மாடிவீடு சொகுசுகாரு! பளபளக்கும் டிரஸு!
பட்டுபோன்ற சூவு!
பந்தாவான பேக்கு!
பசித்தால் சாக்கிலேட்டு கேக்கு!
போதாததற்கு பொசுபொசுன்னுசோறு!
வாசலுக்கு வந்தவுடன்
அழுது அடம்பிடித்தது குழந்தை
ஸ்கூலுக்கு போகமாட்டேன்
ஸ்கூலுக்கு போகமாட்டேனென்று!
குடிசைவீடு! ஆங்காங்கே
கரையான்கூடு
ஒட்டுபோட்ட பாவடை!
சுறுங்கிபோனச் சட்டை!
பசியெடுத்தால் பழையகஞ்சிசோறு!
அதுவும் இல்லையின்னா
ஊசிப்போன பன்னு!
கையில் மஞ்சபையி!
காதறுந்த செருப்பு!
வாசலில்வந்து நின்னு
வம்புபண்ணிஅழுதது குழந்தை
பள்ளிக்கூடம் போறேம்மா!
பள்ளிக்கூடம்போறேமான்னு..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
கவிதை ரொம்ப நல்லா இருக்கு மலிக்கா
பதிலளிநீக்குஅடிக்கடி நம்ம பக்கமும் வந்து பார்த்தால் தானே தெரியும் , நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்னு.....
பதிலளிநீக்குநேரம் இருக்கும் போது வாங்க... எந்த நேரத்திலும் கதவுகள் அடைக்கப்படுவதில்லை..
வாழ்க்கையின் முரண்களை அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.
பதிலளிநீக்குவசதி இருந்தாலே படிப்பு வேண்டாம் என நினைக்க வைக்குமோ?
//கவிதை ரொம்ப நல்லா இருக்கு மலிக்கா//
பதிலளிநீக்குரொம்ப ரொம்ப சந்தோஷம் நவாஸுதீன்.
//அடிக்கடி நம்ம பக்கமும் வந்து பார்த்தால் தானே தெரியும் , நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்னு.....
பதிலளிநீக்குநேரம் இருக்கும் போது வாங்க... எந்த நேரத்திலும் கதவுகள் அடைக்கப்படுவதில்லை//
வந்துபார்த்தோமுங்க ரொம்ப நல்லவே பார்த்தும் கேட்டும் வெட்டிருக்கீங்க பிரபா.
//வாழ்க்கையின் முரண்களை அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.//
பதிலளிநீக்குமிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி சார்.
//வசதி இருந்தாலே படிப்பு வேண்டாம் என நினைக்க வைக்குமோ//
அப்படித்தான் நிறைய இடங்களில் நடக்கிறது,
இது கண்ட கேட்ட காட்சிகள்,
அது மனதில் பதிந்ததால் எழுந்த எழுத்துக்கள் இவை.
அருமை! அருமை! நல்ல ஒப்பீடு. நான் போனமுறை கேட்ட "காப்பி" போட்டோ காப்பி! இப்ப வேண்டாம் நான் கூகிள் வழி பார்த்திட்டேன் .
பதிலளிநீக்குஅங்க நாலு, இங்க நாலு, நச்சுன்னு ஒரு கருத்து, எளிமையான நடையில் சொல்லி இருக்கீங்க.
பதிலளிநீக்கு//அருமை! அருமை! நல்ல ஒப்பீடு./
பதிலளிநீக்குரொம்ப சந்தோஷம்
/நான் போனமுறை கேட்ட "காப்பி" போட்டோ காப்பி! இப்ப வேண்டாம் நான் கூகிள் வழி பார்த்திட்டேன்//
ஓகோ அப்படியா நான் மின்னல்காப்பியோன்னு நினைச்சேன்.
//அங்க நாலு, இங்க நாலு, நச்சுன்னு ஒரு கருத்து, எளிமையான நடையில் சொல்லி இருக்கீங்க//
பதிலளிநீக்குஎல்லாம் தாங்களைப்போன்றோரின் ஊக்கம்தான் ஷஃபி,
தொடர்ந்து வாருங்கள்
கருத்துக்களின் வழியே
ஊக்கம் தாருங்கள்
ஒப்பீட்டு கவிதை சில வருத்தத்தை ஏற்படுத்தி செல்கிறது....
பதிலளிநீக்குஉண்மையும் அதுவே....
//கையில் மஞ்சபையி காதறுந்த செருப்பு
பதிலளிநீக்குவசலில்வந்து நின்னு வம்புபண்ணிஅழுதது குழந்தை
பள்ளிக்கூடம் போறேம்மா
பள்ளிக்கூடம்போறேமான்னு..
//
புரட்டி போடுகிறது உங்கள் படைப்பு .............
முரணில் தான் இலக்கியம் இருக்கிறது .............
தொடருங்கள் .......
அருமையான முரண்பாடுங்க..
பதிலளிநீக்குநீங்கள் எழுதியதில் நான் மிகவும் ரசித்த கவிதை.........
பதிலளிநீக்குhttp://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=5677
பதிலளிநீக்கு