நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என் உறவே


காலைபனித்துளி
கதிர்களில் ஆட –அதை
கண்ட என்கண்கள்
கும்மாளம் போட
மகிழ்வென்னும் சோலைக்குக்குள்
மத்தாப்பூ பூத்ததுபோல் :
ஆனது நம் உறவு;


சூரியனின் சூடு சுல்லென்று சுட
–அதை
சில்லென்ற காற்று வருடி விட
சுறுசுறுப்பான உடல்
சிட்டாய் பறந்ததுபோல்
:ஆனது நம் உறவு;


அந்திவானம் மஞ்சள் அரைக்க
அதை அவசரமாய்
கறுத்தமேகம் மறைக்க
மூடியிருந்த முக்காடை
கிழித்துக்கொண்டு
எட்டிப்பார்த்த ஒளிகதிர்களைபோல்
:ஆனது நம் உறவு;


இருண்ட வானத்தில் 
சின்னதாய் சிதறிகிடக்கும்
மின்மினிபூச்சிகளாய்
நட்சத்திரங்கள் மின்ன,
உருண்டை உலகில்
உன்னதவானில்
உலாவரும் வெண்ணிலாவைபோல்
:ஆனது நம் உறவு;


கறுத்து வெளுத்த மேகங்கள்
பவணி வர -அதனுடன்
கண்ணைபறிக்கும் வெளிச்சத்துடன்
மின்னல் இணைய
பட்டாளத்து வெடிசத்தமாய்
இடிகளும் வெடிக்க
வெள்ளைமழை
வருகை தருவதுபோல்
:ஆனது நம் உறவு;


அடர்ந்த காட்டுக்குள்
அத்தனைகுயில்களும் கானம்பாட
அதைக்கேட்டு அங்குள்ள
மரங்களெல்லாம் தன்னைமறந்து ஆட
சில்லுன்று  வீசும் தென்றல்காற்றில்
சில்வண்டுகளின் ஸ்ரிங்காரம்போல்
:ஆனது நம் உறவு;


மலைக்காதல்
வெள்ளையருவி  நீரையெல்லாம்
மண்ணுக்கு தானமாய் தர
பூமியைநோக்கி
வேகமாய்வந்து விழ
அதிலிருந்து
எழும் வெண்பஞ்சு புகைபோல்
:ஆனது நம் உறவு;

எனதுறவே!

உறவுக்குள் உயிராய்
உறைந்துவிட்டபின்பு
நம் உறவுக்குள்
இனி பிரிவென்பதேது
உயிரோடு உயிர் சேர்ந்த உறவு
இதில்
வேண்டாமே என்றைக்கும் பிரிவு.........


//இக்கவிதை உறவா பிரிவா என்ற தலைப்புதந்து
எழுதசொன்ன கவிதை,
இம்மாத தமிழ்தேர் இதழுக்காக நான் எழுதி வெளியான கவிதை://

அன்புடன் மலிக்கா


இறைவனை நேசி இன்பம் பெருவாய்

12 கருத்துகள்:

  1. //மலைக்காதலி வெள்ளையருவி தன் நீரையெல்லாம்
    மண்ணுக்கு தானம்தர நினைத்து
    பூமியைநோக்கி வேகமாய்வந்து விழ –அதிலிருந்து
    எழும் வெண்பஞ்சு புகைபோல் :ஆனது நம் உறவு;// அழகான வரிகள்

    பதிலளிநீக்கு
  2. அந்திவானம் மஞ்சள் அரைக்க-அதை
    அவசரமாய் கறுத்தமேகம் மறைக்க
    மூடியிருந்த முக்காடை கிழித்துக்கொண்டு
    எட்டிப்பார்த்த ஒளிகதிர்களைபோல் //

    அருமையான வரிகள்..
    உங்களது கவிதை சூப்பர்...
    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  3. மலிக்கா உங்கள் கவிதைகள் அனைத்து புத்தகங்களிலும் வெளிவர வாழ்த்துக்கள்.

    எல்லாம் அருமையான வரிகள்.

    பதிலளிநீக்கு
  4. கவிதை வரிகளை ரசித்து கருத்துக்கள் தந்த ஃபாயிஜாவிற்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  5. அடடா அழகா இருக்குங்க அத்தனை வரிகளும், நல்ல கற்பனை திறன் உங்களுக்கு, இயற்கை வளங்கள் அனைத்தையும் எடுத்துக் காட்டி உறவை வர்ணித்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  6. //அருமையான வரிகள்..
    உங்களது கவிதை சூப்பர்...
    வாழ்த்துக்கள்//

    வருகைதந்து வாழ்த்துக்களையும் தந்த
    அதிரை அபூபக்கர் அவர்களை
    அதிரை சகோதரி அன்புடன் அழைக்கிறேன்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  7. //மலிக்கா உங்கள் கவிதைகள் அனைத்து புத்தகங்களிலும் வெளிவர வாழ்த்துக்கள்.//

    ஜலீலாக்கா தாங்களுடைய வாழ்த்துக்களின்படியே ஆகட்டும்

    கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  8. அருமையான கவிதை வரிகள்.உங்கள் படைப்புகள் அனைத்து இதழிலும் வெளிவர வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  9. //அடடா அழகா இருக்குங்க அத்தனை வரிகளும், நல்ல கற்பனை திறன் உங்களுக்கு, இயற்கை வளங்கள் அனைத்தையும் எடுத்துக் காட்டி உறவை வர்ணித்த விதம் அருமை//

    ஷஃபி, இயற்கையோடு கலந்ததுதானே நம் வாழ்க்கை,
    அதை உறவுகளோடு இணைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி,

    வருகைக்கும் கருத்திற்க்கும் மிகுந்த சந்தோஷம்

    பதிலளிநீக்கு
  10. //அருமையான கவிதை வரிகள்.உங்கள் படைப்புகள் அனைத்து இதழிலும் வெளிவர வாழ்த்துக்கள்!!//

    மேனகா தாங்களின் வாழ்த்துப்படியே அமையட்டும்,
    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  11. //மலிக்கா அருமையான வரிகள்//
    மிக்க மகிழ்ச்சி சாருக்கா

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது