அன்றைய இரண்டாம் ஜாமத்து
கலக்கத்திலிருந்து
மீளமுடியாமலிருந்த
காலத்தையெண்ணியுருக்கும்
முற்காலத்து உணர்வுகளையும்
பின்னுக்குதள்ளும்
புறக்கணிப்பு
முட்டுக் கால்களுக்குள்
முகம் புதைக்கவைத்து!
பிற்காலத்தின் பிரதிபலிப்பு
தற்காலத்தில் நிகழ்த்திக்காட்டி
அலட்சிய வெளிகளுக்குள்
சிக்குண்டுகிடந்திடும்
அதிகார தோரணைகளை!
அடக்கத் தெரியாமல்
அடங்கிட முடியாமல்
அள்ளி ஏந்திய வண்ணமாய்
அறையப்பட்ட ஆணியாகி
ஆடாமல் அசையாமல்!
மனமுடைந்த மெளனமாய்
உள்ளக்கூட்டுள்குள்ளே கதறி
அதிகார வெளியினை
ஊடருக்க எண்ணும்
உணர்வுகளை உள்ளடக்கி!
அறுந்துகிடக்கும் நெஞ்சத்தினை
உமிழ்நீர்கொண்டு
ஆறுதலளித்தபடி
புறக்கணிப்பின் உச்சத்தை
புறக்கணித்தபடி!
ஊர் உலகப் பார்வைக்கு
உசத்தியாய் வேசமிட்டபடி
உலாவரும் சில நிலாக்கள்
நிலாக்காயும் சில புறாக்கள்.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
படமே ஆயிரம் கதை சொல்லி மனசை கனக்க வைத்தது
பதிலளிநீக்குpppppaaaaa..
பதிலளிநீக்குpiramaatham..!
கவிதை அருமைதான்....
பதிலளிநீக்குஆனாலும்...
ஓர் சிறந்த கவிஞரின் கவிதைகளில்
எழுத்துப் பிழைகளை தவிர்ப்பது நல்லது...
பிரிதிபலிப்பை...
அலட்சிய...
என்ற எழுத்துப் பிழையை சரி செய்யுங்கள் கவிஞரே...
பதிலளிநீக்குஊர் உலகப் பார்வைக்கு
உசத்தியாய் வேசமிட்டபடி
உலாவரும் சில நிலாக்கள்
நிலாக்காயும் சில புறாக்கள்.
//
Unmaiyana varikal malikkafarook
மனதைக் கனக்கச் செய்யும் கவிதை...
பதிலளிநீக்குஅருமை...