ஈட்டிக்கு மூட்டியாக
எவருக்கோ போட்டியாக
இறைவனுக்கு இணைவைத்தும்
அவனின் சினத்துக்கு தூபம்போட்டும்
ஆணவ ஆனந்தம் கொண்டு திரியும்
இறை வேதமறிந்த மனிதன்!
இன்னார் செய்யும் தீமை
இவரையடைந்த போதும் சரியென்று
படைத்தவனை பகைத்துக்கொண்டு
படைப்பினங்களுக்கு பல்லாக்குதூக்கி
இறையின் வெறுப்புக்கு
உகப்பாகுவதுதான் துயரம்!
இறைவனுக்கு இணையாக
இவ்வுலகில் எதுமேயில்லையென
இறைச்சங்கொண்ட உள்ளம்
இதுபோன்ற செயல்களாலே
ஈமானை இலகவிட்டு
ஈருலகிற்கும் கெடுதிதேடும் மனிதன்!
இறைஞ்சி வேண்டும் போதினிலே
எப்பாவத்தினையும்
மன்னிக்க விரும்பும் இறைவன்
தனக்கே இணைவைத்து
தான் படைத்தவைகளையே
தனக்கிணையாக்கி பார்ப்பதை
விரும்புவதில்லையே சிறுதுளியும்!
ஆறறிவை சீர்திருத்தி
ஆள்பவனை மனதில் நிறுத்தி
அள்ளும் பகலும்
நடந்துகொள்ள வேண்டும்
ஆகாதேயென அறிந்தும்
படைத்தவனோடு போட்டிபோட்டு
படைப்பினங்களாகிய நாம்
வாழக்கூடாதே ஒருபோதும்..
====================================
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அருமையான கவிதை அக்கா...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...