அண்ணா..

    பதிலளிநீக்கு
  10. நவாஸுதீன் அண்ணா, ஏன் இன்னும் பதிவுகள் எதுவும் போடவில்லை தாங்களின் தளத்தில்?

    பதிலளிநீக்கு
  11. அன்புடன் மலிக்கா கூறியது...
    நவாஸுதீன் அண்ணா, ஏன் இன்னும் பதிவுகள் எதுவும் போடவில்லை தாங்களின் தளத்தில்

    இன்னும் இரண்டொரு நாளில் போடலாம் என்று இருக்கிறேன்மா.

    பதிலளிநீக்கு
  12. /மா.குருபரன் கூறியது...
    //பலவண்ண நிறத்தையும் துறந்து
    பால்வண்ண வெள்ளையை அணிந்து
    மனதில் சோகங்களை சுமந்து
    பட்டுப்போனபூவாய் பரிதவித்து நிற்கிறேன் என்று...//

    நன்றாக உள்ளது...

    பெண்ணின் வலி பெண்ணுக்குத்தான் புரியும்.../

    முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குரு.

    தொடர்ந்து வாருங்கள்...

    பதிலளிநீக்கு
  13. /இன்னும் இரண்டொரு நாளில் போடலாம் என்று இருக்கிறேன்மா./

    ரொம்ப சந்தோஷம் நவாஸண்ணா. எழுத்துக்களால் தெளிவடைச்செய்வோம் சிந்தனைகளை,
    நம்முடவைகளையும் சேர்த்து...

    பதிலளிநீக்கு
  14. //பலவண்ண நிறத்தையும் துறந்து
    பால்வண்ண வெள்ளையை அணிந்து
    மனதில் சோகங்களை சுமந்து
    பட்டுப்போனபூவாய் பரிதவித்து நிற்கிறேன் என்று...
    //

    உள்ளத்தில் வெண்மை இல்லாதவன் உருவாக்கிய இந்த முறையை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்???

    அழகாக எழுதுகிறீர்கள்...வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  15. பலவண்ண நிறத்தையும் துறந்து
    பால்வண்ண வெள்ளையை அணிந்து
    மனதில் சோகங்களை சுமந்து
    பட்டுப்போனபூவாய் பரிதவித்து நிற்கிறேன் என்று...

    .... manasai kanamakkiya kavithai...

    pennin valiyai ankalukkum puriyavaitha valimaiyanan kavithai...

    Trichy Syed

    பதிலளிநீக்கு
  16. Kavithaivanil neenkal oru powurnami nilavaka pirakasippeerkal enpathu endudaiya nampikkai.... (Insha Allah)

    With congratulations...
    Trichy Syed

    பதிலளிநீக்கு
  17. //பலவண்ண நிறத்தையும் துறந்து
    பால்வண்ண வெள்ளையை அணிந்து//

    ஆனால் இப்போ சமுதாயம் நல்ல நிலைக்கு வந்துவிட்டது இப்பொழுதெல்லாம் வெண் புடவை காண்பது அரிது

    பதிலளிநீக்கு
  18. /உள்ளத்தில் வெண்மை இல்லாதவன் உருவாக்கிய இந்த முறையை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்???/

    எல்லாம் சுயநலந்தான்..

    /அழகாக எழுதுகிறீர்கள்...வாழ்த்துக்கள்/

    மிக்க நன்றி புலிகேசி

    பதிலளிநீக்கு
  19. /.... manasai kanamakkiya kavithai...
    மிக்க நன்றி

    pennin valiyai ankalukkum puriyavaitha valimaiyanan kavithai...

    புரிந்தும் புரியாமலிப்போருக்கு புரியட்டும் என்ற நப்பாசைதான்..

    Trichy Syed

    பதிலளிநீக்கு
  20. /மலர்வனம் கூறியது...
    Kavithaivanil neenkal oru powurnami nilavaka pirakasippeerkal enpathu endudaiya nampikkai.... (Insha Allah)

    With congratulations...
    Trichy Syed/

    ரொம்ப சந்தோஷம் இன்ஷாஅல்லாஹ் இறைவன் நாடினால் நன் எண்ணங்கள் நிறைவேறும்..
    மிக்க நன்றி....

    பதிலளிநீக்கு
  21. /ஆனால் இப்போ சமுதாயம் நல்ல நிலைக்கு வந்துவிட்டது இப்பொழுதெல்லாம் வெண் புடவை காண்பது அரிது/

    அப்படியே ஆகட்டும்,
    சமூகம் இன்னும் தெளிவுக்கு வரவேண்டும்... சரிதானே வசந்த்..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது