நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மன[ழை]க்காலம்!


மழைக்கால நேரத்தில்
மதிமயக்கும் தாகத்தில்
இதமான தருணத்தில்
இன்னிசை பாடிவரும்
இளஞ்சூடான மழைத்துளிக்குள்
குடையில்லாமல் நனைகிறேன்
குதூகளித்து மகிழ்கிறேன்
மகிழும் வேளையில்
மனதுக்குள்ளும் கேட்கிறது
மழை சத்தமும்
மன்னவன் கொடுத்த முத்தமும்!

-----------------------------------------------------------------
மழையே மழையே வானின் மழையே!
மயில் தேவையுமறியும் மேகமழையே!

உன் வருகையில்லா இடங்களுமுண்டோ!
உன் துளிகள் தொடதா தளிர்களுமுண்டோ!
உன் வரவால் வாசம் மண்மேல் வீசும்!
உன் சாரல் துளியில் தேகமும் கூசும்!
நீ அளவாய் வந்தால் இந்த உலகம் செழிக்கும்!
உன்வரவு அதிகப்படியானால் உயிர்கள் தவிக்கும்!

வயலிடுக்கில் நுழைந்து பயிர் செழிக்க வைப்பாய்!
வறட்ச்சி கண்ட நிலத்தில் வழிந்தோடி களிப்பாய்!
வானிலிறங்கிவந்து வசந்தம் தந்து போவாய்!
வரவதிகமாகி வதை செய்து வதைப்பாய்!
வரவு தரமாலிருந்தும் பஞ்சம் தந்து பார்ப்பாய்!
இயற்கைகளை உன்னால் உயிர்வாழச்செய்வாய்!
இறைகட்டளையை நீயும் மீறிடாது நடப்பாய்!
காதல் மழையாய் மனங்குளிர செய்வாய்!
செல்ல மழையாய் சிணுங்கி ரசிக்க வைப்பாய்!
குழந்தை மழையாய் கொஞ்சி சிரிக்க வைப்பாய்!

உன்னைப் பாடாத கவிஞருமுண்டோ
உன்னைப் தேடாத மனங்களுமுண்டோ!
உன்னைப் தீண்டாத தேகமுமுண்டோ!
உன் வரவால் இந்த பூமியும் பூக்கும்
உன் செலவால் இந்த பூமியில் அழியும்!
செழிப்பைத் தந்து வன[த்தை]ப்பை காப்பாய்
செல்லமாகவே தூவி மனிதத்துயரம் துடைப்பாய்..
-------------------------------------------------------------------------------------------


டிஸ்கி//  ஏண்டிமல்லி!  ரெண்டுகவிதை எழுதியும் இப்படியா பண்ணுவே இப்படியா கவனமில்லாது இருப்பே! பே பே!

//போட்டி நெறிமுறைப்படி (25ஆம் தேதிக்குள்) அல்லாமல் காலம் தாழ்ந்து அன்புடன் மலிக்கா அவர்களும் ஹிஷாலீ அவர்களும் சிறப்பான (முதல் மூன்று இடத்துக்குரிய) படைப்பைப் படைத்துள்ளார்கள். நெறிமுறையை அவர்கள் ஏற்றுக்கொள்ளாததால் முதல் மூன்று இடத்துக்கு அவர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுக்க வில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.தமிழ்த் தோட்டம்//

எல்லாம் அவன் செயல்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

11 கருத்துகள்:

 1. ஒரிஜினல் மென்பொருள்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் ----- http://puthuputhuthagavalgal.blogspot.in/2012/06/download-original-softwares.html

  பதிலளிநீக்கு
 2. ஒரிஜினல் மென்பொருள்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் ----- http://puthuputhuthagavalgal.blogspot.in/2012/06/download-original-softwares.html

  பதிலளிநீக்கு
 3. இளஞ்சூடான மழைத்துளிக்குள்
  குடையில்லாமல் நனைகிறேன்
  குதூகளித்து மகிழ்கிறேன்
  மகிழும் வேளையில்!//

  ippadiyellem kavi ezuthunaal engkalukkum aasaivaraatha mazaiyil nanaiya..

  koduthirukkum muthal parisai vidduddaangka..

  irunthaalum ungka kavithai enrum inimaithaan malikkaa..

  பதிலளிநீக்கு
 4. இப்பிடியா...!

  போட்டிக்கு லேட்டா போவாங்க...!

  பதிலளிநீக்கு
 5. மழையைக் காணவில்லை ஆனால் நீரோடையில் கன மழையைக் காண மகிழ்வின் வெள்ளம் அலை புரண்டோடுகின்றது
  please visit
  "Let it Rain ..More&More....& More."
  http://seasonsalivideo.blogspot.in/2012/07/let-it-rain-more-more.html

  பதிலளிநீக்கு
 6. மனதுக்குள்ளும் கேட்கிறது
  மழை சத்தமும்
  மன்னவன் கொடுத்த முத்தமும்//

  !எங்கள் மனத்துள்ளும்...
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. மழையெனப் பொழிந்த கவிதைகள் இரண்டும் நன்றாக உள்ளன.

  டிஸ்கி செய்தியில் நல்ல நகைச்சுவை.

  எல்லாம் அவன் செயல்.

  இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

  அன்புடன்
  vgk

  பதிலளிநீக்கு
 8. உன்னைப் பாடாத கவிஞருமுண்டோ
  உன்னைப் தேடாத மனங்களுமுண்டோ!
  உன்னைப் தீண்டாத தேகமுமுண்டோ!//

  wowwwwwwwwwwwwwww. nalla ezuthuriingkakkaa.

  engkalukkum konjsam solliththaangkaleen

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது