நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாடு

  3. நாள் ஹாஸ்பிட்டல் வாசம் முடிந்து இன்று சற்று தேர்ச்சிபெற்றதும் இதோ உங்கள் முன் வந்து மாநாட்டிற்க்கு அழைப்பு விடுக்கிறேன்..

முத்துப்பேட்டையில் [அட நம்ம ஊர்லதானுங்க] வரும் 12-5-2012 சனிக்கிழமை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை முத்துப்பேட்டை ரஹ்மத் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாடு நடைபெற இருக்கிறது. அதில் சிறப்புரையாற்ற நாடறிந்த பெண் கல்வியாளர்கள். சிறந்த சொற்பொழிவாளர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்கள் . அதுசரி அதில் உனக்கென்ன வேலை என்கிறீகளா? அதுவா பெரிய பெரிய அறிவாளிங்க பேசப்போகிற மாநாட்டை இந்த பச்சப்புள்ளதானுங்க தொகுத்து வழங்கப்போகிறது. உள்ளுக்குள்  உதறல் இருந்தாலும் இறைவன்மேல் பாரத்தைபோட்டுவிட்டு துணிந்து சரியென்று சொல்லிட்டேன்.எல்லாம் நல்லபடியாக நடக்க எல்லாம் வல்ல இறைவன் துணை செய்வான் என்ற நம்பிக்கையோடு..

 உங்கள் அனைவரின் அன்போடு நீரோடையில் வலம் வருகின்ற நான். தற்போது இப்படியும் வலம் வரத்தொடங்கியிருக்கிறேன். இதற்க்கு தாங்கள் அனைவரின் பிராத்தனைகளும் வேண்டும்.  அதனோடு தாங்கள் அனைவரையும் மிக மிக அன்போடு இந்த மாநாட்டுக்கு அழைக்கிறேன்.

அன்று நடைபெறும் இம்மாநாட்டினை  முத்துப்பேட்டை ஓ ஆர் ஜியில்  இணையதளத்திலும் நேரடி ஒளிப்பரப்பை காணலாம்..

அனைவரின் வருகையையும்  எதிர்பார்த்திருக்கும்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

15 கருத்துகள்:

  1. மாநாடு சிறக்கவும் தாங்கள் அழகுற தொகுத்து வழங்கிடவும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. //வளம் வருகின்ற//
    வலம் வருகின்ற -என்று மாற்றலாமே?

    பதிலளிநீக்கு
  3. வாங்க நிஜாமண்ணா. வெகு நாளைக்கப்புறம் இந்தபக்கம். அண்ணாவின் முதல் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் மலிக்கா
    கலக்குங்க கலக்குங்க.
    அழகான முறையில் எந்த உதறலும் இல்லாமல் தொகுத்திட என் துஆக்கள்

    பதிலளிநீக்கு
  5. விழா சிறக்க என் வாழ்த்துக்கள் தோழி ..

    பதிலளிநீக்கு
  6. எங்க தளத்திற்கும் நீங்க வாங்க,தளத்தில் உறுபினராக ஆகுங்கள் www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15),காமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள் ,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

    பதிலளிநீக்கு
  7. குருமூர்த்தி.11 மே, 2012 அன்று 6:42 AM

    இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. குருமூர்த்தி.11 மே, 2012 அன்று 6:43 AM

    என்ன மேடம் அடுத்த அவதாரமா?. இன்னும் என்னவெல்லாம் இருக்கு உங்ககிட்ட இப்படி அடுக்கிட்டே போறீங்களேப்பா.. பொறாமையா இருக்கு..

    அதுசரி தொகுப்பாளினிக்கு எவ்வளவு அமோண்ட். அப்படியே இங்கே கொஞ்சம் அனுப்பிடுங்கப்பா ஜாமாக்கிறோம் மலிக்கா பேரைசொல்லி..

    மனமார்ந்த வாழ்த்துகள்..அசத்திட்டு வந்து பதிவ போடுங்க.

    பதிலளிநீக்கு
  9. சலாம் சகோ மலிக்கா,

    விழா சிறப்புடன் நடக்க வாழ்த்துக்கள்... நீங்கள் நன்றாக தொகுத்து வழங்குவீர்கள் , இன்ஷா அல்லாஹ்... அதற்க்கான ஆற்றல் உங்களிடம் உள்ளது...

    பதிலளிநீக்கு
  10. விழா சிறக்க வாழ்த்துக்கள் அக்கா...
    உடல் நிலை எப்படியிருக்கிறது?

    பதிலளிநீக்கு
  11. சகோதரி மல்லிகா அவர்கள் ..,

    பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள

    செல்வதை தனது வலை தலத்தில் பகிர்ந்து

    கொண்டது நல்ல குணம் .., பள்ளிக்கு செல்லும்

    பிள்ளை தாயிடம் விடைபெறுவது போல

    வாசக சகாக்களிடம் தாங்கள் பகிர்ந்து கொண்ட விதம்

    அபாரம் ..,நான் அன்பு பாசத்திற்கு சிறு வயது முதல்

    ஏங்கியவன் சமூகம் பணம் பின்னணியில் பாசம் காட்டும்

    முகச்துதியுடன் பாசாங்கு காட்டும் ..ஆனால்

    இலக்கிய வட்டத்தில் உண்மை யான பாசம் மட்டுமே

    உலவும் அன்பு சகோதரி தொகுப்பளியாக துவங்கும்

    புது முயற்சி வெற்றியடையட்டும் நல்ல கருத்துக்களை

    முன் வைத்து தொகுத்து வழங்கி வெற்றி வாகை சூடி வாருங்கள்

    பதிலளிநீக்கு
  12. விழிப்புணர்வு அதுவும் பெண்கள் சமூக விழிப்புணர்வுக்கு விழிப்புணவை ஏற்ப்படுத்த பேசுவதற்க்கும். நீங்கள் தொகுப்பதற்க்கும் பணம் வாங்கிகொண்டுதானே செயலாற்றியிருப்பீர்கள்.

    பணம் இருப்பின் விழிப்புணர்வுகள் தானாக வரும்
    பணம் படைத்தவன் எந்நேரமும் விழிப்புணவோடும் இருப்பான் விழி மூடாமல்கூட இருப்பான்..

    பணமிருந்தால் விழிப்புணர்வு மாநாடென்ன உலக மாநாடே போடலாம்..
    தொகுத்து வழங்குனதற்கு எவ்ளோ கொடுத்தாங்க பணம் அதை வைத்துக்கொண்டு விழிப்புணர்வோடு இருங்க இல்லாவிட்டால் அதையும் ஆட்டய போடும் உலகமிது..

    பதிலளிநீக்கு
  13. தொகுத்து வழங்க பணம் கொடுப்பதாகவே ,

    வைத்துகொள்ளுங்கள் அதில் என்ன தவறு கண்டீர்கள்

    மனம் இருந்தால் வாழ்த்துங்கள் ..என்பதே என் கருத்து

    பதிலளிநீக்கு
  14. அசாருதீன்14 மே, 2012 அன்று 5:52 PM

    முதலில் உழைப்ப பார்ப்பாங்க அப்புறந்தான் அங்க பணம் கிணமெல்லாம் உண்மைதானே மலிக்காக்கா .. சொல்றவங்க ஆரயிரம் ரெண்டாயிரம் சொல்லுவாங்க விட்டுத்தள்ளுங்க..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது