நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

செப்பனிடப்படும் துரோகங்கள்...
பசுந்தோல் போர்வையில்
பழகியவர்கள் செய்யும் நம்பிகை துரோகம்!

தேன்கூட்டில் விசமேற்றும் தோனியில் 
தேடிய துணைசெய்யும் நம்பிக்கை துரோகம்!

நிலமாடி நிலைகுலைக்கும் வகையில்
நட்புகள் செய்யும் நம்பிக்கை துரோகம்!

தன்நிலையையே தலைகீழாக்கும் பூகம்பம்
தன் இணை செய்யும் நம்பிக்கை துரோகம்!

கத்திகொண்டு கழுதறுத்தால்
காயத்தோடு ம”ரணம்”

நம்பவச்சு கழுத்தறுத்தால்
காலமெல்லாம் ரணமான மரணம்!

நம்பியோர்
நம்பியே கெட்டு கெட்டு!

நம்பிகையை கெடுதவர்
நம்பிகையாய் நடித்து நடித்து!

நம்பிக்கையென்பது
நம்பிகையற்றுப்போக போக

நம்பிகையின்மேல்
நம்பகமே அற்றுப்போகிறது!

துரோகங்கள் நம்மைச்சுற்றி சுற்றி
நாமும் அதைச்சுற்றி!

பல துரோகம் திட்டமிட்டு!
பல துரோகம் வட்டமிட்டு!
பல துரோகம் கூட்டமிட்டு!
பல பல துரோகங்கள்
துரோகங்களாலே செப்பன்னிட்டு!........

11 கருத்துகள்:


 1. துரோகங்கள் நம்மைச்சுற்றி, நாமும் அதைச்சுற்றி//

  உண்மைதான் மலிக்கா. மிக அருமையான கவிதை

  பதிலளிநீக்கு
 2. பல பல துரோகங்கள்
  துரோகங்களாலே செப்பன்னிட்டு!..

  படம் எத்தனையோ செய்திகளை உணர்த்திவிடுகிறது ...

  பதிலளிநீக்கு
 3. Turokahal eppotellam saataranmakivittav medam. Kavi mika arumai paarattukkal.

  பதிலளிநீக்கு
 4. ஏமாற்றத்தை விட துரோகம் மிக கொடியது..

  பதிலளிநீக்கு
 5. எதையும் சகித்துக்கொள்ளலாம்..
  ஆனால் துரோகம் மிகக்கொடியது

  அந்த துரோகங்கள் கூட நம்மை செப்பனிடுகின்றன
  என்ற உங்கள் கவிதை புதிய நம்பிக்கையைக் கொடுக்கிறது..

  பதிலளிநீக்கு
 6. நம்பிக்கையென்பது
  நம்பிகையற்றுப்போக போக//


  துரோகம் தர்க்கம் செய்யும் மனதை மரணத்தில் தள்ளும்


  பதிலளிநீக்கு
 7. துரோகம் சூழ்ந்த உலகம்தானே அக்கா...


  அருமையான கவிதை...

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது