நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஆத்மார்த்தமான நன்றிகள்.

என் உணர்வுகள் துடித்து எழுத்துகளாய் வெளியேறியது
அது ஓசையாகி உலகெங்கும்  ஒலித்து
இன்று சிறந்த நூலுக்கான மூன்றாம் பரிசை பெற்றுள்ளதை நினைத்து
என் மனத்துக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் ஆனந்த சிறகடித்துப்பறக்கவைக்கிறது.
என் ஆன்மாவுக்குள் இறைநம்பிக்கையின் விசுவாசத்தை வலுப்பெறசெய்கிறது

கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளை எனது முதல்கவிதை நூலான ”உணர்வுகளின் ஓசை”யை 2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாய் தேர்ந்தெடுத்து மூன்றாம் பரிசை அறிவித்துள்ளது. அதனை மணிமேகலை பிரசுரத்தார்கள் எனக்கு மெயில் வழிசெய்தியாக வாழ்த்துகளையும் அவர்கள் அனுப்பிய கடித்தினையும் இணைத்து அனுப்பினார்கள். அதனைக்கண்டதும் இறைவா புகழனைத்தும் உனக்கே என உள்ளம் ஆனந்ததில் அழுது திழைத்தது.

இணைக்கப்பட கடித்தத்தின் அலைபேசி நம்பருக்கு போன் செய்து கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளையின் தலைவர் மலர்மகன்அய்யா அவர்களிடமும் பேசிவிட்டு என நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்தேன்.
இதோ அவர்கள் அனுப்பிய கடித்தம் உங்கள் பார்வைக்கும் இணைத்துள்ளேன்.

எனது நூலையும் சிறந்த நூலாக தேர்ந்தெடுத்த  கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளைக்கும். எனது நூலை பல பரிசுப்போட்டிகளுக்கு அனுப்பிவரும் மணிமேகலை பிரசுரத்தாருக்கும்.
எனது ஆத்மார்த்தமான நன்றிகள்.எந்நாளும்..

எனது ஒவ்வொரு எழுத்துகளுக்கும் நீரோடையின் வாசகர்கள் மற்றும் அன்பர்கள். நல்லுள்ளம் கொண்ட அனைவர்களின் ஊக்கம்தான் இதை உங்களோடு பகிர்வத்தில் எனக்கு ஆனந்த மகிழ்ச்சி. இதைத்தொடர்ந்து  உலகெங்கிலும் உள்ள உணர்வுகளின் வெளிப்பாடாய் இன்னுபல நூல்கள் எழுதவேண்டுமென எண்ணம் தூண்டிவிடப்பட்டுள்ளது. இறைவனின் துணைக்கொண்டு அதனை செயல்படுத்த முயச்சிக்கிறேன்.அதற்க்கு தங்கள் அனைவரின் அன்பென்ற ஒத்துழைப்பும். இறைபிராத்தனைகளும் என்றென்றும் எனக்கும் என் எழுத்துகளுக்கும் வேண்டும்  என வேண்டும்

உங்கள்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

21 கருத்துகள்:

 1. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது மலிக்கா.மேன்மேலும் பல பரிசுகள் வாங்க அன்பு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. அக்கா வாங்கக்கா முதல் வாழ்த்தே அக்காவிடமிருந்து ரொம்ப சந்தோஷமாக இருக்குக்கா. தங்களின் அன்பு வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சிக்கா..

  பதிலளிநீக்கு
 3. எங்களின் பிராத்தனைகள் என்றும் உங்களுக்குண்டு. இன்னும் பல பரிசுகளையும் நற்கவிதைகளையும் படைக்க வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. எங்களின் பிராத்தனைகள் என்றும் உங்களுக்குண்டு. இன்னும் பல பரிசுகளையும் நற்கவிதைகளையும் படைக்க வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள் சகோ மனம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ....

  பதிலளிநீக்கு
 6. மேலும் மேலும் பல பரிசுகள் வாங்க வாழ்த்துக்கள் அக்கா

  பதிலளிநீக்கு
 7. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது மலிக்கா.மேன்மேலும் பல பரிசுகள் வாங்க அன்பு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. மலிக்கா மனம் நிறைந்த வாழ்த்துகள் மேலும் சிறப்புப் பெற்று உயர வாழ்த்துகள். இறை ஆசி கிடைக்கட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துகள்...!
  மேலும் பல பரிசுகள் பெற...!

  வாழ்த்துக்கள்!
  வாழ்த்துக்கள்!
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 10. வாழ்த்துகள் மலிக்கா... வாழ்த்துகள் மலிக்கா.. ரொம்ப பெருமையா இருக்கு. கவிதை நூல்களாய் பெருகட்டும். எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 11. மிக்க மகிழ்ச்சி. கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது. மனமார்ந்த பாராட்டுக்கள். நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

  மேன் மேலும் பல வெற்றிகளை நீங்கள் எட்டவும் வாழ்த்துகள்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 12. வாழ்த்துகள் சகோதரி,

  ஏதோ எங்கள் எல்லோருக்கும் கிடைத்த பரிசென மகிழ்கிறது மனம்.

  மேலும் பல வெற்றிகளுக்கு வாழ்த்துகள்.

  இங்கே இருந்திருந்தால் விருந்து கேட்டிருக்கலாம் :)

  பதிலளிநீக்கு
 13. இந்த செய்தியைக் காண மிகவும் சந்தோசமாக இருக்கிறது அக்கா. நீங்கள் இன்னும் பல முயற்சிகளில் வெற்றிபெறவும், ஒரு மிகச்சிறந்த கவிதாயினியாக மிளிரவும் இந்தத் தம்பியின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. நல்வாழ்த்துக்கள் மலிக்கா.மிக்க மகிழ்ச்சி.தொடர்ந்து பல நல்ல படைப்புகள படையுங்கள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 15. நல்ல செய்தி. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

  பதிலளிநீக்கு
 16. மிக்க மகிழ்ச்சி. மேலும் மேலும் பல பரிசுகள் வாங்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 17. அக்கா அக்கா ரொம்ப சந்தோஷமாக இருக்குக்கா. இந்த இனிய செய்தியை கேட்டதும். தகுதியானவர்களுக்கு நிச்சயம் பரிசென்ன பதக்கமென்ன பட்டமென்ன அனைத்தும் தேர்ந்த அவார்டே கிடைக்கும் அக்கா. உண்மையாசொகிறேன் அக்கா மிகவும் சந்தோஷமாக இருக்குக்கா.

  இன்னும் நீங்க வளரனும். மென்மேலும் எழுதனும் சாதனைகள் பட்டியலில் உங்க பெயரும் வரனும்..
  முகம் பார்க்காவிட்டாலும் மனதால் உங்களை பார்கிறேன். நிச்சயம் நேரிலும் பார்ப்பேன். வாழ்த்துகளும் பாராட்டுக்களும். எந்நாலும் குவியட்டும்..

  பதிலளிநீக்கு
 18. நேரில் இருந்திருந்தால் அப்படியே கட்டிக்கொள்வேன் அன்பு அக்காவை. கடவுள் ஒரு தம்பியைதான் தந்திருக்கார்ன்னு இருந்தேன் இப்போ அழகிய[என்ன பார்க்கம அழுகுன்னு சொல்கிறாய் அப்படியெல்லாம் கேட்கக்கூடாது அக்கா நிச்சயம் அழகாதானிருப்பாள்] அறிவான அக்காவையும் கொடுத்துவிட்டார் அவருக்கு எனது நன்றிகள்..

  சிவிட்டெடு கொண்டாடுன்னு பக்கத்துவீட்டுக்கெல்லாம் சாக்லெட் கொடுத்துட்டோமுல்ல எல்லாரும் நாளைக்குதானே குடியரசு தினமென்றார்கள். அதை நாங்கே இன்றே கொண்டாடிட்டோமுல்ல..

  பதிலளிநீக்கு
 19. அன்புடன் வாழ்த்துகள். மாஷாஅல்லாஹ்! எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வனாக அல்லாஹ் அருள்பாளிக்கட்டும்

  பதிலளிநீக்கு
 20. மகிழ்ச்சிக்குரிய செய்தி மலிக்கா. இன்னும் பல சிறப்புக்களை தங்களின் நூல்கள் அடையவும், அதைக் கடந்தும் பல நற் படைப்புக்களை இயற்றி தாங்கள் மேலும் பல சிறப்புக்களை அடையவும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும்.. அன்பும்..

  வித்யாசாகர்

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது