நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வாசமற்று நாசமாகுதே!


இயற்கை அழியுதே இயற்கை அழியுதே!
இப்பூமியின் வனப்பும் அழிந்துபோகுதே!

செயற்கை பெருகுதே! செயற்கை பெருகுதே!
                                               சீக்கிரம் பூமி அழியப்போகுதே!

விலாசம் தேடும் மண்வாசத்திற்க்கோ
வீதிகளையும் மனிதபுத்தி சதிசெய்யுதே!

மண் தெருவையெல்லாம் மாற்றி
சிமிண்ட் ரோடாக்கியதே! ச[ஜ]ல்லிக் காடாக்கியதே!

மழை வர மறுப்பதால் சாலையெல்லாம்
சிதறி வெடிக்குதே! ஆங்காங்கே குதறிக்கிடக்குதே!

சின்னச்சிறுசுகளையும் சிராய்த்துவிடுதே!
சற்று தடுமாறினாலும் எலும்பை சட்டென முறிக்குதே!

வெயிலின் கொடுமையோ
தேகத்தையெல்லாம் வேகவைக்குதே!

சிரித்த முகத்தையெல்லாம்
சிடுசிடுப்பாக்கி கருக்குதே!

சில்லென்ற காற்றுகூட
சுல்லென்று சுட்டு மிரட்டுதே!

குளிர்காலமிங்கே
கொளுந்துவிட்டெரியுதே!

மண்ணையெல்லாம் 
மறைத்து வருகிறதே சிமிண்ட் சாலை

மண் வாசத்தையிழந்தது தவிக்கிறதே
மனச் சோலை

மழைபொழிந்த போதுமில்லையே
மண்ணின் வாசம்

விலாசம் தேடியாலையுதே ஆங்காங்கே
இயற்கையின் தேசம்

மனிதன் செய்துவருகிறான்
மண்ணுக்கும் அவனுக்கும் சேர்த்து நாசம்

இயற்கையெல்லாம் செயற்கையாகினால்
இன்னல்களால் அவதியுருமே மனிதயினம்..


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

12 கருத்துகள்:

  1. இன்னல்களால் அவதியுருமே மனிதயினம்.. //சத்தியமான உண்மை

    பதிலளிநீக்கு
  2. நடக்கும் உண்மையை, நன்றாக கவிதை மூலம், கொட்டித் தீர்த்து உள்ளீர்கள்... மக்கள் அறிய வேண்டும்..

    நன்றி… தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. யாரோ...!
    எப்பவோ எழுதி வச்சது...!

    உங்க கவிதையின் கருதான்...
    இக்கவிதையின் கரு...!

    அது...!

    இயற்கையை.... நீ ஏற்காமல்
    நீ... புறக்கணிக்க... புறக்கணிக்க...!
    புறக்கணிக்கிறது... உன்னை அது...!

    நீ
    ஜனனித்ததும்...
    மரணிப்பதும்...
    இயற்கையின் நிழலில்தான்...!

    நிழலாகிய நீ...!
    நின் நிஜத்துடனா
    நிரந்தர யுத்தம்...?

    இதனை
    மறந்தும்... மறைத்தும்...
    மானிடப்பதரே...!

    உனது யுத்தம்
    உன்மீதேவா...?

    உங்க கவிதை... அருமை...!

    இப்பத்தான்... நீங்க எங்கப் பக்கம் வந்துருக்கீங்க...!
    நா...! இயற்கை புறக்கணிப்பை சொல்றேன்...!

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. நாமும்தானே குற்றவாளிகள்.அனுபவிப்போம் !

    பதிலளிநீக்கு
  6. வாங்க சகோ தனபாலன். அந்தமக்களில் நாமும் ஒருவர்..

    கொட்டித்தீர்க்கத்தான் முடிகிறது வேறெதுவும் செய்யமுடியலையே!

    மிக்க நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  7. அடடா வாங்க முரளியாரே! நலம்தானே! இந்தபக்கம் வந்து ரொம்ப நாளாச்சிபோலவே. [ஆமா இப்பவெல்லாம் என்ன கவிதையா எழுதுறீங்க எல்லாமே உளறலாவுல இருக்கு அப்படின்னு முணுமுணுப்பது கேட்குதுதான்..]

    உங்க அளவுக்கெல்லாம் நம்மாள எழுதமுடியாதுங்கோ புலவரே. உங்க கவி சூப்பர் இதுக்குமுன்னாடியே படிச்சிட்டேன்னு நெனக்கிறேன். ஆக அக்கருவும் இக்கருவும் ஒன்றை நோக்கியே..

    ரொம்ப நாளைக்கப்புற வருகைக்கும். கவியோடு கருத்துகள் தந்தமைக்கும் மிக்க நன்றிங்கோ.

    பதிலளிநீக்கு
  8. இப்பத்தான்... நீங்க எங்கப் பக்கம் வந்துருக்கீங்க...!//
    நாங்க எப்பவும் அந்தபக்கதான். இயற்கையின் பரப்பில்தானே எண்ணங்கள் உருவாகி எழுத்துக்களே எங்களுள் பிறக்குது..

    பதிலளிநீக்கு
  9. குற்றவாளிகள் நாமும்தான் தோழி ஹேமா. அனுப்பவிப்பதைதவிர வேறுவழியில்லையே!

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது