நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பணமா -பாசமா


பணம் பணம் பணம் -இதுவே
தினமும் மனிதன் ஓதும் மாயமந்திரம்
பணம் இல்லையேல் அவன் பிணம் -இது
பழமொழிக்காக சொல்லித்திறியும்
சாத்தான் வேதம்

ஓட்டம் ஓட்டம் வாழ்க்கை முழுவதும்
ஓயாதஓட்டம்
பணத்தை தேடியே வாழ்வை தொலைக்க
வரிந்துகட்டிகொண்டு ஓட்டம்
பணத்தை குவித்ததும் பாசத்தைத்தொலைக்கும்
சில பச்சோந்திகளின் கூட்டம்

பாசங்கள் கூட பணத்தின்முன்னே
பணிந்துபோகும் அவலம்
பணத்திற்காக பாசத்தைக்கூட
தவிர்த்துக்கொள்ளும் இன்றைய காலம்

பணம்வரும் முன்னே மனம் நிறைந்தஅமைதி
பணம்வந்த பின்னே தொலையும் மனநிம்மதி
பணத்தின் முன்னே பாசம் சரணாகதி
பணம் வந்தபின்னே பாசம் கசந்துபோவதோ விதி

இறைவன் பணத்தை படைத்திருந்தால்
இதயம் வைத்திருப்பான்- அதில்
இரக்கத்தையும் இணைத்திருப்பான்
இதை மனிதனல்லாவா படைத்தான் அதுதான்
இதயத்தை இணைக்க தவறிவிட்டான் -அதில்
இரக்கம் வைக்கவும் மறந்துவிட்டான்.

காகிதபணத்திற்கு

ஏழைகளில் கதறல் கேட்குமா?
மனிதர்களின் பாசம்தான் புரியுமா?

மனிதர்களுக்கு பணம் அவசியம்
அதைவிட பாசம் முக்கியம்
பணம் நம்மைவிட்டுப்போனால்
திரும்பவந்துவிடும் -ஆனால்
பாசம் விட்டுப்போனால்! அதிலுள்ள
மனமல்லவா நம்மைவிட்டுப்போகும்

பணம் பந்தியிலே

குணம் குப்பையிலே என்ற
பழமொழியை மாற்றி
பாசம் மனதின் மத்தியிலே

பணம் அதற்கு பக்கத்திலே
என்ற புதுமொழியை உருவாக்கு

பணத்தையும் பாசத்தையும் இணைத்து
பவித்திரமான மனிதனாய் வாழ்ந்துபார்
தன்னை உணர்வதோடு

பிறறையும் உணரும்போது
பிறந்ததிற்கான பலனை

இப்புவியிலேயே
அடைவதை தெளிவாய் உணர்வாய்...


[தமிழ்தேர் இதழுக்காக எழுதி இம்மாதம் வெளியான கவிதை .
அம்மாடியோ இன்றுஒருவழியா மைக்கைப்பிடித்து தத்துபித்துன்னு கவிதையையும் படிச்சாச்சி]

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்


13 கருத்துகள்:

 1. //ஓட்டம் ஓட்டம் வாழ்க்கை முழுவதும்
  ஓயாதஓட்டம்
  பணத்தை தேடியே வாழ்வை தொலைக்க
  வரிந்துகட்டிகொண்டு ஓட்டம்
  பணத்தை குவித்ததும் பாசத்தைத்தொலைக்கும்
  சில பச்சோந்திகளின் கூட்டம்//
  நல்ல வரிகள் தொடருங்கள் தோழியே

  பதிலளிநீக்கு
 2. //நல்ல வரிகள் தொடருங்கள் தோழியே//

  தோழமையின் கருத்துக்களை என் எண்ணங்களின் தூண்டுகோலாக எடுத்துக்கொள்கிறேன், நன்றி வெண்ணிறவே

  பதிலளிநீக்கு
 3. //நல்ல வரிகள் தொடருங்கள் தோழியே//

  தோழமையின் கருத்துக்களை என் எண்ணங்களின் தூண்டுகோலாக எடுத்துக்கொள்கிறேன், நன்றி வெண்ணிறவே

  பதிலளிநீக்கு
 4. Geetha Achal கூறியது...
  வாழ்த்துகள் மலிக்கா அக்கா.

  மிகுந்த மகிழ்ச்சி, கீத்து

  பதிலளிநீக்கு
 5. உங்கள் கவிதைகள் எல்லாமே நன்றாக உள்ளன..உரைநடை கவிதைகள் என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்குமோ மல்லிகா?
  poongundran2010.blogspot.com

  பதிலளிநீக்கு
 6. //உங்கள் கவிதைகள் எல்லாமே நன்றாக உள்ளன..உரைநடை கவிதைகள் என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்குமோ மல்லிகா?//

  ஆமாம் பூங்குன்றன், எதார்த்தங்களையும், நடப்பவைகளையும் உள்ளது உள்ளபடி, அதுவும் கவிநடையோடு எழுதனும் என்பதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும்,
  அதை கவிதையாக தாங்களெல்லாம் ஏற்றுக்கொண்டால் அதுவே எனக்கு கிடைத்த பெரும் மகிழ்ச்சி.

  தாங்களின் முதல் வருகைக்கும் நல்ல கருத்துக்கும் மிக்க நன்றி,

  தொடர்ந்து வாருங்கள் கருத்துக்கள் என்னும் ஊக்கம் தாருங்கள்

  பதிலளிநீக்கு
 7. /பாசம் மனதின் மத்தியிலே பணம் அதற்கு பக்கத்திலே
  என்ற புதுமொழியை உருவாக்கு/

  பணத்தைவிட பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்பதை
  எடுத்துரைத்த கவிதையின் வரிகள் மிகவும் நன்று, கவிஞர்
  மலிக்கா!

  பதிலளிநீக்கு
 8. பணம், பாசம் இவற்றுக்கு இடையே நமது போராட்டம், நல்லா சொல்லியிருக்கிங்க, இரண்டுமே அவசியம் தானுங்க. ஆனால் ஒன்றுக்காக மற்றொன்றை ஒதுக்காமல் ஒரு பேலன்ஸ் வேனும்.

  பதிலளிநீக்கு
 9. மலிக்கா,

  துபாய் வள‌ர்தமிழ் மன்ற நிகழ்ச்சியில் கவிதை வாசித்ததற்கு வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 10. //பணத்தைவிட பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்பதை
  எடுத்துரைத்த கவிதையின் வரிகள் மிகவும் நன்று, கவிஞர்
  மலிக்கா//

  மிகவும் மகிழ்ச்சி பல்சுவையான நிஜாமுதீன் அண்ணா தாங்களின் பின்னூட்டத்திற்கு

  பதிலளிநீக்கு
 11. //பணம், பாசம் இவற்றுக்கு இடையே நமது போராட்டம், நல்லா சொல்லியிருக்கிங்க, இரண்டுமே அவசியம் தானுங்க. ஆனால் ஒன்றுக்காக மற்றொன்றை ஒதுக்காமல் ஒரு பேலன்ஸ் வேனும்//

  அதனாலத்தான் ஷஃபி கடைசிவரிகளில் இரண்டையும் இணைச்சிட்டேன்,
  [பணத்தையும் பாசத்தையும் இணைத்து
  பவித்திரமான மனிதனாய் வாழ்ந்துபார்]
  சரியான பேலன்ஸ்தானே ஷஃபி

  பதிலளிநீக்கு
 12. //துபாய் வள‌ர்தமிழ் மன்ற நிகழ்ச்சியில் கவிதை வாசித்ததற்கு வாழ்த்துக்கள்//

  வாழ்த்துக்களை மனமார ஏற்றுக்கொள்கிறேன், தாங்களீன் முதல் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி,

  தொடர்ந்து வாருங்கள் ஹுசைனம்மா

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது