நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சிந்திக்க சில நொடிகள்
உள்மெளனங்களை 
உதறிக்கொண்டே 
மெல்லிய புன்னகை பூத்தபடி 
மெல்ல அன்னார்ந்து பார்க்கிறேன்!
சூழ்ந்திருந்த மேகங்கள் 
கொஞ்சம் கொஞ்சமாய் நகர 
ஒளிந்திருந்த நிலவின் வெளியே 
ஒரு ஒளிவட்டம் தெரிகிறது!

வானத்தை  நிறைத்திருந்த 
விடிவெள்ளிகள் 
மின்னி மின்னி கண்களுக்கு 
மகிழ்ச்சி விருந்தளிக்கிறது!

விருட்டென்று ஒரு வெள்ளி 
வானத்தைவிட்டு வெளியேறி 
பூமியை நோக்கி  
பொசுகென்று விழுகிறது!
ஒற்றை நிலவுக்கு  
இடைவெளிவிட்டு  
கொஞ்சம் தள்ளி ஒரு வெள்ளி 
நிலவை ரசித்தபடி தொடர்கிறது!
தூண்களே இல்லாமல்  
ஒரு வானம் 
தூய்மையாக காட்சி தந்து-பற்பல 
புதுமைச் செய்திகள் அளிக்கிறது!
அந்தரத்தில் வசப்படுத்தப்பட்ட 
புவியீர்ப்பு சக்திகளை 
பூமிக்கும் அளித்தபடி 
கோல்களும் சுழல்கிறது!
எத்தனை எத்தனை விந்தைகள் 
அத்தனையும் வியக்குபடி 
அகிலமுழுவதும் அருளாளனின்  
அருள்கொடைகள் நிறைந்தபடி!
எல்லாம் கண்டு களிக்க 
ஏகனின் அற்புதம் கண்டு வியக்க 
எனக்கிரு கண்கள் படைத்த 
இறைவனே உனை போற்றுகிறேன்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

9 கருத்துகள்:

 1. வார்த்தைகளே இல்லை சொல்ல மிக அருமை மலிக்கா மேடம்.

  உங்களின் சொல்லாடல்கள் அனைத்தும் அனைத்து கவிதைகளிலும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.

  நீங்க யாரிடம் தமிழ் கற்றீர்கள் அதாவது கவியெழுத கற்றீர்கள். சொல்லாற்றல் அதாவது சொல்வதை பிறர் புரிந்துகொள்ளும்படி சொல்வதே சிறப்பு அதிலும் கவிதைவடிவில் தாங்கள் எழுதும் அனைத்தும் பலருக்கும் புரிகிறது. தொடர்ந்து நற்சிந்தனைகளை தாருங்கள்..

  கடவுள் ஆசீர்வதிக்கட்டும்..

  பதிலளிநீக்கு
 2. என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
  உங்கள் கருத்துகள்.

  என் கவியுற்றுக்கு நீரோட்டம்
  உங்கள் கருத்துகள்

  என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
  உங்கள் கருத்துகள்

  என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
  உங்கள் கருத்துகள்.//

  அனைத்தும் சூப்பர்

  //ஆகவே அனைத்தும் நீங்கள்
  அதனுள்ளே ஓரமாய் நான்.//

  தன்னடக்கமா மேடம்.. அதுதான் உங்களை இந்தளவு கொண்டு வந்துள்ளதோ.. வாழ்த்துகள்..பாராட்டுகள்..

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் கண்களைக் கொடுத்த ஏகன்
  சிலருக்கு மட்டும்தானே
  இதுபோன்ற ரசிப்புத் திறனை வழங்கியுள்ளான்
  மனம் தொட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. உங்கள் ரசிப்பின் ரசனை அருமையான கவிதை வரிகளாய்...
  அழகாய் ஒரு கவிதை
  வாழ்த்துக்கள் அக்கா.

  பதிலளிநீக்கு
 5. ம்ம்ம் ...அருமை சகோ

  மனிதா
  இந்த உலகம் முழுவதும் பயணம் செல்
  என் படைப்பின் அற்புதைதை பார்

  இறைவன் மனிதனிடம் சொன்னது

  பதிலளிநீக்கு
 6. வரிகள் அழகு.. இவ்வளவு நாளாக உங்கள் பக்கம் வரவே முடியவில்லை.. Ongoing event " Party snacks",more detais : http://en-iniyaillam.blogspot.co.uk/2012/08/party-snacks-event-announcement.html

  பதிலளிநீக்கு
 7. ///எனக்கிரு கண்கள் படைத்த
  இறைவனே உனை போற்றுகிறேன்.. /// என

  கண்களால் கண்டதை..
  கவிதையால் வடித்து...

  புவியரசியையும்
  வானரசியையும்
  வாழ்த்திப்பாடிய
  கவியரசியே...!

  வாழ்த்துக்கள்...!


  பதிலளிநீக்கு
 8. வானத்தை கண்டாய்-மெய்ஞானத்தை தந்தாய்!-நிலவை கண்டு உலவ சொன்னாய்!-நட்சத்திரங்களை கொண்டு தோரனம் தொடுத்தாய்!-புவி ஈர்ப்பை என் செவி ஈர்க்க தந்தாய்!-உன் கவி நடையில் விஞ்யானமும் அஞ்யானமும் உண்டு!-இத்தனையும் அல்லஹ்வின் அருள் என்றாய்!- உன்மையே!<b

  பதிலளிநீக்கு
 9. என்ன சொல்வதென்றே தெரியவில்லை... அருமை...

  நன்றி... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது