நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கடந்து,மறந்து,துறந்து!


ரம் துயரம்
பம் துன்பம்
கம் சோகம்

இவைகளை
கடந்து, மறந்து,துறந்து,

காண, கனவு காண!
பட, கோபப்பட!
கோத, தலைகோத!
பார்க்க, எதிர்பார்க்க!
இட, சண்டையிட!
கோக்க, கைகோர்க்க!
மிட, முத்தமிட!
பார்க்க, தவிக்க!
நெருங்க, விலக!
சுகிக்க, சகிக்க!
பதற, பகிர!
தேட, தீண்ட!
வாட, கூட!
விலக, நெருங்க!
சிரிக்க, சிந்திக்க!

வா வா, வாழ வாழ!
வாழ்வினை
வாழ்ந்து வாழ்ந்து
வாழ்க்கையை வெல்ல! சற்று மெல்ல!


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

5 கருத்துகள்:

 1. காண, கனவு காண!
  பட, கோபப்பட!
  கோத, தலைகோத!
  பார்க்க, எதிர்பார்க்க!
  இட, சண்டையிட!
  கோக்க, கைகோர்க்க!
  மிட, முத்தமிட!
  பார்க்க, தவிக்க!
  நெருங்க, விலக!
  சுகிக்க, சகிக்க!
  பதற, பகிர!
  தேட, தீண்ட!
  வாட, கூட!
  விலக, நெருங்க!
  சிரிக்க, சிந்திக்க!//

  சூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊப்பர் மலிக்கா.. மிக அழகாய் எழுதுறீங்க, வாசிக்க வாசிக்க இன்னும் வாசிக்கத்தூண்டும் எழுத்து உங்களுடையது..

  பாராட்டுகள்..

  பதிலளிநீக்கு
 2. திறந்து மனம் திறந்து
  ஆட்ட பாராட்ட
  இது மை, மிக அருமை!!

  பதிலளிநீக்கு
 3. இதெல்லாம் எங்கேயிருந்து கத்துட்டு எழுதுறீங்க... கவிஞரே...

  என்னமப்போங்க... நீங்க...
  எங்கேயோ போய்ட்டீங்க...

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது