நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மின்மினியே


மின்மினிபூச்சிகளே

மின்னட்டாம் பூச்சிகளே
என் வீடுதேடி வாருங்கள்

உங்களின்மேல் மிளிரும்

ஒளிவிளக்கைக்கொண்டு
நான் மின்சாரத்தை

உபயோகிக்கவேண்டும்
முடிந்தால் சேமிக்க வேண்டும்

என்வீட்டில் உங்களுக்காக
கூடுகட்டிவைத்துள்ளேன்
கூட்டம் கூட்டமாக வாருங்கள்
கூடி வெளிச்சம் தாருங்கள்

[பின் குறிப்பு]
இப்போதல்ல நான் நம்மநாட்டுக்கு வரும்போது]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

10 கருத்துகள்:

  1. //உங்களின்மேல் மிளிரும் ஒளிவிளக்கைக்கொண்டு
    நான் மின்சாரத்தை உபயோகிக்கவேண்டும்
    முடிந்தால் சேமிக்க வேண்டும்
    //

    மின்சாரத்தை இப்பிடித்தான் சேமிக்க வேண்டுமா??? நல்ல கவிதைதான் பாராட்டுக்கள்....

    பதிலளிநீக்கு
  2. நல்ல கவிதை பாராட்டுக்கள் ...............
    மின் மினிகளால் மின்சாரம் உருவாகட்டும்

    பதிலளிநீக்கு
  3. நல்ல கவிதை பாராட்டுக்கள் ...............
    மின் மினிகளால் மின்சாரம் உருவாகட்டும்

    பதிலளிநீக்கு
  4. மின்மினிப்பூச்சிகள் முன்புபோல் காணக்கிடைப்பதில்லையே!!

    பதிலளிநீக்கு
  5. //மின்சாரத்தை இப்பிடித்தான் சேமிக்க வேண்டுமா??? நல்ல கவிதைதான் பாராட்டுக்கள்//

    என்ன செய்ய இப்படியாவது சேமிக்கலாமேன்னுதான் புலி

    பதிலளிநீக்கு
  6. //நல்ல கவிதை பாராட்டுக்கள் ...............
    மின் மினிகளால் மின்சாரம் உருவாகட்டும்//

    உருவாகட்டும் என்ற நப்பாசைதான் வெண்ணிறவே,பாராட்டுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. //மின்மினிப்பூச்சிகள் முன்புபோல் காணக்கிடைப்பதில்லையே//

    வாங்க தேவன் தங்களின் வருகை நல்வரவாகட்டும்,

    காணக்கிடைக்கிம்போது பிடித்துவிடிலாம் என்றுதான் கூடுகட்டிவைத்துள்ளேன்,[எப்படி] தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.

    மீண்டும் மீண்டும் வருக கருத்துக்களை அள்ளித்தருக

    பதிலளிநீக்கு
  8. தாய் நாட்டு பற்று தரமாக தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  9. //தாய் நாட்டு பற்று தரமாக தெரிகிறது//

    வாங்க சுமஜ்லாக்கா, நம்ம நாடாச்சே அதான் பற்றுதலோடு கொஞ்சம் குசும்பையும் சேர்த்துக்கிட்டேன்.

    பதிலளிநீக்கு
  10. பின் குறிப்பில் இருக்கும் நாட்டுப்பற்று என்னைக் கவர்ந்தது. வாழ்க.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது