கோடிகளில் புரண்டும்
மானம் மறைக்கும் ஆடைதன்னை
மேம்போக்குக்காக போட்டுக்கொண்டு
கிழித்[ந்]தலைவதை நாகரீகமென
சொல்லித்திரியும்
மானாக்களுக்கு மத்தியில்,
தெருக்கோடியில் கிடந்தபோதும்
கிடைத்த உடை
கிழிந்த உடையானபோதுமதனை
தைத்துபோட்டு மானம்காக்க நினைக்கும்
இவனல்லவோ மானஸ்தன்
இல்லையில்லை
வருங்கால நாகரீகத்தின்
மானமுள்ள திரு உருவம்...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
/// வருங்கால நாகரீகத்தின்
பதிலளிநீக்குமானமுள்ள திரு உருவம்... ///
அருமை...
இவனல்லவோ மானஸ்தன்
பதிலளிநீக்குஇல்லையில்லை
வருங்கால நாகரீகத்தின்
மானமுள்ள திரு உருவம்...//
மிக அருமை அருமை..
நல்ல சிந்தனை மலிக்கா
உண்மைதான்.. அருமையான கருத்து சொல்லும் கவிதை.
பதிலளிநீக்கு