நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தியாகத்தின் அடையாளம்.

 
இறைத் தூதருக்கே
இறை சோதனை
இயலாத காலத்தில் ஈன்றெடுத்த
அன்பு மகனை
அறுத்து பலியிடச்சொல்லி வந்தது
இறைகட்டளை
 
பெற்ற மகனை பலியிடுவதில்
பெற்றோருக்கில்லை  
சிறு தயக்கம்
இறையாணையையேற்று
இறைத்தூதர் செய்யத் துணிந்ததோ
பெரும் தியாகம்
 
இறைச் சோதனையில்
இறை நேசருக்கு
இமாலய வெற்றி
நாயன் செய்தான்
நல்லதோர் செயலை
நரபலி நீக்கி
 
தீன்மார்க்கத்திலொரு சரித்திரம்
தீன்தாரியின் உறுதியான ஈமான் [இறைநம்பிக்கை]
தியாகம் என்பதின் அடையாளம்
இப்ராஹிம் நபி என்பதே அதுவாகும்
புண்ணியம் சேர்ப்பதிலொரு சிறப்பம்சம்.
புனித ஹஜ்ஜுப் பெருநாளாகும்…..


இவ்வுலகிலுள்ள அனைத்து இஸ்லாமிய நெஞ்சங்களுக்கும் ஈத் முபாரக் என்னும் ஹஜ்ஜுப்பெருநாள் தியாகத்திருநாள் நல்வாழ்த்துகள்.

ஏங்கும் நெஞ்சம் [கிளிக்]


யாஅல்லாஹ்!
இப்புனித ஹஜ்ஜுப் பெருநாளின் பொருட்டால்
எங்களின் பாவங்களை மன்னித்தருள்வாயாக!
இப்ராஹிம் நபி ஹாஜிரா அலை அவர்களின்
பொறுமை மனப்பான்மையையும், சகிப்புத்தன்மையையும்
எங்களுக்கும் தந்தருள்வாயாக.
அடுத்தவருடம் நாங்களும் ஹஜ் செய்யக்கூடிய நற்பாக்கியத்தை தந்தருள்வாயா

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

8 கருத்துகள்:

  1. தியாகத் திருநாள் வாழ்த்துகள் சகோதரி

    //இறைச் சோதனையில்
    இறை நேசருக்கு
    இமாலய வெற்றி
    நாயன் செய்தான்
    நல்லதோர் செயலை
    நரபலி நீக்கி///

    மிக அருமையான வரிகள் நயம்பட உரைத்தீர்கள்

    பதிலளிநீக்கு
  2. ஈத் வாழ்த்துக்கள் மலிக்கா
    தியாக வரலாறு தித்திக்கும் வரிகளில்
    நச்சென்று எழுதியுள்ளீர்கள்..

    மீண்டும் எனது வாழ்த்துக்கள் மலிக்கா

    பதிலளிநீக்கு
  3. Vazthukkal...

    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  4. Vazthukkal...

    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  5. //யாஅல்லாஹ்!
    இப்புனித ஹஜ்ஜுப் பெருநாளின் பொருட்டால்
    எங்களின் பாவங்களை மன்னித்தருள்வாயாக!
    இப்ராஹிம் நபி ஹாஜிரா அலை அவர்களின்
    பொறுமை மனப்பான்மையையும், சகிப்புத்தன்மையையும்
    எங்களுக்கும் தந்தருள்வாயாக.
    அடுத்தவருடம் நாங்களும் ஹஜ் செய்யக்கூடிய நற்பாக்கியத்தை தந்தருள்வாயா// ஆமீன்...ஆமீன்...யாரப்பல் ஆலமீன்....:))

    இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  6. தியாகத் திருநாள் வாழ்த்துகள் சகோதரி.

    //தீன்மார்க்கத்திலொரு சரித்திரம்
    தீன்தாரியின் உறுதியான ஈமான் [இறைநம்பிக்கை]
    தியாகம் என்பதின் அடையாளம்
    இப்ராஹிம் நபி என்பதே அதுவாகும்
    புண்ணியம் சேர்ப்பதிலொரு சிறப்பம்சம்.
    புனித ஹஜ்ஜுப் பெருநாளாகும்…..//

    super

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது