நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

குற்றவாளியா? நிரபராதியா?




ஆணில் பலர் ஆதிக்கவாதி!
அவன் பேச்சை மட்டுமே!
கேட்டாகவேண்டுமென
கட்டளையிடும் சர்வதிகாரி!

தனக்காக எதையும்
வளைத்து ஒடிக்கும் தன்னலவாதி!
தேவைப்பட்டால் தயங்காது
பெண்மீது குற்றஞ்சுமத்தி
தப்பிக்கும் சுயநலவாதி!

பெண்ணை தன்கட்டுப்பாட்டுக்குள்
பொத்தி வைப்பதாய் நினைத்துக்கொண்டு
புதைக்காமல் புதைத்து வதைக்கும்
பொல்லாத மனங்கொண்ட
சந்தர்ப்பவாதி!

தன் நடத்தை பிசகலாம்
தான் வழி தவறலாம்
அதையெல்லாம் பொருத்துக்கொண்டு
தன்னோடு வாழவேண்டுமென நினைக்கும்
அதிபுத்திசாலி!

தீயைபோல் தீண்டி சீண்டும்
தீய சொற்களை கொண்டு
கொண்டவளை கொடுமைப்படுத்தும்
தீயகுணங்களைக்கொண்ட
தீவிரவாதி!

தனக்குமட்டுமே அனைத்தும் அறியும்
தன்னை நம்பிவந்தவள்
மடமையின் கூடாரமென
தன்னையே உயர்த்திக்கொள்ளும்
தற்பெருமைவாதி!

தன்னைவிட பெண்
தாழ்ந்தவளென்றும்- என்றும்
தனக்கே அடிமையென்றும்
தரைக்குறைவாய் நடத்தும்
தரிகெட்டவாதி!

எந்நிலையிலும் எச்சூழலிலும்
தன்னை விட்டுக்கொடுக்காது
தன் மார்தட்டியே வாழும்
நீதியறியா நீதிபதி
குற்றவாளியான நிரபராதி!

அகிலமெங்கும்
பரவி விரவிக் கிடக்கிறதோ
இதுபோன்ற பலவியாதிகள்

இத்தனை 
வியாதிகளையும் தாங்கிய
பயங்கரவாதியா? ஆண்கள்.. 

டிஸ்கி// அண்ணாத்தேக்களா! சகோக்களா! இதெல்லாம் நிஜமா? உங்களுக்கு இப்படியெல்லாம் இருக்கா? பாவம் மக்கா பெண்மக்க நேற்றுமட்டும் மூன்று பெண்களின் நிலைகள் இதுபோல் கேட்டறிந்து மனம் சங்கடத்திலும் சங்கடம். இதெல்லாம் எங்கேபோய் கேட்டிக” எல்லாம் பாஸ்போட் ஆபீஸ் வாசலில் வெட்டியா 6 -7  மணிநேரம் இருக்கும்படியாச்சி அதில் பல பல சுவாரஸ்சியங்கள் சொல்லிடங்காச் சோகங்கள். என நேரம்போனதே தெரியலை.. ஹூம் இப்படியெல்லாம்கூட இருப்பாங்களா?  எல்லாம் உங்க வர்கம் பண்ணுறதுதானே! அதேன் எழுதிட்டேன்.சரி சரி அதுக்காக என்னை வெஞ்சிடாதிங்க!




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

21 கருத்துகள்:

  1. அன்பு மலிக்கா, குற்றவாளியா/ நிரபராதியா? நிச்சயம் பெண்ணை, மனதால், உடலால் வதைக்கும் ஒவ்வொரும் குற்றவாளியே.. நீங்கள் தங்களின் கவிதையில் நிதரிசனத்தை சந்திக்க வைத்திருக்கிறீர்கள். ஒவ்வொரு வீட்டிலும், வெளியிலும் நடப்பது இதுதான்.நன்றி சகோதரி.
    வாழ்த்துகள்.
    என்றும் அன்புடன்,
    மோகனா

    பதிலளிநீக்கு
  2. யக்காவ் ...!! திட்டலாமுன்னு(ஙே ) வந்தா டிஸ்கி போட்டு தப்பிச்சிட்டீங்களே ஹா..ஹா... :-)))

    பதிலளிநீக்கு
  3. சுஜி என்ற சுஜாதா16 மே, 2012 அன்று 1:35 PM

    இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. சுஜி என்ற சுஜாதா16 மே, 2012 அன்று 1:37 PM

    குற்றவாளியே! ஏன் தெரியுமா? எத்தனை வதைகளை வாங்கியுள்ளோம் சொல்லிலும் செயலிலும். அன்னை பட்ட வேதனைகளை கண்டு மணமுடிக்க விருப்பமில்லாதே போனது அக்கா.. ஆண் குற்றவளிகளே! அவர்களை அடக்க யாருக்கா உண்டு

    பதிலளிநீக்கு
  5. //நீதியறியா நீதிபதி
    குற்றவாளியான நிரபராதி//

    ஒரு சந்தர்ப்பத்திலாவது ஆண் இப்படி நட்ந்துகொள்ளாமல் இல்லைன்னுதான் சொல்லணும்.

    பதிலளிநீக்கு
  6. பெண்ணை
    குற்றப்படுத்தி
    இழிவு படுத்தியும்
    அடுமைப்படுத்தியும் தன் ஆளுமையை காண்பிக்கும்
    ஆண்கள் குற்றவாளிதான்

    நிறைய குடும்பங்களில் இது நடக்குது
    இது மாற வேண்டும்

    மனைவியை
    மதிப்பவன் நல்ல தலைவன்

    சகோவின் நியமான கேள்வி

    நல்ல கவிதை சகோ

    பதிலளிநீக்கு
  7. சரியாகத்தான் சொல்லிப் போகிறீர்கள்
    இதில் நீங்கள் சங்கடப் பட ஏதுமில்லை
    எங்கள் மனச் சாட்சிதான் கொஞ்சம் உறுத்துகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. மலிக்கா.உன் கவிதைகள் எல்லாமே மாஷா அல்லா ரொம்ப நல்லா இருக்கு .,,ஆண்கள் அப்படி தான் இருகிரர்ஹல். இதே போல நிறைய கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. குற்றவாளியா நிரபராதியா... பெண்கள் எல்லாம் நிரபராதிகள் என்றால் ஆண்கள் குற்றவாளிகளே...

    மற்றபடி கவிதை மிக அருமை...

    நல்லாயிருக்கு... பட்டென சொல்லிவிட்டீர்கள் என்று சொல்லிச் செல்ல வேண்டும் என்று தோன்றவில்லை....

    இதுபோல் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் இருபாலரிலும்...

    இவர்கள் எல்லாம் மாறினால் இந்தக் கேள்வி்க்கே இடமிலலாமல் போய்விடும்.

    பதிலளிநீக்கு
  10. ஆண் எப்போது குற்றவாளி...

    மகனாய் இருந்து தாய்க்கு கொடுக்கும்

    கடமையிலிருந்து தவறும்போது குற்றவாளி

    கணவனாய் இருந்து மனைவிக்கு கொடுக்க

    வேன்டிய உரிமைகளை கொடுக்க தவறும் ஆண் குற்றவாளி

    தந்தையாய் இருந்து வழி காட்டா தலைவன் குற்றவாளி

    சும்மா சும்மா ஆண் ஆதிக்கத்தை சாடல் கூடாதது

    பெண் உரிமை மென்மையான போக்கை கொண்டது

    மேலை நாடுகளை பெண் உரிமை பெண் உரிமை என

    கூறி பெண்ணை சந்தைக்கு கொண்டு வந்து விட்டார்கள்

    அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்கள் அன்றாடம்

    சந்திக்கும் பார்வையால் படும் துன்பம் கொஞ்சம் நஞ்சமல்ல

    பெண் போற்றப்பட வேண்டிய பாதுகாக்க பட வேண்டிய

    மென்மையான மலர் போன்றவள் கடும் வெயிலில் நின்று

    கொண்டு என்னை வாட விடலாமா என்றால் எப்படி

    வேலைக்கு செல்லும் ஆண் மனைவியை வேலைக்கு

    செல்லவைத்து பின்பு வீட்டு வேலைகளையும் பார்க்க சொல்லி

    பின்பு தனக்கும் வேண்டும் என்கிற பொது பெண்களுக்கு

    ஆண் என்றாலே வெறுப்பு தான் வரும் ..,பெண்ணை

    பெண்ணே மதிக்கணும் ..பெண்ணாய் நடத்தனும்

    பதிலளிநீக்கு
  11. ஆணும் பெண்ணு சமம் என்பதை ..,

    சரியாக புந்து கொள்ளாதவரை கஷ்டம் தான்

    ஆன்மாக்கள் ஒன்று தான் அவர்களை இறை வழிபாடுகளை

    ஒரே முறைதான் கடை பிடிக்க வேண்டும் செயல் பட சொல்லும் .இறைவன்

    நற்கூலியை இரு பலருக்கும் இறைவன் ஒன்றாக தான் வழங்குவான் ...,

    நடை முறை வாழ்கையில் ஆணுக்கு உண்டான கடமை

    பெண்ணுக்கு உண்டான கடமை அதற்காக இளம் வயதிலே

    ஆயத்தமாக்க வேண்டியது .தாயின் கடமை ..

    பெண்ணும் ஆணும் சமம் என்று உடை விசயத்தில் கூறுவது

    தொழில் விசயத்தில் கூறுவது ..,மடமை அதே போன்று எல்லாத்திலும்

    பெண் சுதந்திரம் என கூறி கூறி சில நாடுகளில் முப்பது வயதுகளில்

    கட்டுப்பாடற்ற செக்ஸ் வைத்தமையால் வயோதிக தன்மை அடைந்த

    மூதாட்டியை போல் காண படுவதுடன் ..பலராலும் ஒதுக்கப்பட்டு

    பல கஷ்டங்களை பெறுவதை கண் கூடாய் காண முடிகிறது ..

    உலக வாழ்வில் பாதுகாக்க பட போற்ற பட வேண்டிய பெண்மை

    சமம் சுதந்திரம் என்ற பெயரால் வீதியில் வீசப்பட்ட நாறிப்போன பண்டமாக

    காட்சி அழிப்பது வேதனை அளிப்பதாக உள்ளது .

    .பெண்ணை பூ என்று கவிஞர்கள் வர்ணித்து ஏன்..

    பாது காப்பாய் இருப்பது என்பதை சுட்டிக்காட்டவே

    பெண் ஆணுக்கு நிகர் என்று சொல்வது சோம்பல் குணம் கொண்ட ஆண்

    பெண்ணுக்கு சுதந்திரம் வேண்டுமென கூறும் ஆண் தன்னை விடுவித்து

    கொண்டு பெண்ணிடம் கையேந்தும் நிலை கொண்டவன் என்பேன் ..

    மகளை .மனைவியை ..எல்லாவற்றிகும் மேலாக தாயை போற்ற தெரித்தவன்

    கலாசார ரீதியாக என்றும்போல் வாழ வகை செய் வதே சால சிறந்தது

    பதிலளிநீக்கு
  12. எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகோணம் மாமி..! ச்சே...! சாமி...!

    இதுல எதோ உள்குத்து இருக்கு...!

    நானும் கொஞ்ச நாளா நோட் பண்ணிட்டுதான் வாரேன்...!

    இதுல... எதோ உள்குத்து இருக்கு...!

    இந்த கவிதைய பத்தி... முழுசா நிதானமா படிச்சிட்டு அப்புறம் என்கருத்த சொல்லுதே...! என்னாங்கோ...!

    பதிலளிநீக்கு
  13. குருமூர்த்தி.17 மே, 2012 அன்று 8:51 PM

    இதுல எதோ உள்குத்து இருக்கு...!//
    nmaithaan saami eethoo irukku aan varkathinmeel eenintha koopam. naangka rompa paavamungkoo..

    aanaalum unmaiya solliddiingka enna seyvathu oththukkonduthaan aanaknum. irunthaalum aan rompa paavam..

    பதிலளிநீக்கு
  14. சரி...!

    என்னோட கேள்விக்கு பதில்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  15. சுஜி என்ற சுஜாதா20 மே, 2012 அன்று 7:48 AM

    காஞ்சி முரளி சொன்னது…

    சரி...!

    என்னோட கேள்விக்கு பதில்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    //

    பொருங்க அக்கா பிஸியா இருப்பாங்க வந்ததும் பதிலென்ன அடியே கொடுப்பாங்க.. ஹோ ஹோ

    பதிலளிநீக்கு
  16. எனக்கு ஒரே சந்தேகம்... நான் எழுதி இருக்கும் இந்த வரிகளைப் [http://sidharalkal.blogspot.in/2012/04/blog-post_26.html] படித்து விட்டு முடிவுக்கு வருவோமா?

    பதிலளிநீக்கு
  17. நீங்கள் சொன்னதும் உண்மை. ஒப்புக் கொள்கிறேன். நன்றி :)

    பதிலளிநீக்கு
  18. அன்பார்ந்த நெஞ்சங்கள் அனைத்துக்கும் எனது பாசமிகுந்த நன்றிகள். என்னிலிருந்து எழும் பலகருத்துகள் பல மனவுணர்களை சார்ந்தது. அதனையும் மதித்து அதற்கான கருத்துரைகளையும் வழங்கி என்னை மென்மேலும் எழுதத்தூண்டும் தாங்கள் அனைவருக்கும் எந்நாளும் எனது நன்றிகள் இருந்துகொண்டே இருக்கும் அன்போடு..

    பதிலளிநீக்கு
  19. காஞ்சி முரளி சொன்னது…

    எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகோணம் மாமி..! ச்சே...! சாமி...!

    இதுல எதோ உள்குத்து இருக்கு...!

    நானும் கொஞ்ச நாளா நோட் பண்ணிட்டுதான் வாரேன்...!

    இதுல... எதோ உள்குத்து இருக்கு...!

    இந்த கவிதைய பத்தி... முழுசா நிதானமா படிச்சிட்டு அப்புறம் என்கருத்த சொல்லுதே...! என்னாங்கோ..//

    உள்குத்து வெளிக்குத்து எல்லாம் இருப்பது உண்மையே! சில விசயங்கள் சொல்லலாம் சில விசயஙகளை சொல்லாமல்தான் சொல்லோனும். எப்புடி அதில் இதுவும் ஒன்னு.. புரிஞ்சிக்கின்னா சரிதான்..

    அதுசரி இன்னமுமா நிதானமா படிக்கிறேள்..படிங்க படிங்க பொருமையா படிச்சிட்டு அப்பால கருத்தபோடுங்க..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது