நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நினைவுகூறுவோமாக!


அடக்குமுறைசெய்த
அன்னிய ஆங்கிலேயர்களிடமிருந்து
அகிம்சை என்னும்

அறவழியில் வெற்றிவாகை சூடி
உப்புசத்தியாகிரங்களால் தன்
உடல்களை வருத்தி

தன் குருதிகளையும் தன் தேகங்களையும்
தன் தாய்நாட்டிற்க்காக அர்ப்பனம் செய்து
தாயகத்திற்க்கு பெருமைத்தேடித் தந்து

தன் வம்சா வழியினர்கள் வசந்தமாய் வாழ
தன் வாழ்நாட்க்களைக்கூட வலியுடன் கழித்து
தன்நாட்டுக்காகவே பாடுபட்டு

சுதந்திரக்காற்றை நம் தேசத்தில் நிலவவிட
தம் சுகங்களையெல்லாம் தூக்கியெறிந்த
தியாகச் செம்மல்களின்
தியாகங்களுக்கு பலன்கிடைத்த தினம்

நம்தாய்நாட்டினை அன்னியர்களின்
பிடியிலிருந்து காப்பாற்ற
பாட்டுபட்டவர்களை இன்றுமட்டும்
நினைப்பது எவ்விதத்திலும் நியாயமில்லை

எந்த நோக்கத்தில் நமக்காக
சுதந்திரத்தை வாங்கித்தந்தந்தர்களோ
அதை கண்ணியத்துடன்
காத்துக்கொள்ளவேண்டியது நம்கடமை

சுதந்திரகாற்றை சுகமாய் அனுபவிக்கும்
நம் சுதந்திரகொடிபோல்
நாமும் நமக்காக பாடுபட்டு வாங்கித் தந்த
சுதந்திரத்தை பத்திரப்படுத்தி வாழ்வோமாக

நாட்டை நினைக்கும்போதெல்லாம்
நாட்டுக்காக போராடிய
நல்லவர்களையும்
நினையுகூறுவோமாக.

என் தாய்திருநாட்டில் வாழும் கோடானகோடி
மக்களுக்கும் உலகம்முழுவதும் இருக்கும் என்
இந்தியமக்களுக்கும் “என் அன்பான குடியரசு தின வாழ்த்துக்கள்”


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

4 கருத்துகள்:

  1. சுகமாக சுதந்திரமாக காற்றை சுவாசிக்க
    நம்மால் வாங்கப் பட்ட சுதந்திரம்..
    நம்மாலேயே இன்று மாசடைந்து கொடிருக்கிறது.
    இன்றிருக்கும் அரசியல் சூழல்கள்
    சாயம் வெளுத்து மாசற்று விளைந்திட
    இந்த குடியரசு தினம் ஊடு பொருளாய்
    அமையட்டும்...

    அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. கவிதை அருமை.

    அனைவருக்கும் என் இனிய குடியரசு தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. கவிதை அருமை...அக்கா

    அனைவருக்கும் என் இனிய குடியரசு தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க...!
    தங்கள் சுயமுகவரியை தொலைத்த...!
    தீரர்களுக்கு
    இந்நாளும்
    எந்நாளும்
    எனது "வீர வணக்கம்"...!

    கவிதை அருமை...!

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது