மனக்கிடங்கில்
மன்றாடிக் கிடக்கும் ஊமை உணர்வுகள்
மங்காமல் மறையாமல் கிடந்தழும்
மடிந்துவிட வேண்டி
ஊற்றெடுக்கும் உணர்வுப் பிளம்புகள்
ஊழிக் காற்றிலும்
உதிர்ந்துபோன இலைகளாய்
ஊசலாடியே உயிர்வதை
செய்தபடி
எரிவதெல்லாம் ஒளியாகாது எனத்தெரிந்தும்
எரிந்துகொண்டிருகிறது
சிறு நெருப்பு
அணைந்து விடாது
அடைக்கலம் கொடுக்க
ஆளில்லையென்று துடித்தபடி
இன்பக்குழிகளுக்குள்
இளைப்பாற ஏங்கிய இதயமாய்
பனிப்போர்வைக்குள் சிக்குவதாய் எண்ணி
பாவச்சிறைக்குள்
மாட்டிக்கொண்டது சாப விதி
உயிர் நசித்து!உயிர் நசித்து!
ஊறுவிளைவிக்கும் மன உலைச்சலுக்குள்ளே
உடல் எரித்து!உணர்வு குலைத்து!
உயி[து]ர்நாற்றம் வரக்காரணமென்னவோ முன்பாவ சதி
உயிர் நசித்து!உயிர் நசித்து!
ஊறுவிளைவிக்கும் மன உலைச்சலுக்குள்ளே
உடல் எரித்து!உணர்வு குலைத்து!
உயி[து]ர்நாற்றம் வரக்காரணமென்னவோ முன்பாவ சதி
-----------------------------------------------------------------
இலண்டன் வானொலியில் வியாழன் கவிதை நேரம் பகுதியில் சகோதரி பேகம் அவர்களால் வாசிக்கப்பட எனது கவிதை..
மிக்க நன்றி சகோதரி பேகம்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .
வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமீண்டும்
லண்டன் வானொலியா....ஆஆஆஆஆ
இலண்டன் வானொலியில்...
பதிலளிநீக்கு“காண்ட்ராக்ட்” (ஒத்திகை) எடுத்திருக்கீங்களா மேடம்...
அவ்வ்வ்வ்வ்.....