நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பட்டங்கள் பல



முதிர் கன்னியாய்
முப்பது வருடங்கள்
காத்திருந்தாலும்
ஏனென்று கேட்க்காத
ஊர் உலகம்

காதலித்தவனையே
கைபிடித்துகொண்டு போனால்
அவளுக்கு கொடுக்கும் பட்டம்
”ஓடுகாலி”


ஊரறிய கைபிடித்து
காலமெல்லாம் கூடவே
கடைசிவரை வருவேனென்று
கட்டியவன்
திடீரென்று கலட்டிவிட்டு
காணாமல் போய்விட்டால்

வாய்கூசாமல் இவளுக்கு
கொடுக்கும் பட்டம்
”வாழாவெட்டி”

கட்டிய நாள்முதல்
கட்டில் ஆடியும்
தொட்டில் ஆடாவிட்டால்
அட்ச்சதை தூவி
ஆசிர்வதித்த அதே வாயால்
அஞ்சாமல் கொடுக்கும் பட்டம்
”மலடி”


விதி செய்த சதியால்
கட்டியவன் காலமாகிப் போக
கலங்கி நிற்கும் அவளுக்கு
கலப்படமே இல்லாமல்
கொடுக்கும் பட்டம்
”விதவை”

அடி பெண்ணே!

படித்து பட்டங்கள் பல
பெறா விட்டாலென்ன
பெண்களுக்காகவே
பல பட்டங்களை
வாரி வழங்க காத்திருக்கிறது
வள்ளலான இவ்வுலகம்

வாழுந்தாலும் ஏசும்
தாழ்ந்தாலும் ஏசும்
தன்னம்பிக்கையோடு வாழ்ந்தால்
தன்மானமுள்ளவளென்று
உன்னை
இந்த தரணியே பேசும்....


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

12 கருத்துகள்:

  1. வாழும்போதும் ஏசும்
    தாழும்போதும் ஏசும்
    தன்னம்பிக்கையோடு வாழ்ந்தால்
    தன்மானமுள்ளவளென்று -உன்னை
    இந்த தரணியே பேசும்..//

    தன்னம்பிக்கையூட்டும் வரிகள்.. நன்றாக உள்ளது...

    பதிலளிநீக்கு
  2. சூப்பர் மலிக்கா.அருமையா சொல்லிருக்கிங்க.

    பதிலளிநீக்கு
  3. உண்மைதானுங்க, வாய் கூசாமல் மற்றவரை புண்படுத்தும் சில மனிதர்கள்!! திருந்த வேண்டுமே!!

    பதிலளிநீக்கு
  4. இந்த மாதிரி வாய் கூசாமல் அடுத்தவர்களை பழிப்பவர்களுக்கு இறுதியில் வாயில்தான் கேன்சர் வரும்

    பதிலளிநீக்கு
  5. //தன்னம்பிக்கையூட்டும் வரிகள்.. நன்றாக உள்ளது...//

    நன்றி அதிரை அபூபக்கர்

    பதிலளிநீக்கு
  6. //சூப்பர் மலிக்கா.அருமையா சொல்லிருக்கிங்க//

    தேங்ஸ் மேனகா

    பதிலளிநீக்கு
  7. //உண்மைதானுங்க, வாய் கூசாமல் மற்றவரை புண்படுத்தும் சில மனிதர்கள்!! திருந்த வேண்டுமே!!//

    திருந்த வேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன் ஷஃபீ. நன்றி

    பதிலளிநீக்கு
  8. //தங்களது கவிதையை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கவிதைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.//

    என் கவிதையை தங்களின் இணைய இதழில் இணைத்ததிற்காக மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

    மிக்க நன்றி. தமிழ்குறிஞ்சி இணைய இதழ்

    பதிலளிநீக்கு
  9. //இந்த மாதிரி வாய் கூசாமல் அடுத்தவர்களை பழிப்பவர்களுக்கு இறுதியில் வாயில்தான் கேன்சர் வரும்//

    வந்தாலும் வருந்தாது வாய்
    பிறறை வருத்திக்கொண்டே இருக்கப்போவதால்

    நன்றி வசந்த்

    பதிலளிநீக்கு
  10. //இந்த மாதிரி வாய் கூசாமல் அடுத்தவர்களை பழிப்பவர்களுக்கு இறுதியில் வாயில்தான் கேன்சர் வரும்//

    வந்தாலும் வருந்தாது வாய்
    பிறறை வருத்திக்கொண்டே இருக்கப்போவதால்

    நன்றி வசந்த்

    பதிலளிநீக்கு
  11. மலிக்கா மிக சரியாக கூறியிருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  12. உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கின்றன. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது