நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

”ப்பூ”
நிலவுமில்லாமல் ஒளியுமில்லாமல்
இருள் இரவை கவ்விக்கொண்டிருந்த நேரம்
நடுநிசியில் நாயொன்று ஊலையிட
நெடுநெடுயென வளர்ந்திருந்த
தென்னை கீற்றுக்கிடையிலிருந்த
தேவாங்குகள் திருத்திருவென விழித்திருக்க

ஊரடங்கிடந்த வேளையில்
உரத்த குரலெழுப்பி
உளறத் தொடங்கியபடியே
ஊரை வலம் வந்தது ஒரு உருவம்

கேட்பாரற்று பார்ப்பாற்று கிடக்கிறேன்
கேடுகெட்ட இம்மனிதர்களுக்கிடையில்
நாதியற்று நான் தங்கிட வீடற்று
நடுவீதிகளில்  நிற்க்கிறேன்

கந்தல் துணி அணிந்ததினால்
காரித் துப்பப்படுகிறேன்
நாலுகாசு இல்லையென்று
நாயைபோல நடத்தப்படுகிறேன்.

வேடிக்கையான உலகினிலே-பல
வேடிக்கைகள் காண்கிறேன்
வேசம் கண்டும் மோசம் கண்டும்
வெடுக்குச் சிரிப்பு சிரிக்கிறேன்

வேசிகளும் தாசிகளும்
வீட்டுத் தலைவியாக
வேசம் கட்டி நடிக்கிறார்
ஊரையடிச்சி உலையில்போட்டு
வட்டியோடும் குட்டியோடும்
வீட்டுதலைவனென்று  நடக்கிறார்

நாலுகாசு கையிலிருந்தா
நாயைக்கூட மதிகிறார்
நாறிப்போன மனிதரெனத்தெரிந்தும்
நட்புகொண்டு  அலைகிறார்

உள்ளே அழுக்கு வெளியே மினுக்கி
உலகிற்காக வாழ்கிறார்
நாளும் வேசம் பொழுதும் மோசம்
நாணிக்கோனி நடிக்கிறார்

வீதியிலிருக்கும் என்னைப்பார்த்து
விதியே வேதனையே என்கிறார்
வீட்டுக்குள்ளே இருந்தபோதும்
வீட்டுக்கு விலக்காய் கிடக்கிறார்

புத்தி சரி யில்லையென்று
என்னைக் கண்டு
பயந்து விலகி போகிறார்

பாவம் புரியவில்லை
புத்தியே அவருக்கில்லையென்பதை
புரிந்துகொள்ள மறுகிறார்
இந்த பூமி உருண்டை என்பதை மறக்கிறார்

“ப்பூ”

இந்த வாழ்க்கை
போலியென்பதையும் உணராது தவிக்கிறார்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.  .

4 கருத்துகள்:

 1. அனைத்தும் உண்மை வரிகள்... உணர வேண்டும் அனைவரும்...

  பதிலளிநீக்கு
 2. ப்பூ" eththanai arumaiyana thalaippu ப்பூ ithuthaan immanitha vaazkai enpathupol irukirathu mika arumai malikka..

  பதிலளிநீக்கு
 3. நல்ல கவிதை...!

  பார்த்து இந்த கவிதைக்கும் சிம்ரன் மாதிரி... த்ரிஷாகிட்ட ஆட்டோகிராப் வாங்கப்போறீங்க...!

  எப்போதும்

  நீங்கள் நீங்களாய் இருங்கள்...!

  என்னைபோருதளவில்...

  ஓர் கவிஞரின் "கவிதை" ஜென்ம சாபவிமோசனம் (கவிதை உருவாக்கியதன் அர்த்தம்)எப்போதெனில்...

  அந்தக் கவிதை... எத்தனைப் பேரால் படிக்கப்பட்டு... பாராட்டப்படுகிறதோ...

  அப்போதுதான்.... அந்தக் கவிதை படைக்கப்பட்டதன் பயனை அடையும்....!

  (இதை நான் ஓர் கவிதையாய் "என் பழைய பனை ஓலைகள்"ல் எழுதி வைத்துள்ளேன்)...!

  இதுதான்... ஒவ்வோர் கவிஞனின் ஆசை...! விருப்பம்...! அபிலாஷை...! எல்லாமே...!

  தங்கள் கவிதை படைக்கப்பட்டதன் பயன் என்ன தெரியுமா...! நீங்களே ஓர் பதிவில் சொல்லிருக்கிறீர்கள்...! நினைவிருக்கா...! பிரிந்திருந்த ஓர் தம்பதியை தங்கள் கவிதை சேர்த்துவைத்ததுன்னு.... அதுதான்.. தங்கள் கவிதையின் பயன்...! அதுதான் தங்கள் கவிதையின் "" ஜென்ம சாபவிமோசனம்"....!

  நீங்க என்னாடான்னா...!

  சிம்ரன் கையெழுத்து போட்டாங்க...!

  திரிஷா கையெழுத்து போட்டாங்க...!

  குஸ்பு கையெழுத்து போட்டாங்க...! அப்படீன்னு புளங்காகிதம் அடையிறீங்க....!

  வலையுலகில் "கவிஞர் மலிக்கா" சாதிக்காததை "சிம்ரன்" சாதித்தாய் நான் நினைக்கவில்லை...!

  எதோ... நான் பொறாமபடுறேன்னு நினைச்சுடாதீங்க...! நான் எங்கே இருக்கேன் என்பதும்... எத்தனையோ நடிக... நடிகைகளை பார்த்துருக்கேன் என்பதும் தங்கள் அறிவீர்கள்...

  பதிலளிநீக்கு
 4. சகோ சத்தியமாய் நான் சிம்ரன் கையெழுப்போட்டதற்காக சந்தோஷபடவேயில்லை. எனது கவிதை ஒரு மீடியாவில் படிக்கப்பட்டபோது அதனை பலர் கேட்டதை நினைத்துதான் சந்தோஷப்பட்டேன். அதிலும் அக்கவிதையின் கருத்தை தாய்தந்தைந்தையை உதாசீனப்படுதிஉம் இன்னும் படுத்திக்கொண்டிருப்போரும் கேட்டிருக்கக்கூடுமே என்ற சந்தோஷம்தான் எனக்கு அதிகமிருந்தது..

  என்னைப்பற்றி நல்லா தெரிந்துமா இக்கேள்விகள் சகோ..

  இருந்தாலும் என்னை எந்நிலையிலும் சரிசெய்துகொள்ள ஒரு அறிவுரையாய் இதை நான் எடுத்துக்கொள்வேன் சகோ..

  என்றுமே இந்த மலிக்கா அற்ப சந்தோஷங்களுக்கும் மகிழ்ச்சிகளுக்கும் உட்படமாட்டாள்..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது