விரல்கள் பிரித்து
விடைபெறும் பொழுது
விழிகள் நான்கும்
விபத்துக்குள்ளாகியது!
நெற்றி முகர்ந்து
உனக்குள் வலிப்பதை
எனது உதடும்!
எனக்குள் வலிப்பதை
உனது உயிரும்
உணர்ந்து துடித்தது!
நீ அழுதிடக்கூடாதென நானும்
நான் அழுதிடக்கூடாதென நீயும்
நமது மனதுக்குள் பிரத்தானை!
கண்ணீர்களை மறைக்க - நமது
கன்னங்கள் அணிந்தது
பொய் புன்னகைகளை!
தொலைதூரம் போனபின்பும்
திரும்பி பார்த்தலை
எதிர்நோக்கிய - நமது
நிலைகொள்ளாப் பார்வைகள்!
பிரிவின் துயர்களை
தாங்கிக்கொள்ள முடியாமல்
பரிதவிக்கும் உனது முகம்!
தாங்கிக் கொண்டதாய்
பாசாங்குகாட்டி
பதபதைக்கும் எனது மனம்!
பிரிவுகள் நமதுறவை
பலப்படுத்தும் என்ற நம்பிக்கையில்
பிரியாவிடைகள்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
பிரிவின் துயரை நினைத்தாலே மனதைப் பிசைகிறது.
பதிலளிநீக்குஒவ்வொரு வரியும் அழகாக எழுதியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.
படத்தேர்வும் வெகு அருமை.
வாழ்த்துகள்.
pirvin thuyar manavaliyai erpaduthukirathu
பதிலளிநீக்கு