நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சந்திப்பின் நிகழ்வில்.


பனிக்கொட்டும் இரவில்
படர்ந்திருந்த மெளனங்கள்
மெல்ல கலைகிறது
மேகத்தோடு சேர்ந்து கொ[கெ]ஞ்சலோடு

ஆழ்மனக்கிடங்கில் அமுங்கிடமுடியாமல்
ஆழிப்பேரலைபோல்
அடித்துக்கொண்டு கிடக்கும் அந்நிகழ்வுகள்
அதரங்களில் ஓரத்தில்
வழிந்தோட துடித்த நிலையில்

அந்நேரத்தில் அதிசயமாய்
அசைந்தாடிய அனிச்சமலரோடு
அசையமறுத்த இமைகளுக்குள்ளிருந்து
அசைந்தாடியது கருவிழிகள் அச்சத்தால்

விரசப் பார்வை உரசி உரசி
உயிரை உருக்கத் தொடங்க
ஒளியோடு நிலா உலாவரும் நேரத்தில்
ஒளிந்துக்கொள்ள இடம்தேடியது வெட்கம்

தன்னையறியாது தலையசைக்கும்
தவிப்புகளை தவிடுபொடியாக்கி
தனிமைக்கு விடைக்கொடுக்க
எண்ணிய வேளையில்

தட்டுத் தடுமாறி இமைகளைப்பிரித்து
நினைவுகளை மீட்டெடுத்து
சுதாரித்து கொண்டு விடைக்கொடுக்கிறது
விரக்தியோடு விழியைசைத்து
விசும்பல்களை சுமந்துகொண்டு..
----------------------------------------------------------------------
தமிழ்குறிஞ்சியில் வெளியான கவிதை
நன்றி தமிழ்குறிஞ்சி இணைய இதழ்.




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

8 கருத்துகள்:

  1. வரவர...
    மலிக்கா கவிதைகளில்லாம்...

    சொல்லழகும்..
    எழுத்தழகும்..
    பொருளழகும்...
    நடையழகும்....
    கவியழகும்...மிளிர்ந்து..

    எதுகைமோனையுடன்

    அழகான..
    அற்புதமாக படைக்கப்படுகிறது...

    வாழ்த்துக்கள்...
    கவிஞரே...



    பதிலளிநீக்கு
  2. வரவர
    மலிக்காவின்
    கவிதையில்...

    சொல்லாடல்...
    பொருளாடல்...
    வரியாடல்... என

    சொல்லழகும்...
    பொருளழகும்...
    கவியழகும்... பெருகிக் கொண்டே போகிறது...

    என்னமப் போங்க...

    இக்கவிதை

    அழகு...
    அருமை...
    அற்புதம்...

    வாழ்த்துக்கள்.

    நட்புடன்
    காஞ்சி முரளி



    பதிலளிநீக்கு
  3. பனி கொட்டும் குளிர்ச்சி எப்போதும்போல உங்கள் வரிகளில் தோழி !

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது