நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை!



துணையிருக்கிறான்
இறைவன்
தொடர்ந்து எழுத!
துணையாய் இருக்கிறா[ர்]ன்
கணவன்
துணிந்து எழுத!

இருவரின்
ஆத்மார்த்த துணையால்
எனக்குள் எழும்
எண்ணங்கள்
எழுத்துகளாகிறது!

உள்ளன்புகளோடு
உரிமைகள்கொண்ட
கருத்துகளை பகிரும்
உங்களை அனைவர்களாலும்
உணர்வுகள் இன்னும்
ஊற்றெடுக்கச் செய்கிறது!

ஒன்றில் தொடங்கி
இதோ
ஐனூற்றி இருபத்தைந்தாவது
பதிவாக
நீரோடையில் மட்டும்!

நெஞ்சம் நிறைந்த
நன்றிகளை
அன்பான உள்ளத்தோடும்
ஆனந்தக் கண்ணீரோடும்
இறைவனுக்கும்
இங்குவந்து செல்லும்
அனைவருக்கும் சொல்லிக்கொள்கிறேன்..
--------------------------------------------------

என்றும் நன்றிகளோடு
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

11 கருத்துகள்:

  1. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    அன்புடன் DD

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-2.html

    பதிலளிநீக்கு
  2. உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

    பதிலளிநீக்கு
  3. தரத்துடனும் எண்ணிக்கையைப் பராமரிப்பது
    என்பது நிச்சயம் சாதனைதான்
    நீங்கள் சாதித்துவிட்டீர்கள்
    தொடர்ந்து சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. //நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை!/// ஆமா ஆமா... எனக்கும் பாராட்ட வார்த்தைகள் இல்லை:).. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் தோழி .என்றென்றும் துணையது தூணாய் விளங்கத்
    தொடர்ந்திட வேண்டும் சிறப்பு மிக்க ஆக்கங்கள் சிந்தைக்கு விருந்தாக !

    பதிலளிநீக்கு
  6. வாழ்வியலும் இறையியலும் நிறைந்த உங்கள்
    பதிவுகளை படிக்க நாங்கள் தான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் சகோதரி.
    இன்னும் பல்லாயிரம் பதிவுகள் நீங்கள் படைத்திட
    இறைவன் ஆசிகள் உங்களுக்கு எப்போதும் உண்டு...

    பதிலளிநீக்கு
  7. @athira சொன்னது…

    //நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை!/// ஆமா ஆமா... எனக்கும் பாராட்ட வார்த்தைகள் இல்லை:).. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..//

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் :-)

    பதிலளிநீக்கு
  8. 525க்கு வாழ்த்துக்கள் அக்கா...
    தொடர்ந்து கலக்குங்க...

    பதிலளிநீக்கு
  9. வாழ்வியலும் இறையியலும் நிறைந்த உங்கள்
    பதிவுகளை படிக்க நாங்கள் தான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் சகோதரி.
    இன்னும் பல்லாயிரம் பதிவுகள் நீங்கள் படைத்திட
    இறைவன் ஆசிகள் உங்களுக்கு எப்போதும் உண்டு... //

    உண்மைதான் மலிக்கா. உங்கள் எழுத்துகள் என்றும் தொடர இந்த இளயவனின் அன்பு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  10. இன்று பிறந்த தங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். படையுங்கள் பல கவிகளை சிறப்புகள் வந்துசேரட்டும் செழிப்புடனே.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது