விதையாகி, மண்ணில் புதைந்து
வளர்ந்து மரமாகி, பூத்துக் குலுங்கி
காய்த்து கனிந்து
காற்றிலும் மழையிலும், காவல் காத்து
விழுதுகளைத் தாங்கிய வேர்கள்
தன்னையே தேய்த்து
தளர்ந்து முதிர்ந்து, தள்ளாடி தடுமாறி
தன்னையே நிலைப்படுத்த நினையாது
விழுதுகள் மறந்த வேராய்
வேதனைப்படவும் முடியாது
வெளியில் சொல்லவும் இயலாது
வெதும்பும் மனங்களாய்
உலவும் உள்ளங்கள்
உலகில் ஏராளம்-இப்படி
முடங்கிய முதுமையின்
நிலைகளோ பரிதாபம்!
நிலைகளோ பரிதாபம்!
முதுமையின் நலம்பேண முடியாத
வேரை மறந்த விழுதுகளுக்கு
அனிச்ச மலராய் -வேர்
வாடுவதெங்கே தெரியப்போகிறது
இரும்பாகிபோன
இதயங்களை ஈன்றெடுத்ததால்
முதியோர் இல்லத்தில்
முடங்கிடக்கிறது வேர்கள்
விழுதுகளாலே வேரறுக்கப்பட்டு,,,
முதியோர் நலம்
இதுவும் ஈகரை கவிதைப்போட்டிக்காக எழுதியதுதான்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .
முதுமையின் நலம்பேண முடியாத
பதிலளிநீக்குவேரை மறந்த விழுதுகளுக்கு
அனிச்ச மலராய் -வேர்
வாடுவதெங்கே தெரியப்போகிறது
\\\இரும்பாகிபோன
பதிலளிநீக்குஇதயங்களை ஈன்றெடுத்ததால்
முதியோர் இல்லத்தில்
முடங்கிடக்கிறது வேர்கள்
விழுதுகளாலே வேரறுக்கப்பட்டு,,,///
Superb lines...!
இரும்பாகிபோன இதயங்களை ஈன்றெடுத்ததால் முதியோர் இல்லத்தில் முடங்கிடக்கிறது வேர்கள்விழுதுகளாலே வேரறுக்கப்பட்டு,,,
பதிலளிநீக்குகவிதை மிகவும் அருமை தோழி
//இரும்பாகிபோன இதயங்களை ஈன்றெடுத்ததால் முதியோர் இல்லத்தில் முடங்கிடக்கிறது வேர்கள்விழுதுகளாலே வேரறுக்கப்பட்டு,,//
பதிலளிநீக்குஉண்மையான வரிகள்
தலைப்பும் கவிதையும் அருமை. (படிக்க சுலபமாய் இல்லை, டிசைன் கலர்)
பதிலளிநீக்குதலைப்பும் கவிதையும் அருமை. (படிக்க சுலபமாய் இல்லை, டிசைன் கலர்)
பதிலளிநீக்குதலைப்பும் கவிதையும் அருமை. (படிக்க சுலபமாய் இல்லை, டிசைன் கலர்)
பதிலளிநீக்குதலைப்பும் கவிதையும் அருமை. (படிக்க சுலபமாய் இல்லை, டிசைன் கலர்)
பதிலளிநீக்குசெல்ஃபோன் மூலமாக கமெண்ட் போட்டதில் ஏற்பட்ட சிக்கல் பலமுறைகள் கமெண்ட் பிரசுரமாகிவிட்டது. மன்னிக்கவும்.
பதிலளிநீக்குகவிதை மிகவும் அருமை ! உண்மையான, கருத்துள்ள வரிகள் ! நன்றி சகோதரி !
பதிலளிநீக்குதன்னையே தேய்த்து
பதிலளிநீக்குதளர்ந்து முதிர்ந்து, தள்ளாடி தடுமாறி
தன்னையே நிலைப்படுத்த நினையாது
விழுதுகள் மறந்த வேராய்
வேதனைப்படவும் முடியாது
வெளியில் சொல்லவும் இயலாது//
unmaithaan veliyil sollamudiyaamal thavikkiroom .. engkalukkaa kuralkodukka iidrathulee munvaruvathillai.
nanrimaa.
வணக்கம் அக்கா, சரியாகச் சொல்லியிருக்கிறீங்க. வேர்களை மறந்த மரங்கள் எம்மத்தியில் மிகவும் அதிகம்.. அதுவும் இக்காலத்தில்.. நல்லதொரு விழிப்புணர்வுக் கவிதை. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநல்ல கவிதை.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
//இரும்பாகிபோன
பதிலளிநீக்குஇதயங்களை ஈன்றெடுத்ததால்
முதியோர் இல்லத்தில்
முடங்கிடக்கிறது வேர்கள்
விழுதுகளாலே வேரறுக்கப்பட்டு,,,//
நெத்தியடியாக இருக்கு இந்த வரிகள்.
சிறப்பான கவிதை.
எப்போ கம்யூனிஸ்டா ஆனீங்க . கவிதைக்கேத்த கலர் :-)))
பதிலளிநீக்குமன வேதனையுடன் ரசித்தேன். அருமை.
பதிலளிநீக்கு///ஜெய்லானி சொன்னது…
பதிலளிநீக்குஎப்போ கம்யூனிஸ்டா ஆனீங்க . கவிதைக்கேத்த கலர் :-)))
ஜிங்குச்சா....!
ஜிங்குச்சா...!
பச்சக் கலரு ஜிங்குச்சா...!