பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே
இருக்கும் இடைவெளிக்குள்
வாழ்க்கையென்னும் மர்மமுடிச்சிகளில் சிக்கி
அவிழ்க்கவும் தெரியாமல்
அப்படியே விடவும் முடியாமல்
தினம் தினம் நடக்கும்
போராட்டங்கள்
திணறுவது சகிக்காத சில
திண்டாட்டங்கள்
சதைபோர்த்திய எலும்புப் பிண்டங்கள்
சர்வ சதா எதன் பின்னாலயோ நகர்ந்தபடி
கூச்சலும் குழப்பமும், கோபமும் மோகமுமென
மூழ்கி பாழ்படுவதே முப்பாட்டன் தொட்டு
தலைமுறை தோஷங்களாய் தானியங்கியபடி
தலைகால் புரியாத தவிப்புகள் நிறைந்தபடி
இடைப்பட்ட வாழ்க்கைக்குள்
இன்பங்கள் சூழ்ந்திருந்தபோதும்
இன்னல்களே அதிகம்!
இருந்தாலும் இல்லையென்றாலும்
இதில் ஏக்கங்களே நிறையும்!
இது ஒருவித வினோத
விளையாட்டு அரங்கம்
இதில் விதிகளே
விளையாட்டை அரங்கேற்றும்
மறைபொருள்களின் ரகசியங்கள்
மறைக்கப்பட்டுள்ளதால்
மனிதர்களால் மர்ம முடிச்சிகளின்
முடிச்சவிழ்க்க முடியவில்லை
முடிச்சவிழ்க்க முற்ப்படும்போது
முடிச்சவிழாமலே!
முடிவுபெறமுடியாமலே!
முற்றுப்புள்ளியென்னும் மரணத்தால்
முடிவெழுதப்படுகிறது
இவ்வுல ஆசைக்கும்
இடைவெளியான வாழ்க்கைக்கும்
அட
இப்படியான வாழ்க்கைக்குத்தான்
எவ்வளவு போராட்டங்கள்
எவ்வளவு எதிர்பார்ப்புகள்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நேனே 1stடா ஒஸ்துன்னானண்டி....!
பதிலளிநீக்குஅந்த மீக்கே...!
இதி தெலுகு பாஷா..!
நீக்கு ராலேதா...!
///அட
பதிலளிநீக்குஇப்படியான வாழ்க்கைக்குத்தான்
எவ்வளவு போராட்டங்கள்
எவ்வளவு எதிர்பார்ப்புகள்.////
நல்ல வரிகள் கொண்ட முற்போக்குக் கவிதை...!
நாங்களுமுள்ள...!
கரையைக் கடக்க போராடி...!
துவளாமல்...!
துவண்டுவிடமால்...!
மீண்டும்.... மீண்டும்....!
முயற்சிக்கும்
கடலைபோலே
போராடினால்தான்...!
வெற்றி...! உன்
வாயிலில் காத்திருக்கும்...!
தோல்விகளை
தோற்கடிக்க
போராடினால்தான் வெற்றி...!
நாங்களுமுள்ள...!
பதிலளிநீக்குகரையைக் கடக்க போராடி...!
துவளாமல்...!
துவண்டுவிடமால்...!
மீண்டும்.... மீண்டும்....!
முயற்சிக்கும்
கடலைபோலே
போராடினால்தான்...!
தோல்விகளை
தோற்கடிக்க
போராடினால்தான்...!
உன்
வாசலில்
வெற்றிலப்பாக்கினை
வைத்துக்கொண்டு
காத்திருக்கும்.... வெற்றி...!
உன்சிரத்தில்
வெற்றிமகுடத்தை சூட்டுவதற்காக...!
//அட
பதிலளிநீக்குஇப்படியான வாழ்க்கைக்குத்தான்
எவ்வளவு போராட்டங்கள்
எவ்வளவு எதிர்பார்ப்புகள்.//
இந்த ஞானம் ஏற்படும்போது தான், பலருக்கு முற்றுப்புள்ளியும் கிடைக்கிறது.
Super mika arumaiyaka solliyirukkinhka
பதிலளிநீக்குஇடைப்பட்ட இந்த வாழும் வாழ்க்கையின்
பதிலளிநீக்குபோராட்டம் மிகச் சிறிய இடைவெளி..
இந்த இடைவெளியை நிரப்ப நாம் என்னவெல்லாம்
செய்யவேண்டி இருக்கிறது...
சிந்திக்கச் செய்யும் அழகிய வாழ்வியல் கவிதை சகோதரி.
இது ஒருவித வினோத
பதிலளிநீக்குவிளையாட்டு அரங்கம்
இதில் விதிகளே
விளையாட்டை அரங்கேற்றும்
eppadingka ippadiyellaam ezutha mudiyuthu supper poongkaL mika arumayaaka ezuthuRiingka malikka
enakku poraamaiyaaka irukku. naanum ithupool ezuthuthanum enaRu mikuntha aasaiyaaka irukku
vaazththukaL malikka
தன்னையே தேய்த்து
பதிலளிநீக்குதளர்ந்து முதிர்ந்து, தள்ளாடி தடுமாறி
தன்னையே நிலைப்படுத்த நினையாது
விழுதுகள் மறந்த வேராய்
வேதனைப்படவும் முடியாது
வெளியில் சொல்லவும் இயலாது//
unmaithaan malikka niraiya paarththaassi manasu mika kasdamaaka irukku. namakkkum ithupooonru kaalama vanthuvidumpoothu eppaadi irukkumoonnu,....
அருமை.
பதிலளிநீக்குந்ன்றி.
சிந்திக்க வைக்கும் வரிகள் ! நல்ல கவிதை சகோதரி ! பாராட்டுக்கள் ! நன்றி சகோதரி !
பதிலளிநீக்கு