நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இந்தக் காதல் எது வரை?




காதலின் கரையைத்தேடி
காலங் காலமாய் ஓடும்
காதலர்களின் வரிசையில்
காதலை சுமந்தபடி
கடைக் கோடியில்  நான்

நினைக்க நினைக்க சுகம்
நினைவைத் தீண்ட தீண்ட சுவை
நீர்குமிழியாய் எழுந்தடங்கும்
நீர்மூழ்கியாய் உள்ளடங்கும்
நிசர்சனத்தின் விந்தை!

உரசும் உணர்வுகளில்
உயிருக்கு உரம் சேர்க்கும்
கடக்கும் சமயங்களில்
கடைகண் பார்வைகளில்
கனவுகளுக்கு விருந்தளிக்கும் மாயை!

இணைந்திருக்கும் தருணைத்தைவிட
இல்லாதிருக்கும் தருணமெல்லாம்
இனம் புரியாத இம்சைகளை
இதயத்தில் ஏற்றிவைத்து
இருதலைக்கொள்ளியாக்கும் அவஸ்தை!

காதல் காதலென்று
கனல்கொண்ட நெருப்பாக
அலைகொண்ட கடலாக
வாசம்கொண்ட மலராக
நீலம் கொண்ட வானமாக
நித்தம் வீசும் காற்றாக

நெடுங்காலம் காதல்கொள்ள
நெஞ்சம் முழுவதும் ஏங்கும்
ஏட்டில் நிலைத்த எழுத்தைபோல்
எந்நேரமும் 
நினைவுகளை சுமந்தபடியே
நித்தமும் வாழும்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

8 கருத்துகள்:

  1. நாதான்...!

    1stட்டா .....!

    பாட்டியாக போரவங்க எழுதுன கவிதை சூப்பர்....!

    பதிலளிநீக்கு
  2. "காதலர் தினம்" நேற்றுதான் நினைக்கிறேன்...!

    நேத்து தூங்கிட்டு

    இன்னைக்கு "காதல் கவிதை"யா???????

    ****

    பீச்சுல...! பார்க்குல....! மறைவிடங்களில்...!

    உதடோடு உதடு
    உரசும் காதல்...!
    உண்மைக் காதல் அல்ல...!

    தன் கடமைகளை முடித்து
    சாய்வு நாற்காலில்
    சாய்ந்திருக்கும் பருவத்தில்
    மனச் சலனமும்...
    உடல் சலனமும் ஏதுமின்றி...!
    யாரிடமும் யாரும் எதிர்பார்த்தல் ஏதுமின்றி...!
    நிர்மூலமான மனதுடன்...! சாந்தியுடன்...!
    ஒருவர்மீது ஒருவரின் தலைவைத்து சாய்ந்துகொண்டிருப்பதுதான்
    உண்மைக்காதல்...!
    உயிரோட்டமான காதல்...!
    தெய்வீகக் காதல்...!

    இருந்தாலும்...
    தங்கள் இக்கவிதையில்
    ///இணைந்திருக்கும் தருணைத்தைவிட
    இல்லாதிருக்கும் தருணமெல்லாம்
    இனம் புரியாத இம்சைகளை
    இதயத்தில் ஏற்றிவைத்து
    இருதலைக்கொள்ளியாக்கும் அவஸ்தை!///

    அருமையான வரிகள்...!
    வலிமையான
    வலி மிகுந்த வரிகள்...!

    பதிலளிநீக்கு
  3. கடை கன்னில் வீழ்வது காதலல்ல!-இடை மறித்து பல்லிப்பது காதலல்ல!-சொல்லாமல் சொல்வதும் காதலல்ல!சொல்லி தெரிவதும் காதலல்ல!-குறுஞ்செய்தியும் காதலல்ல-குறும்படமும் காதலல்ல!- வண்டு பூவை மொய்ப்பது காதல்!-தென்றல் ம்லரை பரிசிப்பது காதல்!- ஆன்மைக்கு பென்மை வசபடுவது காதல்!-உன்மையில் மென்மையானது காதல்!- உனர்ந்தால் உனர்ச்சி அடைவது காதல்!- தளர்ந்தால் மனசு அள்ளல் படுவது காதல்!- காதலுக்கு கன்னில்லை என்பது பொய்!- காதலுக்கு கன்னுண்டு!- கன்னுள்ல காதல் குருடாவதில்லை!-சிலை வடிவில் காதல்!- சித்திரமாய் காதல்!-விலையில்லா காதல்!- விசித்திரமானது காதல்! கன்னில் தூசு வீழுந்தால் ஊதிவிடுவது காதல்-தான் உன்ன ஊட்டிவிடுவது காதல்!- சினம் கொள்ளாதது காதல்!-பனம் படைக்காதது காதல்!-மனம் மனமாவது காதல்!-தினம் உறங்காதது காதல்!- தடை பட்டாலும், விடைபெற்றாலும், வீழ்ந்திடாமல் நடை போடுவது காதல்- இன்னும் வேன்றுமா?

    பதிலளிநீக்கு
  4. என்ன ஒரு அருமையான காதல் மிக அழகான வர்ணனை. சூப்பர் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. காதலிலும் ஒரு கண்ணியம் அது மலிக்காகிட்டேயிருக்கு சூப்பர்டா கலக்குறே போ.. என்ன மிஸ் எப்படிபோகுது ஸ்கூல் லைஃப்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது