நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வசியமருந்து!

 
வக வகயா கறியும் வச்சி
வாசமான குழம்பு வச்சி
வீட்டுகாரர வளச்சிபோட்டு ராசாத்தி
உன்
வலையல் கைத்திறன காட்டிவிடு ராசாத்தி!

அவிச்ச முட்டை பொரிச்சி வச்சி
அவியல்கறி கூட வச்சி
அக்கரையா கொடுத்துவிட்டு ராசாத்தி
 வீட்டு
அதிகாரத்தில் பங்குபோடு ராசாத்தி!

நெய்மீனு குழம்புவச்சி
நெத்திலிமீனு வறுத்துவச்சி
நித்தம் நித்தம் ஆக்கிப்போட்டு ராசாத்தி
நீ
நெனச்ச காரியத்த முடிச்சிவிடு ராசாத்தி!

பச்ச காய்கறியில் கூட்டு வச்சி
பக்குவமா சமச்சி வச்சி
பண்போடு பரிமாறிவிட்டு ராசாத்தி-
 நல்ல
பேர வாங்கி குவிச்சுவிடு ராசாத்தி!

வெள் ளாட்டுக்கறி எலும்பு வாங்கி
வெட வெடன்னு சூப்பு வச்சி
வாய்க்கு ருசியா கொடுத்துவிட்டு ராசாத்தி
வீட்டுச்சாவி கையில் கேளு ராசாத்தி!

புது புதுசா பல காரம் செஞ்சி
புதுவிதமா அலங்கரிச்சி
பிள்ளைகளுக்கும் கொடுத்துவிட்டு ராசாத்தி
பாசத்திலும் பங்குபோடு ராசாத்தி!!

அஞ்சுவக காயெடுத்து
அலுக்காம வேலபாத்து
அருமையாக சமச்சிவைய்யி ராசாத்தி
அது ஆரோக்கியம் தந்திடுமே ராசாத்தி!

பசியோடு புசிக்கும்போது
பாவக்காயும் ருசிக்குமடி
பக்குவமா சமைச்சிபோட்டா
பலவயிறு குளிருமடி ராசாத்தி
பல பாராட்டையும் வாங்கிக்கலாம் ராசாத்தி! 

வசியம் செய்ய பலவகையில்
வகைவகையா இருக்கையிலே
வசிய மருந்து எதுக்கடி ராசாத்தி!
உன்குடும்பதை  உ[ன்கையால்]ள்ளத்தால்]
வலைச்சிபோடடி ராசாத்தி! 


டிஸ்கி:// ஏண்டிமா மல்லி இதெல்லாம் நடக்குற காரியமாங்குறீங்களா? 
அதுக்குத்தேன் புகைப்படத்த மாத்திபோட்டிருக்கோமுல்ல. அச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோஓஓஒ.. 
..

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

13 கருத்துகள்:

 1. ஹா..ஹா..ஹா...

  சூப்பர்... சூப்பர்,... இதெல்லாம் ஆத்துக்காரங்களே செஞ்சு கொடுத்தா ஏன் வசிய மருந்து தேட போறாங்க

  அவ்வ்வ்வ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
 2. என்னா ஒரு சிரிப்பு இந்த போட்டோபார்த்தம் உங்க[ஆத்து] நினைப்பு வந்துட்டதோ ஆமி ஹோ ஹோ

  பதிலளிநீக்கு
 3. பசியோடு புசிக்கும்போது
  பாவக்காயும் ருசிக்குமடி
  பக்குவமா சமைச்சிபோட்டா
  பலவயிறு குளிருமடி ராசாத்தி//

  அடிச்சி தூள்கிளப்புறீங்கக்கா.. சூஊஊஊஊஊஉப்ப்ர் அவிதை கலக்கல்

  பதிலளிநீக்கு
 4. ஹைதர் அலி கூறியது...

  ஆமா வசியம் என்றால் என்ன?//

  இப்படியா சகோ என்னை வம்பில் மாட்டிவிடுவீங்க!..

  வசியம் வசியமுன்னு சொல்லுவாங்க.
  அதான் தெரியும்


  நம்மாளை நம்ம பக்கம் மட்டுமே முடிச்சிபோட்டு வச்சிக்கிறதுக்குபேருதான் வசியமோ!!!1?

  பதிலளிநீக்கு
 5. அசாருதீன் கூறியது...

  பசியோடு புசிக்கும்போது
  பாவக்காயும் ருசிக்குமடி
  பக்குவமா சமைச்சிபோட்டா
  பலவயிறு குளிருமடி ராசாத்தி//

  அடிச்சி தூள்கிளப்புறீங்கக்கா.. சூஊஊஊஊஊஉப்ப்ர் அவிதை கலக்கல்//

  அசாருதீன் கவிதை கலக்கலா? இல்லை அவி[தை]யல் கலக்கலா?

  மிக்க நன்றிம்மா கருத்துகளுக்கு..

  பதிலளிநீக்கு
 6. ஆகா. ராசாத்திக்கு எல்லாஞ் சொல்லி கடைசி பாராவில கலக்கலா பதிலும் சொல்லியிருக்கீங்க அக்கா.... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 7. பசியோடு புசித்திருந்தால்
  பாகற்காயும் இனித்திடும்...
  இது இதுதான் இனிய இல்லற வாழ்விற்கான தத்துவம்...

  அழகா சொல்லி இருக்கீங்க சகோதரி...

  பதிலளிநீக்கு
 8. சுவையான உணவு கொடுத்து மாப்பிள்ளை தூங்கிவிடுவார் .வசீகர மருந்து வீண் .வயோகராவும் தேவை இல்லை, இனிய கிண்டலான ஊடல் போதும் உணவைவிட உள்ளம் கலத்தல் நன்மைதரும், உணவு ஊட்டம் தரும். கவிதைப் படித்து ஆகா அருமை உணவு கிடைத்து விட்டது .பசியும் தீர்ந்துவிட்டது கவிதையின் நயன் கண்டு மகிழ்ந்தேன்

  பதிலளிநீக்கு
 9. வசியமருந்தே தேவையில்லை உன் வார்தைகளே போதேமல்லிகா..

  பிரமாதம் அசத்துற எல்லாம் கற்ற கல்லியே ஒன்று அறியவில்லை எனகென்கிறாய்..

  உனக்கென் பாராட்டுப்பத்திரம்
  என் அன்பான பாராட்டுகளில்..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது