நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நீங்கள் வாழ்வது விரும்பிய வாழ்க்கையா?இல்லறம் என்பது இனிமையும். கனிவும். கசப்பும். துவர்ப்பும். நிறைந்தவை, அவற்றை  எவ்விதமாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்பது இணைகளின் உள்ளத்தைப் பொறுத்ததே! 
கணவன் மனைவி உறவு என்பது எப்படி இருக்கவேண்டும்? கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஆடையாகவும், பரஸ்பரம் அன்பு கொண்டவர்களாகவும் இருக்கணும், அப்படி இருக்கையில் இருவருக்குள்ளும் இணக்கமும் பிணக்கமும் வந்து வந்து போகவேண்டும், இடையிடையே ஊடல் ஏற்பட்டு சமாதனமாகும்போது ஏற்படும் அன்பு இன்னும் வலுவாமாகும்,
இருவரிடையே விட்டுக்கொடுத்தல் இருக்கவேண்டும், அனைத்திலும் ஒருவரே விட்டுக் கொடுத்துவிட்டு தன்னையும் ஏமாற்றி, அவரையும் ஏமாற்றி, மனதுக்குள்ளேயே சிறு வெறுப்புத் தோன்றி அதுவே பின் பெரும் விரிசலுக்கே காரணமாகிவிடாது பார்த்துக்கொள்ளவேண்டும்.
கணவன் மனைவிக்கும் ஊடல்கள் வருவது சகஜம், அப்படி வந்தால்தான் அந்த வாழ்க்கையில் ஒரு சுவாரஸ்யமிருக்கும். எங்களுக்கு சண்டையே வராது, எதுக்காவும் கோபட்டுக்கொள்ளவேமாட்டோம், எல்லாத்துக்கும் விட்டுகொடுத்துதான் வாழ்வோம்.சிறு ஊடல் கூட வந்ததேயில்லையென எந்த ஒரு கணவன் மனைவி சொல்கிறார்களோ! அது பொய், அந்த வாழ்க்கையில் போலிகளே நிறைந்திருக்கும், உலகுக்காக தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டு வாழ்கிறார்கள் என்று அர்த்தம்.
பொன்னும் பொருளும் கொண்டு நிரப்பிதான் வாழவேண்டுமில்லை அன்பும் அறனும் நிறைந்து, இருவருமே உணர்வுகளுக்கு மதிப்பளித்துகொண்டு, நான் என்பதை களைந்து, நாம் என்பதை அணிந்து, இருவருமே ஒன்றுக்கொன்றில் விட்டுக்கொடுக்க வேண்டியவைகளில் விட்டுக்கொடுத்து ஒருவர் சந்தோஷத்தில் இருவர் கலந்து, ஒருவர் துக்கத்தில் இருவர் கசிந்து, ஊணும் உயிருமாய் வாழும்போது நிறைவைத்தவிர அவ்வாழ்க்கையில் எதுமிருக்காது.
மனைவியின் உணர்வுகளை கணவர் மதிக்கத் தொடங்கும்போதே குடும்பத்தில் பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடுகிறது. மனைவியும் கணவர்களின் உணர்வுகளறிந்து செயல்படும்போது இணைகளில் வாழ்க்கை இவ்வுலகிலும் சொர்க்கத்தையே எட்டிப்பிடிகிறது. மனைவியின் மனவுணர்களை புரிந்து, அவர்களுக்குள் திறமையிருந்தால் அதனை வெளிகொண்டு வர முயன்றால், குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.பெண் பிறவியிலேயே மென்மையானவள் பலவீனமானவள், அவளின் பலம் அவளின் துணையாக இருந்தால் அதுவே அவளுக்கு பலமடங்கு பலத்தைக் கொடுப்பதோடு, இல்லறமும் நல்லறமாகும், இல்லமும் இன்றியமையாததாகும்.
நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள்? என்பது நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும், அதனை சரிவர தீர்மானப்படுத்துவதில்தான் வாழ்க்கை வளமுடன் இருப்பதும், வளமற்று முறிவதும்.
ஒரு பெண்ணுக்கு அவள் வாழ்க்கைத்துணை மட்டும் சிறப்பானதாக அமைந்துவிட்டால் அவள் பிறந்த பிறவிக்கும், வாழும் வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் கிடைத்துவிட்டது போலாகும், எங்கள் வாழ்க்கையில் எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் கண்டு, இன்ப துன்பங்கள் கடந்து, ஊடல்களும் மன உளைச்சல்களும் கடந்து, இதோ இன்று இருபத்தியிராண்டாம் வருடத்திலும், எனது உணர்வுகளை என்னைவிட அதிகமாய் நேசிப்பதோடு, அதனை மதித்து, பிறரும் மதிக்கும்படி செய்துவரும் என்னவர். இருக்கும்போது எப்படியோ, அது சற்று குறைந்தபோதும், இருப்பதைக்கொண்டு மனநிறைவோடு குடும்பம் நடத்தலாம், குதூகலமாக வாழலாமென்ற மனநிலையை உருவாக்கிகொண்டுள்ள நானும், இன்பங்களுக்கு குறைவில்லாமல் இனிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளோம் வல்லோன் அருளால்,
என் எழுத்துகளுக்கு கிடைக்கும் எதுவானாலும், என்னைவிட அதிக சந்தோஷப்படுவதும், மகிழ்வடைவதும் மச்சான்தான். அவர்களின் மூலம் என்னிடம் தொறிறிக்கொள்ள இரட்டிப்பாகும் சந்தோஷமும், மகிழ்ச்சியும். 2 நாள் ஆகிவிட்டாலே, ”என்னங்கிறேன்”[எங்கட பாஷையிது] இன்னும் பிட்டு போடலையா நீரோடையில் என எழுதத்தூண்டுவதே அவர்கள்தான். எனக்கான எல்லாமும், என்னுலகமும் அவர்கள் அவர்கள் மட்டுமே, அப்ப குழந்தைகள் என்கிறீகளா?
அவர்கள் வளர்ந்து ஆளாகும்வரைதானே நம்மிடம், அப்பால் பிறரிடம்தானே, ஆனால்! நம்முயிர் நம்மைவிட்டு பிரியும்வரை, நம் துணை எப்போதும் நம்மிடமே! நம்மிடம் மட்டுமே! நமக்கானதாக ஆக்கிக்கொண்டு, நாமாக வாழும்போது...
நீங்கள் விரும்பும் வாழ்க்கை அமைய! உங்களை நம்பிவரும் துணையை விரும்புங்கள் தூய்மையாக! நீங்கள் விரும்பிய வாழ்க்கை உங்கள் கண்முன் உங்களுக்காகவே!
ஈருலகிலும் எங்களை இணைப்பிரியாமல் இணைத்து வைக்கசொல்லியே என்றும் எனது பிரார்த்தனைகள், அந்த பிராத்தனைகள் நிறைவேற நீங்களும் எங்களுக்காக பிரார்த்தியுங்கள்.
------------------------------------------------------------------------------------
இன்று இன்னுமொரு மகிழ்ச்சியான விசயம்..

”இணையத்தில் கலக்கும் இலக்கிய பெண்கள்” தினகரன் வசந்தம் இதழில் இன்று நம்மளையும் போட்டிருக்காங்கோ, இரட்டிப்பு மகிழ்ச்சியாக்கிய தினகரன் வசந்தம் இதழுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.. இதை தற்போது எனக்கு தெரிவித்த எனது தோழி அஜிதாவுக்கு நன்றிகள்...

நெகிழ்ந்த காலங்கள் நிறைகுறை
மன்னவா!நீ
மகிழ்வித்த காலங்கள் நிறை நிறை

மடியும் காலம் வரும் வரை 
மன்னவா! 
உன்மனமே எனது மகிழ்வறை!

மரணம் நெருங்கும் வேளையில்
மன்னவா!
உன் மடியே எனது தலையணை!

மரணித்த பிறகும் மறுமையில்
மன்னவா!
உன்துணையே எனது நிறையுரை!

புகழ்பெற்றவர்களைப் பற்றி ஒரு ரசிகனின் பதிவுகள் என்ற நூலில்
எங்களின் இனியவாழ்க்கை, வரலாறாக!. [திருமணம் சொர்க்கத்தில் நிச்சயயிக்கபடுகிறது என்ற தலைப்பில்]
மிக்க நன்றி பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் சிறுகதை தொகுப்பாளர் சகோதரர் திருச்சி சையத் அவர்களுக்கு..

கற்றறிந்தவர்களும் கத்துக்குட்டியும்..

அதன் முழு பதிப்பு இங்கே,,

என்றும் இளமைக்காதல் எங்களுக்குள்.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

28 கருத்துகள்:

 1. //மனைவியின் உணர்வுகளை கணவர் மதிக்கத்தொடங்கும்போதே குடும்பத்தில் பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடுகிறது.மனைவியும் கணவர்களின் உணர்வுகளறிந்து செயல்படும்போது இணைகளில் வாழ்க்கை இவ்வுலகிலும் சொர்க்கத்தையே எட்டிப்பிடிகிறது.///

  வாழ்க்கையை சொர்க்கமாக்கும் வசந்த வரிகள்.... ஜஸாக்கல்லாஹ் ஹைர்...

  எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆரோக்கியமான வாழ்வையும் வாழ்நாளையும் தந்தருள பிரார்த்தனைகள்....

  பதிலளிநீக்கு
 2. மரணித்த பிறகும் மறுமையில்
  மன்னவா!
  உன்துணையே எனது நிறையுரை!
  //

  சூப்பர் மலிக்கா.

  உங்கள் ஆக்கம் ஒவ்வொன்றும் மிக அருமை. நெஞ்சார வாழ்த்துகிறேன்மா

  சுப்ரமணியன்..

  பதிலளிநீக்கு
 3. கருத்துகள் ஒவ்வொன்றூம் மிக அருமை. வாழ்க்கை இருவருக்குமானது அதை பகிர்தல் மிக அவசியமென்னும் கருத்தை மிக ஆழமாக சொல்லிய விதம் மிக அருமை மலிக்கா.

  மச்சானுக்கா இக்கவிதை..
  அட்ரா சக்கை கொடுத்து வைத்தவர் மச்சான்.கவிதைபாடி கொஞ்சும் மனைவிகிடைக்க..

  வாழ்த்துகள் நீவீர் இருவரும் பல்லாண்டு..

  பதிலளிநீக்கு
 4. அருமையான கருத்துகள் மலிக்கா.. ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு விட்டுகொடுத்தலே இல்லறத்தின் அடித்தளம்.

  நமக்கு ஒரு இனிய வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்த இறைவனுக்கே எல்லா புகழும்.

  இறைவன் அருளால் நீவீர் இருவரும் எல்லா வளமும் பெற்று வளமோடு வாழ பிரார்த்திக்கிறேன்

  பதிலளிநீக்கு
 5. சூப்பர் மலிக்கா...

  கலக்குறீங்க...

  உங்கள் திறமைக்கு இது சிறு அங்கீகாரம் தான்.. இன்ஷா அல்லாஹ் போகப் போக மேலும் கிடைக்கும்...

  வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 6. சலாம் டியர் மலிக்கா.

  //ஈருலகிலும் எங்களை இணைப்பிரியாமல் இணைத்து வைக்கசொல்லியே என்றும் எனது பிராத்தனைகள், அந்த பிராத்தனைகள் நிறைவேற நீங்களும் எங்களுக்காக பிராத்தியுங்கள்.//

  இம்மையில் கடைசிவரையும், மறுமையின் உயர்ந்த சுவனபதியிலும் இணைபிரியா இன்ப துணைகளாக வாழ வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன். (மவளே... மரியாதையா இதே மாதிரி எங்களுக்கும் நீ துஆ செய்யணும்.. சொல்லிட்டேன் :))) அத்தோடு நம் நட்புகளும் மறுமையில் ஒன்றுகூடி வாழ துஆ செய்வோம், இன்ஷா அல்லாஹ்)

  பதிலளிநீக்கு
 7. திண்டுக்கல் தனபாலன் கூறியது...
  நல்வாழ்த்துக்கள்...//

  வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
 8. Abufaisal Ruh கூறியது...
  ///

  வருகைக்கும் வாழ்த்துக்கும்,பிராத்தனைக்கும் மிகுந்த மகிழ்ச்சி. மிக்க நன்றி அன்பு சகோதரர் அவர்களே.

  பதிலளிநீக்கு
 9. ajeetha singh கூறியது...
  Mikka magizhchi menmelum valara vazhthukal .enn manamarntha thirumana naal vazhthukal

  மிக்க நன்றி அஜிதா.தாங்கள் தெரிவித்ததால் இவ்விசயமறிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி தோழியே..வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 10. சுப்ரமணியன் கூறியது...//

  ஐயா தங்களின் வருகைக்கும் பாசமான வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 11. //கண்ணன் காங்கேயம் கூறியது...மச்சானுக்கா இக்கவிதை..
  அட்ரா சக்கை கொடுத்து வைத்தவர் மச்சான்.கவிதைபாடி கொஞ்சும் மனைவிகிடைக்க..//

  மச்சானுக்கேதான்.
  அவுக கிடைக்க நாந்தானுங்கோ கொடுத்து வைக்கனும்..

  தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 12. //நமக்கு ஒரு இனிய வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்த இறைவனுக்கே எல்லா புகழும்.//

  அவனுக்குதான் புகழைத்தும்.உன்ஐதான் ஷேக்.
  தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 13. நல்வாழ்த்துகள்.

  தினகரனில் தங்கள் வலைத்தளம் பற்றி எழுதியிருந்தார்கள். பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பாராட்டுக்கள்.

  நல்லதொரு படைப்பு. பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 14. வாழ்த்துகள் மனம் நிறைவோடு பல்லாண்டு வாழவும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 15. அன்புடையீர்,

  வணக்கம்.

  நேற்று 17.03.2013 ஞாயிறு 'தினகரன்' செய்தித்தாளின் இணைப்பான 'வசந்தம்' இதழின் ஆறாம் பக்கத்தை பார்க்க நேர்ந்தது.

  அதில் “இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள்” என்ற தலைப்பில் தங்களின் வலைத்தளம் பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறார்கள்.

  படித்ததும் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

  தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் அன்பான இனிய நல்வாழ்த்துகளும்.

  அன்புடன்
  வை. கோபாலகிருஷ்ணன்
  gopu1949.blogspot.in

  பதிலளிநீக்கு
 16. வாழ்த்துக்கள்...

  22 வருஷமாவா ஆவூது...

  வாழ்த்துக்கள்...

  முத்துப்பேட்டை இளஞ் (ஹி...ஹி...ஹி)ஜோடிகளுக்கு...

  அதா எனக்கு தெரியுமே...
  அதா எனக்கு தெரியுமே...


  மீண்டும்...
  வாழ்த்துக்கள்...

  பாவம் உங்கள் மச்சான்...

  பதிலளிநீக்கு


 17. 22 வருஷமாவா ஆவூது...!

  வாழ்த்துக்கள்...!


  வாழ்த்துக்கள்...! முத்துப்பேட்டை இளஞ் (ஹி...ஹி...ஹி)ஜோடிகளுக்கு...

  அதா எனக்கு தெரியுமே...
  அதா எனக்கு தெரியுமே...


  மீண்டும்...
  வாழ்த்துக்கள்...

  பாவம் உங்கள் மச்சான்...
  ஹி...ஹி...ஹி ஹி...ஹி...ஹி ஹி...ஹி...ஹி ஹி...ஹி...ஹி

  பதிலளிநீக்கு
 18. 22 வருஷமாவா ஆவூது...!

  வாழ்த்துக்கள்...!


  வாழ்த்துக்கள்...! முத்துப்பேட்டை இளஞ் (ஹி...ஹி...ஹி)ஜோடிகளுக்கு...

  அதா எனக்கு தெரியுமே...!
  அதா எனக்கு தெரியுமே...!


  மீண்டும்...
  வாழ்த்துக்கள்...!

  பாவம் உங்கள் மச்சான்...!
  ஹி...ஹி...ஹி ஹி...ஹி...ஹி
  ஹி...ஹி...ஹி ஹி...ஹி...ஹி

  பதிலளிநீக்கு
 19. வாழ்த்துக்கள்...

  22 வருஷமாவா ஆவூது...

  வாழ்த்துக்கள்...

  முத்துப்பேட்டை இளஞ் (ஹி...ஹி...ஹி)ஜோடிகளுக்கு...

  அதா எனக்கு தெரியுமே...
  அதா எனக்கு தெரியுமே...


  மீண்டும்...
  வாழ்த்துக்கள்...

  பாவம் உங்கள் மச்சான்...

  பதிலளிநீக்கு
 20. 22 வருஷமாவா ஆவூது...!

  வாழ்த்துக்கள்...!


  வாழ்த்துக்கள்...! முத்துப்பேட்டை இளஞ் (ஹி...ஹி...ஹி)ஜோடிகளுக்கு...

  அதா எனக்கு தெரியுமே...!
  அதா எனக்கு தெரியுமே...!


  மீண்டும்...
  வாழ்த்துக்கள்...!

  பாவம் உங்கள் மச்சான்...!
  ஹி...ஹி...ஹி ஹி...ஹி...ஹி
  ஹி...ஹி...ஹி ஹி...ஹி...ஹி

  பதிலளிநீக்கு
 21. 22 வருஷமாவா ஆவூது...!

  வாழ்த்துக்கள்...!


  வாழ்த்துக்கள்...! முத்துப்பேட்டை இளஞ் (ஹி...ஹி...ஹி)ஜோடிகளுக்கு...

  அதா எனக்கு தெரியுமே...!
  அதா எனக்கு தெரியுமே...!


  மீண்டும்...
  வாழ்த்துக்கள்...!

  பாவம் உங்கள் மச்சான்...!
  ஹி...ஹி...ஹி ஹி...ஹி...ஹி
  ஹி...ஹி...ஹி ஹி...ஹி...ஹி

  பதிலளிநீக்கு
 22. சிராஜ் கூறியது...
  சூப்பர் மலிக்கா...

  கலக்குறீங்க...

  உங்கள் திறமைக்கு இது சிறு அங்கீகாரம் தான்.. இன்ஷா அல்லாஹ் போகப் போக மேலும் கிடைக்கும்...

  வாழ்த்துக்கள்.//

  அடட நம்ம டீக்கடை ஓனரா வாங்க வாங்க.

  தங்களின் வருகைக்கும் தூண்டி எரியவைக்கும் கருத்துகளுக்கும், வாழ்த்துகளுகும் மிக்க சந்தோஷம்..

  பதிலளிநீக்கு
 23. நீங்கள் விரும்பும் வாழ்க்கை அமைய! உங்களை நம்பிவரும் துணையை விரும்புங்கள் தூய்மையாக! நீங்கள் விரும்பிய வாழ்க்கை உங்கள் கண்முன் உங்களுக்காகவே!அருமை

  பதிலளிநீக்கு
 24. வாழ்க்கையை சொர்க்கமாக்கும் வசந்த வரிகள்...

  வாழ்த்துக்கள் அக்கா....

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது