நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

 
வேண்டிய வடிகால்கள்
வீட்டிலேயே இருக்க
வேலிதாண்டிபோகும்
உத்தமிகளும்!

வகைவகையாய் பரிமாறியும்
பசியடங்காமல்
பலவீட்டில் பசியாரும்
உத்தமர்களும்.

உருப்படியான 
உடல்களைக் கொண்டும்
ஊழைக் கொழுப்பெடுத்து
உழன்று புரழுது சாக்கடையில்!

ஒவ்வாத மனங்களுக் கிடையில்
ஓடவழியின்றி
ஊறி நாறுது தெருவரையில்!

அச்சானியில்லாமல் ஓடும்-இவர்களின்
அந்தரங்க வாழ்க்கை
அசிங்கத்தையே தேடியோடி
அடையும் வேட்கை!

வடிகாலின்றி ஓட நினைக்கும்
வாழ்க்கைக் கழிவுகளை-எங்கே
வடிப்பதென தெரியாமல் விழிப்பதே
இவர்களின் இழிநிலைந்த 
அன்றாட வாழ்க்கை...


இதுவும் ஈகரை கவிதைப்போட்டிக்காக எழுதியதுதான்.. 

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

12 கருத்துகள்:

  1. அருமை மலிக்கா,கடைசி வரிகள் சிறப்பாக இருக்கு.

    கவிதை போட்டிக்காக வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. ////வேண்டிய வடிகால்கள்
    வீட்டிலேயே இருக்க
    வேலிதாண்டிபோகும்
    உத்தமிகளும்!


    வகைவகையாய் பரிமாறியும்
    பசியடங்காமல்
    பலவீட்டில் பசியாரும்
    உத்தமர்களும்.


    உருப்படியான
    உடல்களைக் கொண்டும்
    ஊழைக் கொழுப்பெடுத்து
    உழன்று புரழுது சாக்கடையில்!///

    அற்புதமான வரிகள்...!

    ஊராரை
    ஊதாசீனப்படுத்திவிட்டு...
    ஊரெங்கும்
    உத்தமிகளும்...!
    உத்தமர்களும்...!

    உயிரைப் பறிக்கும்
    ஊமைத்தம்பூவையே
    உணவாய்
    உட்கொண்டு...

    தன்னுயிரை
    தானே
    மாய்த்துக்கொள்ளும்
    மனிதப் பதர்கள்...!
    மனிதர்களில் பதர்கள்...!

    பதிலளிநீக்கு
  3. ///வடிகாலின்றி ஓட நினைக்கும்
    வாழ்க்கைக் கழிவுகளை-எங்கே
    வடிப்பதென///

    என்ன ஒரு காத்திரமான சமுதாய சாடல்...
    வலிக்காமல் ஊசி போடுவது என்பது இதுதான்...
    சொற்களால் நோகாது இடித்துரைக்கும்
    உங்கள் கவி நடை மிக அழகு சகோதரி...

    பதிலளிநீக்கு
  4. உறவில்
    வேலியை தாண்டுபவர்களுக்கு
    செவிட்டில் சுளீர் என்று அறைகிற வரிகள்

    இந்த கவிதையை வாசித்தபின்
    மனம் உருத்துவோர் திருந்தட்டும்

    இன்றைய நவ உறவுமுறைகள்
    சீர்கேட்டில் திரிகிறது
    காலத்திற்கேற்ற கவிதை

    என் மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சகோ

    பதிலளிநீக்கு
  5. இன்றைய சூழ்லுக்கு அவசியமாகிப் போன பதிவு
    வார்த்தைப் பிரயோகங்கள் அருமை மனம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. ஒவ்வொரு வரியும் சாட்டையடி ! மனமார்ந்த பாராட்டுக்கள் ! நன்றி !

    பதிலளிநீக்கு
  7. என்ன சொல்ல மலிக்கா. இப்படியொரு தலைப்பு அதற்கு செருப்படியான காலசூழல் வரிகள்.

    நாரும் நாற்றம் பலவீடுகளில் தாங்கவில்லை. வெளீயில் தெரிந்தால் மானம் போகுதென்று சொல்லாமலே சிலர் அனைவருக்கும் விட்டீங்க பாருங்க பலான மனதிற்கான ஒரு அறை.
    அப்பப்பா.. மலிக்கான்னா அது மலிக்காதான்..

    பதிலளிநீக்கு
  8. இதுபோன்றதெல்லாம் திருந்த சான்சேயில்லை இதுகள் ஊரிப்போன சாக்கடைகள் அதிலிருந்து வெளியேறினாலும் அதன் வீச்சம் போகாது..


    உங்களை நினைத்தாலே ரொம்ப பெருமையா இருக்குங்க மலிக்கா.
    உங்களுக்குள் இருக்கும் அந்த வார்த்தைபிரயோகங்களுக்கு ஒரு பெரிய சபாஷ்..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது