விழிப்பார்வைகள்
மோதிக்கொண்டதில்லை
மொழிச்சொற்கள்
விருந்துவைத்ததில்லை
கால்கள் பின்னியபடி
நிழலைத்தொடர்ந்து நடந்ததில்லை
கைவிரல்கள்
காதல் ஸ்பரிசம் அடைந்ததில்லை
ஆனபோதும்
விழிதிறதிருந்தால் யோசிக்கவும்
விழிமூடியிருந்தால் நேசிக்கவும்
விழிகள் கற்றுக்கொண்டன
விரல்மொழிகள்
பகிர்ந்தபோது மெளனமும்
எழுத்துமொழிகள்
மெளனமானபோது பகிரவும்
உள்ளம் கற்றுக்கொண்டன
உதட்டு இதழ்கள்
மூடியிருந்தபோது
உயிர்தேனை உறிஞ்சியதெப்படி
உள்ளது உள்ளபடி
உள்ளம் உருகுதடி
உருவத்தை கண்டதில்லை
ஒருவார்த்தை பேசியதில்லை
கணிணிகீபோர்டில் கைவிரல்கள்
காதல்கதை சொன்னதில்லை
ஆனபோதும்
மனமெல்லாம்
மகிழம்பூவின் வாசனைகள்
நினைவெல்லாம்
நீந்தித்தழுவும் திரவியங்கள்
புத்தம்புது பூக்களாக
புறப்படும் என்புன்னகைகள்
ஏதோ ஒன்று எனக்குள் நிகழ்கிறது
என்னவென்று
எனக்குசொல்லத் தெரியவில்லையடி
கணிணிமுகத்தின்மூலம்
நீ
எழுதும் எழுத்துக்களைகண்டு
என்எண்ணங்கள் சிதறியதடி
இமைமூடாமல் காத்திருப்பேன் நானடி
என்கணினித்தோழியே
உன்மனதைக்கேட்டுச்சொல்லடி
எனக்குள் வந்திருப்பது எ
ன்னஏதுவென்று -உன்
கணினியின் கண்கள்வழியே
கவிதை ஒன்றுசொல்லடி
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
கவிதை ரொம்ப நல்லா இருக்கு மலிக்கா
பதிலளிநீக்கு//S.A. நவாஸுதீன் கூறியது...
பதிலளிநீக்குகவிதை ரொம்ப நல்லா இருக்கு மலிக்கா//
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி தாங்களின் ஊக்கமான கருத்துக்களுக்கு
//விழிதிறதிருந்தால் யோசிக்கவும்
பதிலளிநீக்குவிழிமூடியிருந்தால் நேசிக்கவும்
விழிகள் கற்றுக்கொண்டன//
நல்ல வரிகள் "விழி மூடி தனக்குள் பேசும் மௌனங்கள்" நா முத்துக்குமார் வரிகளை நியாபக படுத்துகின்றன மிக அருமை மல்லிகா ...........
மல்லிகை மனம் வீசும் கவிதைகளாக
//விழிதிறதிருந்தால் யோசிக்கவும்
பதிலளிநீக்குவிழிமூடியிருந்தால் நேசிக்கவும்
விழிகள் கற்றுக்கொண்டன//
நல்ல வரிகள் "விழி மூடி தனக்குள் பேசும் மௌனங்கள்" நா முத்துக்குமார் வரிகளை நியாபக படுத்துகின்றன மிக அருமை மல்லிகா ...........
மல்லிகை மனம் வீசும் கவிதைகளாக
//ஏதோ ஒன்று எனக்குள் நிகழ்கிறது
பதிலளிநீக்குஎன்னென்று எனக்குசொல்லத்தெரியவில்லையடி
கணிணிமுகத்தின்மூலம் நீஎழுதும் எழுத்துக்களைகண்டு
கண்டு என்எண்ணங்கள் சிதறியதடி//
ஆண்களுக்கு வரவேண்டிய வரிகள்...
ஓ தங்களவர் எழுதியதா?
நன்றாக இருக்கிறது கவிதை,
பதிலளிநீக்குகவிஞர் மலிக்கா!
ஓ... இணையத்தின்மீது இனிய காதலா?
பதிலளிநீக்குசில மாறுதல்கள் செய்தால் கவிதை மேலும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது!
வாழ்த்துக்கள் மலிக்கா
அன்புடன் புகாரி
//நல்ல வரிகள் "விழி மூடி தனக்குள் பேசும் மௌனங்கள்" நா முத்துக்குமார் வரிகளை நியாபக படுத்துகின்றன மிக அருமை மலிக்கா ...........
பதிலளிநீக்குமல்லிகை மனம் வீசும் கவிதைகளாக//
வெண்ணிற இரவே வருக இருளைவிலக்கிககொண்டு வெளிச்சத்தை தருக.
முதலில் வருகைக்கு மிகுந்த சந்தோஷம்,
வசனை திரவியத்தோடு கருத்துக்கள் தந்தமைக்கு மிக்க நன்றி
அடிக்கடி வந்துபோங்கள் எங்கள் பக்கமும் வெண்மையாக மாறட்டும்
எப்படி வசந்த் இப்படியெல்லாம் ரொம்ப புத்திசாலிதான்போங்க
பதிலளிநீக்குஅப்படின்னு சொல்வேன்
நினைத்தீங்களோ [ஹ ஹ]
எல்லாம் ஒரு கற்பனைதான் வசந்த்
//ஆண்களுக்கு வரவேண்டிய வரிகள்...
ஓ தங்களவர் எழுதியதா?//
//நன்றாக இருக்கிறது கவிதை,
பதிலளிநீக்குகவிஞர் மலிக்கா//
ரொம்ப நன்றி பல்சுவை நிஜாமுதீன் அண்ணா
கணினியுடன் நீங்கள் பேசும், இல்ல எழுதும் என்றே வைத்துக் கொள்ளலாம் கவிதை அருமை.
பதிலளிநீக்குஅத்துடன் மிகவும் தாமதமாக என்று நினைக்கிறேன் - என் கவிதை
நிலா
அடி கள்ளி நிலவே
உன் திரு உருவை
திரைக்குள் மறைத்து
திரு முகம் மட்டும்
வெளிக்காட்டி
கையில் பூக் கணைகளுடன்
பூ உலகில்
பூ எறிய நீ
யாரைத் தேடுகிறாய்
உன் ஒளி முகத்தில்
விழிகளைத் தேடுகிறேன்;
உன் பால் முகத்தில்
பளிங்கு பற்களைத் தேடுகிறேன்
வேண்டாம்!
அதை மறைத்தே வைத்திரு
உன் முகம் பார்த்தே
முகவரி இழந்த நான்
உன் ஒளி விழியால்
மூர்ச்சையாகி விடுவேன்
உன் முகத்திற்கும்
முக்காடுட்டே வைத்திரு
அது தான் பாதுகாப்பு
உனக்கல்ல எனக்கு.
ராஜா கமால்
இப்போதெல்லாம் வேலை நிமித்தமாக வலை பூக்களில் அதிம் உலவ முடிவதில்லை உங்களின் கவிதைப் போட்டி அறிவிப்பை தற்போது தான் பார்க்க நேர்ந்தது இந்த கவிதை போட்டிக்கல்ல கருத்துக்கு.