நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எதிர்மறை



மாடிவீடு சொகுசுகாரு! பளபளக்கும் டிரஸு!
பட்டுபோன்ற சூவு!
பந்தாவான பேக்கு! 
பசித்தால் சாக்கிலேட்டு கேக்கு!
போதாததற்கு பொசுபொசுன்னுசோறு!
வாசலுக்கு வந்தவுடன் 
அழுது அடம்பிடித்தது குழந்தை
ஸ்கூலுக்கு போகமாட்டேன்
ஸ்கூலுக்கு போகமாட்டேனென்று!

குடிசைவீடு! ஆங்காங்கே 
கரையான்கூடு
ஒட்டுபோட்ட பாவடை! 
சுறுங்கிபோனச் சட்டை!
பசியெடுத்தால் பழையகஞ்சிசோறு! 
அதுவும் இல்லையின்னா 
ஊசிப்போன பன்னு!
கையில் மஞ்சபையி! 
காதறுந்த செருப்பு!
வாசலில்வந்து நின்னு 
வம்புபண்ணிஅழுதது குழந்தை
பள்ளிக்கூடம் போறேம்மா!
பள்ளிக்கூடம்போறேமான்னு..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

15 கருத்துகள்:

  1. கவிதை ரொம்ப நல்லா இருக்கு மலிக்கா

    பதிலளிநீக்கு
  2. அடிக்கடி நம்ம பக்கமும் வந்து பார்த்தால் தானே தெரியும் , நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்னு.....
    நேரம் இருக்கும் போது வாங்க... எந்த நேரத்திலும் கதவுகள் அடைக்கப்படுவதில்லை..

    பதிலளிநீக்கு
  3. வாழ்க்கையின் முரண்களை அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.

    வசதி இருந்தாலே படிப்பு வேண்டாம் என நினைக்க வைக்குமோ?

    பதிலளிநீக்கு
  4. //கவிதை ரொம்ப நல்லா இருக்கு மலிக்கா//

    ரொம்ப ரொம்ப சந்தோஷம் நவாஸுதீன்.

    பதிலளிநீக்கு
  5. //அடிக்கடி நம்ம பக்கமும் வந்து பார்த்தால் தானே தெரியும் , நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்னு.....
    நேரம் இருக்கும் போது வாங்க... எந்த நேரத்திலும் கதவுகள் அடைக்கப்படுவதில்லை//

    வந்துபார்த்தோமுங்க ரொம்ப நல்லவே பார்த்தும் கேட்டும் வெட்டிருக்கீங்க பிரபா.

    பதிலளிநீக்கு
  6. //வாழ்க்கையின் முரண்களை அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.//

    மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி சார்.

    //வசதி இருந்தாலே படிப்பு வேண்டாம் என நினைக்க வைக்குமோ//

    அப்படித்தான் நிறைய இடங்களில் நடக்கிறது,
    இது கண்ட கேட்ட காட்சிகள்,
    அது மனதில் பதிந்ததால் எழுந்த எழுத்துக்கள் இவை.

    பதிலளிநீக்கு
  7. அருமை! அருமை! நல்ல ஒப்பீடு. நான் போனமுறை கேட்ட "காப்பி" போட்டோ காப்பி! இப்ப வேண்டாம் நான் கூகிள் வழி பார்த்திட்டேன் .

    பதிலளிநீக்கு
  8. அங்க நாலு, இங்க நாலு, நச்சுன்னு ஒரு கருத்து, எளிமையான நடையில் சொல்லி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  9. //அருமை! அருமை! நல்ல ஒப்பீடு./

    ரொம்ப சந்தோஷம்

    /நான் போனமுறை கேட்ட "காப்பி" போட்டோ காப்பி! இப்ப வேண்டாம் நான் கூகிள் வழி பார்த்திட்டேன்//

    ஓகோ அப்படியா நான் மின்னல்காப்பியோன்னு நினைச்சேன்.

    பதிலளிநீக்கு
  10. //அங்க நாலு, இங்க நாலு, நச்சுன்னு ஒரு கருத்து, எளிமையான நடையில் சொல்லி இருக்கீங்க//

    எல்லாம் தாங்களைப்போன்றோரின் ஊக்கம்தான் ஷஃபி,

    தொடர்ந்து வாருங்கள்
    கருத்துக்களின் வழியே
    ஊக்கம் தாருங்கள்

    பதிலளிநீக்கு
  11. ஒப்பீட்டு கவிதை சில வருத்தத்தை ஏற்படுத்தி செல்கிறது....

    உண்மையும் அதுவே....

    பதிலளிநீக்கு
  12. //கையில் மஞ்சபையி காதறுந்த செருப்பு
    வசலில்வந்து நின்னு வம்புபண்ணிஅழுதது குழந்தை
    பள்ளிக்கூடம் போறேம்மா
    பள்ளிக்கூடம்போறேமான்னு..
    //

    புரட்டி போடுகிறது உங்கள் படைப்பு .............

    முரணில் தான் இலக்கியம் இருக்கிறது .............

    தொடருங்கள் .......

    பதிலளிநீக்கு
  13. நீங்கள் எழுதியதில் நான் மிகவும் ரசித்த கவிதை.........

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது