நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஆண்மகனே!


வாழ்வென்னும் வசந்தத்தை நீ
வசப்படுத்திக்கொள்ள வாழ்விடமே
வர"தட்சணை" கேட்ப்பது வேதனையாய் இருக்கிறது

சுகமாய் வாழவருபவள்
உன்சோகங்களையும் உன்சுமைகளையும்
உன்வம்சத்தின் வலிகளையும் சுமப்பதற்கு
கன்னியாய் வருபவள் கைகூலி தரவேண்டுமா?

கெளரவத்திற்காக திருமணமா?
கொடுக்கல் வாங்களில்தான்
இருமனங்கள் இணையனுமா?

அற்புதமான வாழ்க்கைக்கு வரதட்சணைவேண்டுமா?
ஆனந்தமகிழ்ச்சிக்கு ஆண்மகனைஅடகுவைக்கவேண்டுமா?
இதயங்களை இணைப்பதற்கு
இலவச இணைப்புகள் தரவேண்டுமா?

ஆண்மகன் என்பவன் அன்பிலும்அனைத்திலும்
பிறருக்கு அள்ளி அள்ளி வழங்கப்பிறந்தவன்
அடுத்தவரிடம் கையேந்தி வாங்கப்பிறந்தவனல்ல!

   ஆணினமே நீ!!

நீ கொடுத்து மணந்தால் அது மனவாழ்க்கை
அதுவே நீ பெற்று மணந்தால் வெரும் மணசேர்க்கை
அன்போடு கொடுத்து மங்கையை மனைவியாக்கு
மனநிறைவோடு வாழ்க்கையை சிறப்பாக்கு......

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

37 கருத்துகள்:

  1. அன்பு தோழி அஸ்ஸலாமு அலைக்கும் நலமா அருமையான கவிதை. ஆணினம் சிந்திக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  2. /feroza கூறியது...
    அன்பு தோழி அஸ்ஸலாமு அலைக்கும் நலமா அருமையான கவிதை. ஆணினம் சிந்திக்கட்டும்/

    வஅலைக்குமுஸ்ஸலாம், எப்படி இருக்கீங்க பிரோஷா, ரொம்ப நாளாச்சிப்பா உங்ககூட பேசி,

    சந்தோஷமாக இருக்கு, தாங்களின் கருத்துக்கு மிக்க நன்றி,
    சிந்தித்துசெயல்படுத்துவார்கள் என்ற நம்பிக்கைதான் தோழி...
    /

    பதிலளிநீக்கு
  3. //நீ கொடுத்து மணந்தால் அது மனவாழ்க்கை

    அதுவே நீ பெற்று மணந்தால் வெரும் மணசேர்க்கை
    //
    அற்புதமான வரிகள் தோழியே .............இது என்ன வியாபாரமா

    பதிலளிநீக்கு
  4. //நீ கொடுத்து மணந்தால் அது மனவாழ்க்கை

    அதுவே நீ பெற்று மணந்தால் வெரும் மணசேர்க்கை
    //
    அற்புதமான வரிகள் தோழியே .............இது என்ன வியாபாரமா

    பதிலளிநீக்கு
  5. //வாழ்வென்னும் வசந்தத்தை நீ
    வசப்படுத்திக்கொள்ள வாழ்விடமே
    வர"தட்சணை" கேட்ப்பது வேதனையாய் இருக்கிறது//

    வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ததற்கு தண்டனையாக "வரதட்சணை கொடுமை" சட்டம் பாயப்பட்டு வளர்த்து ஆளாக்கிய தாய்தந்தையரையும் உடன்பிறந்தோரையும் சிறையில் அடைக்கும் கொடுமைகளும் நம் நாட்டில் நடந்துகொண்டிருக்கின்றது என்பதை தங்களுக்கு தெருவிக்க விரும்புகிறேன்...

    வரதட்சணை கொடுமையினால் பாதிக்கப்பட்ட(பட்டுக்கொண்டிருக்கின்ற) பல சகோதிரகள் நம் நாட்டில் உண்டு அதேசமயம் 498ஏ என்னும் வரதட்சணை கொடுமை சட்டத்தை தவறாக துஷ்பிரோயம் செய்து இதுவரைக்கும் சுமார் 1,50,000 பெண்கள் விசாரனை கைதிகளாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் (எனது தாயார் மற்றும் எனது தம்பி நண்பருடைய தாயர் உட்பட)
    மற்றும் ஆண்டொன்றுக்கு சுமார் 20,000 ஆயிரம் குழந்தைகள் தந்தையின் அரவனைப்பில்லாமல் வளர்கின்றது (எனது குழந்தை உட்பட)...

    இதுபோல் கொடுமைகளையும் தங்களுக்கு தெருவிப்பதே என் நோக்கம்...

    அன்புடன்,

    தமிழ். சரவணன்

    பதிலளிநீக்கு
  6. ஆண்மகனும், பெற்றோர்களும் திருந்த வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் பதிவுகளில் முத்தாய்ப்பாய் இது அமைந்துள்ளது மலிக்கா. அருமை அருமை. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. மிக அருமை..! சிந்திக்க ஆரம்பிக்க வேண்டிய தருணமிது.!

    பதிலளிநீக்கு
  9. //
    நீ கொடுத்து மணந்தால் அது மனவாழ்க்கை
    அதுவே நீ பெற்று மணந்தால் வெரும் மணசேர்க்கை
    அன்போடு கொடுத்து மங்கையை மனைவியாக்கு
    மனநிறைவோடு வாழ்க்கையை சிறப்பாக்கு......
    //


    சிந்தனைக்குரிய கவிதை நல்லாயிருக்கு

    பதிலளிநீக்கு
  10. எவ்வளவு காலமாய் நாங்களும் புலம்புறோம் மல்லிக்கா.யாருக்காவது காதில கேட்டிச்சா.கேட்டா நல்லாருக்கும்.வலித்த உணர்வுகள் அப்படியே வரிகளில்.

    பதிலளிநீக்கு
  11. எனது நண்பர்களை பார்த்துவிட்டுக் கூறுகிறேன். ஆண்மகன்கள் உங்களைப் போன்ற பெண்கள் விரும்பும் வகையில் மாறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். முழுமையான மாற்றத்திற்கு உங்களின் தொடர்ந்த எழுத்துக்களும் எண்ணங்களும் தேவை.

    பதிலளிநீக்கு
  12. நான் படித்த கவிதை ஒன்று இதற்கு பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    உயிருள்ள ஒரு பொருளுக்கு
    உயிரற்ற பல பொருட்கள் இலவசம்
    ‘வரதட்சணை’

    நல்ல இடுகை கவிதையாய்....

    பதிலளிநீக்கு
  13. //மறக்காம ஓட்டு போட்டுங்க //

    ஓட்டு போட்டுட்டேனுங்கோ...1/1...நீங்க ஓட்டு போடலையா?

    இதை பப்ளிஸ் பண்ணாதிங்க...எனக்கு விளம்பரம் பிடிக்காது...

    பதிலளிநீக்கு
  14. சமுதாயம் திருந்த வேண்டும். திருத்துவதில் பெரும் பங்கு பெண்களிடமும் இருக்கிறது.

    முன்பைவிட இப்போது (ஓரிறை சிந்தனை வந்த பிறகு) ஓரளவு தெளிவடைந்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். பலர் அறியாமை காலத்தில் வாங்கிய வரதட்சணையை திரும்ப கொடுத்ததையும் கேள்விப்படுகிறோம்.

    பதிலளிநீக்கு
  15. //நீ கொடுத்து மணந்தால் அது மனவாழ்க்கை//

    அருமை சகோதரி

    பதிலளிநீக்கு
  16. எங்கள் பக்கம் மட்டும் தவறு இல்லை உங்கள் பக்கமும் உள்ளது

    வரதட்சனைக்கு உரம் போடுபவர் தாய் என்ற பென்னும் சகோதரி என்ற பென்னும் தான்

    (எங்காவது கேல்வி பட்டிருக்கிறீர்கள தகப்பனும் சகோதரனும் காரனம் என்று)

    தயவு செய்து நான் ஆண்வர்கதுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைக்கவேண்டாம்


    கொடுப்பதை நிருத்திவிடு வாங்குபவன் கானாமல் போய்விடுவான் பிச்சையானாலும் லஜ்ஜமானாலும் கொடுரவரதச்சனையானாலும்

    பதிலளிநீக்கு
  17. அருமையான வரிகள். முற்றிலுமாக 498ஏ ஒழியவேண்டும். வாழ்த்துக்கள் தோழி.

    http://thisaikaati.blogspot.com

    பதிலளிநீக்கு
  18. /அற்புதமான வரிகள் தோழியே .............இது என்ன வியாபாரமா/

    வியாபரமாகத்தான் நடக்குது, கருத்துக்கு நன்றி கார்த்திக்..

    பதிலளிநீக்கு
  19. /வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ததற்கு தண்டனையாக "வரதட்சணை கொடுமை" சட்டம் பாயப்பட்டு வளர்த்து ஆளாக்கிய தாய்தந்தையரையும் உடன்பிறந்தோரையும் சிறையில் அடைக்கும் கொடுமைகளும் நம் நாட்டில் நடந்துகொண்டிருக்கின்றது என்பதை தங்களுக்கு தெருவிக்க விரும்புகிறேன்...

    வரதட்சணை கொடுமையினால் பாதிக்கப்பட்ட(பட்டுக்கொண்டிருக்கின்ற) பல சகோதிரகள் நம் நாட்டில் உண்டு அதேசமயம் 498ஏ என்னும் வரதட்சணை கொடுமை சட்டத்தை தவறாக துஷ்பிரோயம் செய்து இதுவரைக்கும் சுமார் 1,50,000 பெண்கள் விசாரனை கைதிகளாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் (எனது தாயார் மற்றும் எனது தம்பி நண்பருடைய தாயர் உட்பட)
    மற்றும் ஆண்டொன்றுக்கு சுமார் 20,000 ஆயிரம் குழந்தைகள் தந்தையின் அரவனைப்பில்லாமல் வளர்கின்றது (எனது குழந்தை உட்பட)...

    இதுபோல் கொடுமைகளையும் தங்களுக்கு தெருவிப்பதே என் நோக்கம்...

    அன்புடன்,

    தமிழ். சரவணன்/


    தாங்களின் கருத்துக்களை கண்டு மனம் வேதனை அடைந்தது, பெண்களிலும் இதுபோன்று இருக்கிறார்கள் என நினைக்கும்போது வருத்தமாக உள்ளது,

    இதற்குகாரணம் மணவாழ்க்கையில் மனம் ஒன்றிப்போகாததுதான்,
    கணவன் மனைவிக்கிடையில் நடக்கும் போராட்டத்தில் பாவம் குழந்தைகள்தான் பாடாய்படுகிறார்கள்
    இதை உணர்வதற்கு பெண்களே சிலசமயம் வருந்துவதில்லை என்பதுதான் வேதனையானவிசயம்.

    தன்சுகங்களைமட்டுமே பெரிதெனநினைத்து மற்றவைகளை ஏளனமாக நினைக்கும் உள்ளங்களாக மாறிவருகிறது மனங்கள்.

    தவறு யார்செய்தபோதும் தண்டனை நிச்சயம், இன்றில்லாவிடில் என்றைக்காவது ஒருநாள்..

    சகோதரரே, தங்களுக்கு ஆறுதல் சொல்வதால் ஆறிடாது மனக்காயங்கள், இருந்தபோதும் இறைவன்மேல் நம்பிக்கையுடன் இருங்கள் நிச்சியம் அனைத்தும் நன்மையாக முடியும்.

    சட்டத்தை தவறாக பயன்படுத்தினாலும்
    சத்தியமே வெல்லும் என்ற உறுதியுடன் இருந்தால் சகலமும் வெல்லும்....

    பதிலளிநீக்கு
  20. .வானம்பாடிகள் கூறியது...
    ஹா. அருமை./

    ஹா அருமை. எது வானம்பாடிகளாரே
    என் படைப்பா தமிழ்சரவணனின் கருத்துக்களா?

    பதிலளிநீக்கு
  21. /ஷ‌ஃபிக்ஸ்/Suffix கூறியது...
    ஆண்மகனும், பெற்றோர்களும் திருந்த வேண்டும்/

    நிச்சியமாக ஷஃபி, ஒருகைதட்டினால் ஓசைவராது இருகைகளுமே தட்டவேண்டும்..

    பதிலளிநீக்கு
  22. /S.A. நவாஸுதீன் கூறியது...
    உங்கள் பதிவுகளில் முத்தாய்ப்பாய் இது அமைந்துள்ளது மலிக்கா. அருமை அருமை. வாழ்த்துக்கள்/

    ரொம்ப ரொம்ப சந்தோஷம் நவாஸ் அண்ணா, வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

    / பிரியமுடன்...வசந்த் கூறியது...
    //நீ கொடுத்து மணந்தால் அது மனவாழ்க்கை//

    அருமை சகோதரி/

    மிக்க நன்றி பிரியமான சகோதரா..

    பதிலளிநீக்கு
  23. /lemurya கூறியது...
    மிக அருமை..! சிந்திக்க ஆரம்பிக்க வேண்டிய தருணமிது.!/

    வாங்க வாங்க lemurya,தங்களின் முதல் வருகைக்கும் அருமையான கருத்திற்கும் மிக நன்றி,

    சிந்திக்க ஆரம்பிச்சாச்சில்ல அப்போ சாதிச்சிடலாம்.

    அடிக்கடி வாங்க கருத்துக்களை தாங்க...

    பதிலளிநீக்கு
  24. /தியாவின் பேனா கூறியது...
    //
    நீ கொடுத்து மணந்தால் அது மனவாழ்க்கை
    அதுவே நீ பெற்று மணந்தால் வெரும் மணசேர்க்கை
    அன்போடு கொடுத்து மங்கையை மனைவியாக்கு
    மனநிறைவோடு வாழ்க்கையை சிறப்பாக்கு......
    //


    சிந்தனைக்குரிய கவிதை நல்லாயிருக்கு//

    மிக்க மகிழ்ச்சி தியா..

    பதிலளிநீக்கு
  25. //துவே நீ பெற்று மணந்தால் வெரும் மணசேர்க்கை//

    பணத்திற்காக சேரும் பணசேர்க்கை........

    பதிலளிநீக்கு
  26. அன்பு தோழி மலிக்கா அருமையான வரிகள் . வாழ்த்துக்கள் கவிதையை படித்துவிட்டாவது மாற்றம் வருகிறதா பார்ப்போம் .

    பதிலளிநீக்கு
  27. /ஹேமா கூறியது...
    எவ்வளவு காலமாய் நாங்களும் புலம்புறோம் மல்லிக்கா.யாருக்காவது காதில கேட்டிச்சா.கேட்டா நல்லாருக்கும்.வலித்த உணர்வுகள் அப்படியே வரிகளில்./

    கேட்டுவிடும் என்றநம்பிக்கையிலதான்
    ஹேமா எழுதுகிறோம், இதற்கான மாற்றங்களும் வந்துகொண்டேதான் இருக்குகிறது, இறைவன் அருளால் இன்னும் முழுமையடைய பிராத்திப்போம்..

    பதிலளிநீக்கு
  28. / r.selvakkumar கூறியது...
    எனது நண்பர்களை பார்த்துவிட்டுக் கூறுகிறேன். ஆண்மகன்கள் உங்களைப் போன்ற பெண்கள் விரும்பும் வகையில் மாறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். முழுமையான மாற்றத்திற்கு உங்களின் தொடர்ந்த எழுத்துக்களும் எண்ணங்களும் தேவை/

    வாருங்கள் செல்வா, தங்களின்முதல்வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி,

    மாற்றங்க வந்துகொண்டிருப்பதை அறியும்போது மனம் சந்தோஷமடைகிறது, இன்னும் முழுமையான மனநிறைவுவரும்வரை
    எழுத்துக்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும் இறைவன் உதவியால்,

    எங்கள் எழுத்துக்களும் எண்ணங்களும் தொடர்ந்து தொடர்வதற்கு தங்களைப்போன்ற அனைவரும் ஊக்கம்தரவேண்டும். மிக்க நன்றி மீண்டும் வருக..

    பதிலளிநீக்கு
  29. / க.பாலாசி கூறியது...
    உயிருள்ள ஒரு பொருளுக்கு
    உயிரற்ற பல பொருட்கள் இலவசம்
    ‘வரதட்சணை’/

    நல்ல கவிதை பாலாஜி..

    /நல்ல இடுகை கவிதையாய்..../

    மிக்க நன்றி மீண்டும் நன்றி பாலாஜி,
    ஓட்டுபோட்டுவிட்டு அதை விளம்பரபடுத்தவேண்டாமென்று விளம்பரம் தேடிக்கொண்டதற்கும்சேர்த்துத்தான்..

    பாலாஜி ஓட்டு போட்டீங்களா 1/1 தானா? கள்ளஓட்டும் போட்டுங்க நான் யாரிடமும் சொல்லமாட்டேன், சரியா!

    பதிலளிநீக்கு
  30. /பீர் | Peer கூறியது...
    சமுதாயம் திருந்த வேண்டும். திருத்துவதில் பெரும் பங்கு பெண்களிடமும் இருக்கிறது./

    நிச்சியமாக பெண்களிடமும் இதுப்போன்ற போக்குகள் மாறவேண்டும் தூண்டுவதில்தானே தீபம் எரிகிறது, கேட்டால் கெளரவமாம் அதற்காகத்தானாம்.

    /முன்பைவிட இப்போது (ஓரிறை சிந்தனை வந்த பிறகு) ஓரளவு தெளிவடைந்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். பலர் அறியாமை காலத்தில் வாங்கிய வரதட்சணையை திரும்ப கொடுத்ததையும் கேள்விப்படுகிறோம்/

    நிறையபேர் எங்கஊரிலேயே திருப்பிக்கொடுத்துவிட்டார்கள்,
    வாங்குவதில்லையென்ற உறுதியோடும் இருக்கிறார்கள், இறைவனின் பேரருளால் நிச்சயம் மீதமும் மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை...

    பதிலளிநீக்கு
  31. /ராஜவம்சம் கூறியது...
    எங்கள் பக்கம் மட்டும் தவறு இல்லை உங்கள் பக்கமும் உள்ளது
    வரதட்சனைக்கு உரம் போடுபவர் தாய் என்ற பென்னும் சகோதரி என்ற பென்னும் தான்/

    இல்லையென்று சொல்லவில்லை தவறை யார்செய்தபோதும் அதை திருத்திக்கொள்ளச்சொல்வேண்டும்

    (எங்காவது கேல்வி பட்டிருக்கிறீர்கள தகப்பனும் சகோதரனும் காரனம் என்று)

    மீண்டும் அதே பதில் தூண்டாமல் தீபம் சுடர்விட்டு எறியாது, கண்டும் காணமலும் இருந்துவிட்டால் தவறுக்கு துணைபோகவில்லையென்று அர்த்தமா?

    /தயவு செய்து நான் ஆண்வர்கதுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைக்கவேண்டாம்/

    அப்படியெல்லாம் நினைக்கவில்லை இருந்தாலும் வாங்குவதற்கு வக்காலத்து வாங்கிவிடவேண்டாம் [ஹ ஹ]


    \கொடுப்பதை நிருத்திவிடு வாங்குபவன் கானாமல் போய்விடுவான் பிச்சையானாலும் லஜ்ஜமானாலும் கொடுரவரதச்சனையானாலும்\

    சரியான கருத்து.. மிக்க நன்றி ராஜவம்சம்...

    பதிலளிநீக்கு
  32. /ரோஸ்விக் கூறியது...
    அருமையான வரிகள். முற்றிலுமாக 498ஏ ஒழியவேண்டும். வாழ்த்துக்கள் தோழி./

    ஒழிந்துவிடும் என்று நம்புவோம்..வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மிக நன்றி ரோஸ்விக்..

    பதிலளிநீக்கு
  33. /புலவன் புலிகேசி கூறியது...
    //துவே நீ பெற்று மணந்தால் வெரும் மணசேர்க்கை//

    பணத்திற்காக சேரும் பணசேர்க்கை......../

    உண்மைதான் புலிகேசி..


    /sarusriraj கூறியது...
    அன்பு தோழி மலிக்கா அருமையான வரிகள் . வாழ்த்துக்கள் கவிதையை படித்துவிட்டாவது மாற்றம் வருகிறதா பார்ப்போம்../

    மாற்றங்கள் வரவேண்டும் என்றநம்பிக்கையில்தான் பலகன்னிகள்
    எதிர்பார்த்துகாத்திருக்கிறார்கள். நிச்சயம் மாற்றம் வருமென்று நாமும் நம்புவோம் தோழி..

    பதிலளிநீக்கு
  34. சுகமாய் வாழவருபவள்
    உன்சோகங்களையும் உன்சுமைகளையும்
    உன்வம்சத்தின் வலிகளையும் சுமப்பதற்கு
    கன்னியாய் வருபவள் கைகூலி தரவேண்டுமா?

    Arthamulla varikal....

    Trichy Syed

    பதிலளிநீக்கு
  35. /Arthamulla varikal..../

    /சுகமாய் வாழவருபவள்
    உன்சோகங்களையும் உன்சுமைகளையும்
    உன்வம்சத்தின் வலிகளையும் சுமப்பதற்கு
    கன்னியாய் வருபவள் கைகூலி தரவேண்டுமா?
    Trichy Syed./

    தொடர்வருகைக்கு மிக்க நன்றி, திருச்சி சையத்...

    பதிலளிநீக்கு
  36. Nice one. But coin has two sides. If you write poetries about the males who dint get dowries and getting affected by dowry law!!

    this is 2010. ratio of getting dowry is getting coming down. ratio of cases being filed is increasing.

    I wish to quote the speech by sarguna pandiyan, head of women welfare, last week. Most of the dowry cases are mere false cases filed on hatred and parent's involvement.

    konjam pathu kurai sollungakka. rendu pakkamume ottaikal irukku!

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது