வனத்தில் தனித்து
நிற்கும்
ஒற்றை மரத்தோடு உரசி
தென்றல் செய்யும்
சரசம்!
வானுச்சியில் மிதக்கும்
நிலவரசியை நோக்கிப்போகும்
ராஜமேகத்தின் தந்திரம்!
பச்சைப் புல்வெளியெங்கும்
பனித்துளிகள் நடத்தும்
இச்சைப் புரட்சி ராஜ்ஜியம்!
இவையனைத்தும்
இருள் போர்வைக்குள்
இரவுப் போருக்குள் நிகழும்
இரகசிய காப்பீடுகள்.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
Hai...
பதிலளிநீக்குNanthan 1staaaaaaaaaa
என்ன கவிதை...
பதிலளிநீக்குஒரு மாதிரியா இருக்கு...
எல்லாம் “இயற்கை”மயமா இருக்கு...
அதென்ன இரகசிய காப்பீடு...
நல்லாத்தான் இருக்கு... நா கவித வரிகளச் சொன்னே...
ரொம்ப நல்லா எழுதுறீங்க மலிக்கா
பதிலளிநீக்குதொடர்ந்து ரசித்துவருகிறேன்
புத்தகங்களாய் போட்டால் இன்னும் பலருக்கு உங்கள் எழுத்துகள் செல்ல வாய்ப்பிருக்கிறது.. வாழ்த்துகள்
மேடம் அருணாதேவி...
பதிலளிநீக்குஏற்கனவே “உணர்வுகளின் ஓசை”ன்னு கவிதைன்னு புத்தகம் வெளியீட்டுட்டாங்க...
இப்ப இன்னொரு நூலும் ரெடியாயிடுச்சுன்னு... பட்சி சொல்லியிருக்கு...
பதிலளிநீக்குஇரகசியத்தை பாதுகாத்து மெல்லிய நூலிழையில் வரிகள் செதுக்கிய விதம் அருமை.
இருள்போர்வைக்குள்
இரகசியக்காப்பீடு மிக மிக அருமை மலிக்கா..