நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

விவாகம் ரத்துபெற்றோர்களே பெற்றோர்களே
நீங்கள் பெற்றபிள்ளைகளின்
மனக்குமுறலைக்கேளுங்கள்

உங்களின் வீண்பிடிவாதத்தாலும்
வரட்டு கவுரவத்தாலும் பாதிக்கப்படுவது
நீங்களில்லை நாங்கள்

உங்களுக்குள் நீங்கள் விட்டுக் கொடுத்து
வாழத்தவறுவதால் எங்களின் வாழ்க்கை
அனைத்தும் பட்டுபோகிறது

வாக்குவாதங்கள் எல்லை மீறிவிடுதால்
குடும்பம் கோர்ட்டுக்குபோகிறது
வீண்விவாதங்கள் ரத்தாகாததால்
விவாகம் ரத்தாகிறது

கும்மியடித்த குதுகலத்திற்கு நடுவே
கோடு ஒன்று கிழிக்கப்பட்டு
இப்புறம் பத்துநாள் அப்புறம் பத்துநாள் -என
நாங்கள் பந்ததாடப்படுகிறோம்

உங்களின் வாழ்வைகண்டு கண்டு
எங்களுக்கு வாழ்க்கையின்மேலேயே
பயம்கலந்த வெருப்புவருகிறது

உதாரணமாய் இருக்கவேண்டிய நீங்களே
இப்படி உருப்படியில்லாமல் நடந்தால்
எங்களின் நிலைமை என்னவாகும்

விட்டுகொடுப்பதால் யாரும் கெட்டுப்போவதில்லை
யாசித்துக்கேட்க்கிறோம் யோசித்துப்பாருங்கள்
ஒற்றுமையாய் இருந்து உணர்ந்துபாருங்கள்
எங்களையும் இணைத்து மகிழ்ச்சியாய் வாழுங்கள்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

16 கருத்துகள்:

 1. //உதாரணமாய் இருக்கவேண்டிய நீங்களே
  இப்படி உருப்படியில்லாமல் நடந்தால்
  எங்களின் நிலைமை என்னவாகும்//

  அதானே...

  பதிலளிநீக்கு
 2. விவாகரத்தான் குழந்தைகளின் எண்ணங்களை சிறப்பாக, அழகாக சொல்லியிருக்கின்றீர்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. என்ன கொடுமை சார் இது.
  போதாகுறைக்கு விவாக ரத்தும் ஒரு விழாபோல் சிலர் கொண்டடுகினம் இது எப்படி?

  பதிலளிநீக்கு
 4. //கும்மியடித்த குதுகலத்திற்கு நடுவே
  கோடு ஒன்று கிழிக்கப்பட்டு
  இப்புறம் பத்துநாள் அப்புறம் பத்துநாள் -என
  நாங்கள் பந்ததாடப்படுகிறோம்//


  உண்மை இன்றைய கால கட்டத்தில் இது போன்ற விவாகரத்துக்கள் பெருகிப் போய் இருக்கின்றன...

  பதிலளிநீக்கு
 5. மலிக்கா நச்ன்னு சொல்லியிருக்கிங்க

  பதிலளிநீக்கு
 6. வணக்கம்

  இங்கு பல இடங்களில் இருக்கும் பிரட்சனை விட்டுக்கொடுப்பதில் இல்லை யார் அடிமையாக இருப்பது என்பதில்தான்.

  இராஜராஜன்

  பதிலளிநீக்கு
 7. மல்லிக்கா இன்றைய யதார்த்தமாக விவாகரத்து ஆகிவிட்டாலும் மனம் கனக்கிறது.கவிதையை சம்பந்தப்பட்டவர்கள் யாராவது பார்த்தால் நல்லது.

  பதிலளிநீக்கு
 8. /ராஜவம்சம் கூறியது...
  ரைட்/
  ராஜவம்சம் நன்றி..


  /பிரியமுடன்...வசந்த் கூறியது...
  //உதாரணமாய் இருக்கவேண்டிய நீங்களே
  இப்படி உருப்படியில்லாமல் நடந்தால்
  எங்களின் நிலைமை என்னவாகும்//

  அதானே.../

  அதானே, நாங்களும் அதே அதானே..
  நன்றி வசந்த்

  பதிலளிநீக்கு
 9. /இராகவன் நைஜிரியா கூறியது...
  விவாகரத்தான் குழந்தைகளின் எண்ணங்களை சிறப்பாக, அழகாக சொல்லியிருக்கின்றீர்கள். வாழ்த்துகள்/

  வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
  இராகவன் சார்..

  பதிலளிநீக்கு
 10. /தியாவின் பேனா கூறியது...
  என்ன கொடுமை சார் இது.
  போதாகுறைக்கு விவாக ரத்தும் ஒரு விழாபோல் சிலர் கொண்டடுகினம் இது எப்படி?/

  அதெல்லாம் வேற நடக்குதா? கொடுமையோ கொடுமைதாங்க.. நன்றி தியா..

  பதிலளிநீக்கு
 11. /உண்மை இன்றைய கால கட்டத்தில் இது போன்ற விவாகரத்துக்கள் பெருகிப் போய் இருக்கின்றன.../

  ஆமாம் புலிகேசி,
  பெருகிவருவதனால்தான் தான் மனம் பொருக்கமுடிவதில்லை, பாவம் பிஞ்சுகளை நினைத்து..
  நன்றி புலிகேசி......

  பதிலளிநீக்கு
 12. sarusriraj கூறியது...
  மலிக்கா நச்ன்னு சொல்லியிருக்கிங்க.

  நன்றி சாருக்கா..

  /வானம்பாடிகள் கூறியது...
  சுருக் உண்மை. சொன்னவிதம் அருமை./

  ரத்னசுருக்கமான கருத்து, மிக்க நன்றி வானம்பாடிகள்..

  பதிலளிநீக்கு
 13. விட்டுகொடுப்பதால் யாரும் கெட்டுப்போவதில்லை


  Proverb mathiri Nachendru irrunthathu....

  Trichy Syed

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது