நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

போகுதே! போகுதே!


 பாவங்கள் போக்கிட வந்த மாதமே
புண்ணியம் சேர்த்திட வந்த முப்போகமே
போகுதே போகுதே அருள் கொடைமாதமே
போவதை தடுக்க முடியவில்லையே எதனாலுமே!

நடுக்கியது நடுங்கியது இந்த ஒருமாதமே
நரகின் வேதனையை நினைத்தே எங்கள் தேகமே!
தொழுதோம் அழுதோம் நேரம் தவறாமலே!
தொடர்ந்தே கரைந்தோம் குற்றங்களை போக்கச்சொல்லியே!

சிந்தியே கசிந்தது கண்ணீர் மொத்தமே
செய்த பாவத்தை நினைத்தே எங்கள் உள்ளமே!
சிரம் தாழ்த்தியே கிடந்தோம் சஜதாவிலே!-இனி
சிறு பாவமும் செய்யக்கூடா தென்றுண்ணியே!

இவ்வருடம் இருக்கும் உயிர்கள் யாவுமே
மறுவருடம் இருக்குமோ யாரும் அறிவதில்லையே!
இருக்கும் வரைக்குமே இந்த உலகிலே - எங்கள்
இன்னல்களை களைந்திடு எங்கள் இறைவனே!

நாளை நரகப் படுகுழி அதனை நாங்களும்
நாடும் செய்கைகள் எதனையும் இன்று செய்திடாமலே!
நாங்கள் இப்பூமியில் இருக்கும் நாள்வரைக்குமே!
எங்களை காத்திடு பாதுகாத்திடு கருணை இறைவனே!

சொர்க்கம் என்ற நிரந்தர தங்கு மிடத்தைதான்
வேண்டுதே கேட்குதே எங்கள் நெஞ்சமே!
கேட்டதை வழங்கிடும் எங்கள் இறைவனே!
சொர்க்கச் சோலையை
வாரிக் கொடுத்திடு வல்லலான இறைவனே!

இம்மாதம் இந்த உள்ளங்கள் இருந்தது போலவே
எந்நாளும் எவ்வருடமும் இருக்கட்டுமே!
இம்மாதம் இந்நெஞ்சங்கள வாழ்ந்ததுபோலவே
எந்நாளும் எந்நொடியும் தொடர்ந்து வாழட்டுமே!

சென்றுவா சென்றுவா மேன்மையான ரமலானே! -மேலும்
சிறப்புகள் கொண்டுவா மறுவருடமே!
எங்கள் பாவாங்கள் குற்றங்கள் போக்கிடவே
எடுத்துச்சொல்லி சிபாரிசெய் அகில இறைவனிடமே!

சென்றுவா சென்றுவா புனிதமாதமே! நீ
செல்கையில் சேர்த்துகொண்டுபோ
எங்கள் நன்மையின் சேகரமே!

சென்றுவா சென்றுவா அருள்மாதமே!-நீ
சென்று வருகையில் சீராகி
நேர்வழி கண்டிருக்கு[க[னு]ட்டு]மே இந்த பிரபஞ்சமே!...
---------------------------------------

இந்த ஒரு மாதம் எப்படி நன்மையின்பக்கமிருந்தோமோ. பேச்சிலும் நடத்தையிலும்.சொல்லிலும் .செயலிலும் இருந்தோமோ அதன்படி எந்நாளும் இருக்கவும் அதன்படியே நடக்கவும் முயற்ச்சிபோமாக இறைவனும் அதற்க்கு அருள்புரிவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

உலகிலுள்ள அனைத்து நல் நெஞ்சங்களுக்கும் எனது மனம் நிறைந்த 
ரம்ஜான் பெருநாள் வாழ்த்துகள்.

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

9 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அக்காள்... வரண்டு போன கவிஞர்கள் எல்லாம் உங்கள் கவிதையைப் பார்த்துதான் ஆறுதல் அடைவார்கள்.
    அந்தக் கவிதையே வரண்டு போயி விட்டால்...? அப்போ கவிஞர்களின் கதி ? (தங்கப் பதக்கம் வசனம்)

    உங்களின் ஆதங்கத்தை மிகத் துல்லியமாக செதுக்கியுள்ளீர்கள் எல்லோருக்கும் பெருநாள் நல் வாழ்த்துக்கள் அந்நியன் ஐஸ் வைக்கிறான் என்று நினைக்காதிர்கள் இன்னும் சில சேதிகளுடன் வருவேன்.

    பதிலளிநீக்கு
  3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்க்ள்.......

    பதிலளிநீக்கு
  4. புனித ரமலான் வாழ்த்துக்கள்...!



    தங்களுக்கும் ...

    தாங்கள் குடும்பத்தாருக்கும்

    என் இனிய ரமலான் வாழ்த்துக்கள்......!

    இந்நன்னாளில் அனைத்து நலமும் வளமும் பெற்றிட

    இனிய வாழ்த்துக்கள்...!



    அன்புடன்...!

    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  5. புனித ரமலான் வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  6. Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

    பதிலளிநீக்கு
  7. ’நீரோடை’யில்
    400வது பதிவு இது...

    இதயங்கனிந்த வாழ்த்துக்கள்...
    கவிஞர் மலிக்காவுக்கு...

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது