நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஓடுகாலி!



கன்னியர் காதலென்ற பெயரில்
கலிசடைப் பயல்களோடு
கண்காணா தூரமாகி
கடைசியில் கதிகலங்கி நிற்பதேன்?

மாலையிட்ட மங்கையும்
மதிமயங்கும் காலமாகி
மணந்தவனை விட்டுவிட்டு
மாற்றானோடு ஓடிப்போய்
மண்புழுவாய் ஆவதேன்?

மங்கையர் திலகமே!
மங்கையர் திலகமே!
மானிட வாழ்க்கையென்ன
மண்ணில் நிரந்தரமா?
சீர்கெட்டு போனபின்னே -உனக்கு
சிறப்புகள் வந்திடுமா?

மாற்றான் தோட்டத்து
மல்லிகைப் பூவைக்கண்டு
மதிமயங்கிப் போகலாமா?
உன் மானத்தை
மாற்றானுக்கு விலைபேசலாமா?

கன்னியே உன்னை
வளர்க்கும் வரைக்கும்தான்
உனக்கு உன் பெற்றோரா?
நீ வளர்ந்துவிட்டால் அவர்கள் உனக்கு
ஒன்றுக்கும்
உதவாத உதவாக்கரையா?

பெற்றோர் வார்த்தைகளென்றும்
பிள்ளைகளுக்கு பொல்லாததாகுமா? -உன்
பொன்னான பொற்காலத்தை அது
பொய்யாக்கி பொசுக்கிடுமா?

கல்யாணமான மங்கையே!
காசு காய்க்கும் மரமா?உன் கணவன்
 கடல்கடந்து கானகதேசத்திலே
காய்கிறான் தேய்கிறான் உனக்காகவே!
எண்ணை தேசத்திலே
எரிகிறான் கருகுகிறான் குடும்பம்காக்கவே!

அவனின்
அமானிதபொருளல்லவா? நீ
ஆகையால் உன்னை
பாதுகாத்துக் கொள்ளத் தவறிடாதே
பாதகச்செயல்களெதும் புரிந்திடாதே!

ஓடுகாலி என்ற பழிச்சொல்லை
ஒருக்காலும்  வாங்கிடாதே!
உத்தமியென்ற உன் நடத்தையை
ஊர் உலகம் தூற்றச் செய்திடாதே!

இது மாயக்கண்ணாடிபோன்ற உலகமடி
இதில் மனிதர்கள் யாவரும் நிழலுருவமடி
நிழல்கள் கண்டு  மகிழ்ந்திடாதே!
இதனால்  ஒருபொழுதும்
 நிம்மதி என்பதே கிடைத்திடாதே!

இக்கவிதை ”இஸ்லாமியப் பெண்மணி” யில் ஓடிப்போவது ஏன்? எதற்காக? என்ற கட்டுரைக்கு எழுதியது பதிவின் நீளம் கருதி இதனை அதில் சேர்க்கவில்லை.. அதனால் அதனை இங்கே பதிந்துள்ளேன். முடிந்தால் இங்கு வரும் நெஞ்சங்கள் கொஞ்சம் அங்கேயும் எட்டிப்பாருங்களேன் முடிந்தால் கருத்துகளும் பதிங்களேன்..



அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

15 கருத்துகள்:

  1. நல்ல கருத்துக்கள் கொண்ட கவிதை...
    பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்...

    பதிலளிநீக்கு
  2. நல்ல கருத்துக்கள் கொண்ட கவிதை...//unmaithaan baaln.nanri malikka

    பதிலளிநீக்கு
  3. முன்பே படித்து விட்டேன் சகோ...
    நீங்கள் குறிப்பிட்ட உங்கள் தளத்தில் படித்த முதல் பதிவு அது தான்...
    நன்றி…

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான கருத்துக்கள் கொண்ட நல்ல கவிதை. பெண்கள் அனைவரும் படிக்க வேண்டியது. சூப்பர்மா சிஸ்டர்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல கவிதை சகோ
    கட்டுரையை வாசித்தேன்
    ரெம்ப சிறப்பா எழதி இருக்கிறீர்கள்
    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சகோ

    பதிலளிநீக்கு
  6. அந்த ஓடுகாலி பென்க‌ளுக்கு என்ன பிரச்சனையோ பாவம்
    என்னா இருந்தாலும் ஓடுரது மகா தப்பு பிடிக்காட்டி டைவெர்ஸ் வாங்கிட்டு போயிடலம்

    பதிலளிநீக்கு
  7. அவசியமான கவலை சகோ. தீர்க்கமாக எழுதியிருக்கிறீர்கள். ஒரு நொடிப்பொழுதில் தீர்மானிக்கும் சிறுசுகளும் பெருசுகளும் பின்னர் ஒரு கட்டத்தில் நிச்சயமாக தவற்றை உணர்வர் என்பதே என் துணிபு.

    முன்னர் எழுதியது:


    படுமுன் தெளிக:

    ஒன்பதாம் வகுப்பு
    பத்தாம் வகுப்போடு
    ஓடிப்போனது...
    பெற்றோருக் கிடை
    வகுப்புக் கலவரம்!

    போய்ச் சேர்ந்த இடத்தில்
    தேடிச் சென்றது இல்லை -
    வீட்டுப் பாடம் ஒன்றும்
    விபரம் புரியவில்லை -
    கோனார் உரையிலும்
    குறிப்பெதுவும் இல்லை!

    குறுஞ்செய்தியில்
    முடங்கிய விரல்களால்...
    வெறுங்கஞ்சிக்குக்கூட
    வேலை யில்லை!

    கண்கள் வழி
    கற்ற காதலும்...
    காதலன் வழி
    பெற்ற காமமும்...
    வயிற்றுப் பசியில்
    வெற்றாகிப் போனது!

    கண்மனியும் பொன்மனியும்...
    காவியமும் ஓவியமும்...
    காசில்லா கதிகேட்டில்
    காலாவதி யானது!

    அவனுக்கு அவளும் -
    அவளுக்கு அவனும் -
    அலுத்துப் போன தொரு
    அதிகாலையில்...

    அரவணைக்க அம்மா,
    ஆறுதலுக்கு அப்பா,
    அந்தரங்கத் தோழியென
    அவதரித்த அக்கா,
    அம்மா சாயலில்
    அருமைத் தம்பி,
    இடுக்கன் களைய
    இனியதொரு சகி,
    இழந்ததெற் கெல்லாம்
    ஏங்கியது மனது...!

    மின்வெட்டு இரவொன்றின்
    மிதக்கும் மின்மினி...
    மழையற்ற தினமொன்றில்
    புல்நுனியில் பனித்துளி...
    என -
    மிகைத்த காதல்;

    முடியாத இரவு...
    விடியாத வானம்...
    படியாத உரவு ...
    உலர்ந்த மலர்வனம்...
    உருகாத மேகம்...
    என -
    எதிர்மறை எண்ணங்களில்
    அஸ்தமித்தது!

    ஏனோ...
    பிடிமண் இடுகையில்
    நொடிநேரம் காட்டும்
    முகமொன்று -
    குழிக்குள்...
    மின்னி மறைந்தது!

    முடிவைத் துவக்கமென்று
    மயங்கும் பிஞ்சுகளே...
    பழுக்கும் பருவம்வரை
    பொறுத்தலே பகுத்தறிவு!

    - சபீர்

    பதிலளிநீக்கு
  8. மேலும் சகோ,

    இந்த ஓடிப்போகும் தப்பாட்டத்தைத் தண்டிக்கத் தயாராயிருக்கும் சமூகம், தடுக்க ஒரு துரும்பையும் எடுத்துப் போடுவதில்லை என்பதையும் கவனித்தீர்களா?


    மேலும் மேலும் நசுங்குது சொம்பு:

    ஊரைவிட்டு
    விலக்கி வைத்தனர் என்னை
    நீரைவிட்டு
    நிலத்தி லிட்டனர் மீனை

    ஊரினம் யாவரும்
    ஓரின மாயினர்
    எனக் கெதிராய்
    காரண மாயிரம்
    தோரண மாயின

    சீர்திருத்தம் சொன்னவரை
    பெரியார் என்றனர்
    சிறுதிருத்தம் சொன்ன எனை
    பிரிந்துபோ என்றனர்

    பஞ்சாயத்தில்
    புலிவேஷத்துடன்
    பத்தாயத்து
    எலிகள்…
    படிப்பறிவு இன்றியே
    ஒரு
    பிடி பிடித்தன

    பிஞ்சுகள் இருவர்
    பிழை செய்தனர்
    விடியோ விளையாட்டென
    வாழ்க்கயை எண்ணினர்
    வாழத் தலைப்பட்டு
    வீடுகள் துறந்தனர்

    ஓடிப் போனவரைத்
    தேடிப் பிடித்தனர்
    ஊர்கூடி யமர்ந்து
    ஓயாது பேசினர்



    சட்டமோ
    சுய அறிவோ
    இன்றி
    தீவட்டித் தீர்ப்பு ஒன்றை
    சொல்லிவைத்தனர்

    பஞ்சாயத்துக்குப்
    பணம் கட்டி
    பாவம் தீர்க்கச் சொன்னனர்

    பிள்ளைகள் தவறுக்கு
    பெற்றோருக்குத் தணடனை

    ஒழுக்கக் கோட்பாடுகளில்
    ஊருக்குப் பொருப்பில்லையா
    ஓடிப்போகாமல் தடுக்க
    ஊர் என்ன செய்தது

    தவற்றை
    நிகழாமல்
    திருத்தி
    தடுக்கத்
    தவறிய
    பஞ்சாயத்துக்கு
    என்ன தண்டனை

    சொல்லி முடித்ததும்
    என்னை
    தள்ளி வைத்தனர்

    மசால் வடையும்
    மலாய் சாயாவும்
    மினெரல் வாட்டரைக்
    குடித்தும் கொப்பளித்தும்
    கலைந்துச் சென்றது பஞ்சாயத்து

    பதிலளிநீக்கு
  9. பார்த்தீங்களா இதுக்கு ஒரு பொம்மணாட்டிக்குடவந்து கருத்துபோடலையே ஏன்? யோசிங்க மலிக்கா.அவங்க விசயங்களை சொன்ன அவங்க ஒத்துக்கொள்ளவே மாட்டாங்க. ஏதோ நீங்க அல்லது ஒங்கலப்போல உள்ளவங்கத்தான் அதுவும் கொஞ்சம் ஒத்துக்கொள்ளுறீங்க உண்மைதானே சொல்கிறேன்..

    பதிலளிநீக்கு
  10. நல்ல சமூக அக்கறை கொண்ட கவிதை...!

    வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  11. கமென்ட் போட்டா... ஒரு தேங்க்ஸ்கூடவா சொல்லமாட்டீங்க...!

    பதிலளிநீக்கு
  12. அடடா முரளியாரா வாங்கோ வாங்கோ. நாங்க தேங்ஸ் சொல்லும் பரம்பரையல்ல நன்றிதான் சொல்லுவோமுங்க.

    ரொம்ப ரொம்ப நன்றிங்கங்கோ

    பதிலளிநீக்கு
  13. கருத்துகலென்னும் உரமிட்டு இந்த கவிச்செடிவள உதவும் அனைத்து உள்ளங்களுக்கும் உனர்வுப்பூவமான நன்றிகள்.

    உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் எனது எண்ணங்களுக்கு ஒப்பற்ற பலம்.
    ஆகவே அனைவரும் அன்பினை பகிருங்கள்.என்றும் எனது நன்றிகள்..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது