நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பூட்டிவிட்டேன் உனை வைத்து.



அன்பான காதலனே
ஆருயிர் மன்னவனே!

பரிமாறிக்கொண்ட
பார்வைகளின் ஸ்பரிசங்கள்
பேசாமல் பேசிய
வார்த்தைகளின் கோர்வைகள்

நொடிக்கொருமுறை
நினைவுகளோடு உரசல்கள்-என
நெஞ்சம் முழுவதும்
நிரம்பி வழிகிறாய்

விழிகளில் வினவினாய்
இதயத்தை தழுவினாய்
விழிமூடும் போதெல்லாம்
உயிருக்குள் உலவினாய்

உயிரின் வேர்களை
உலுக்கி -அதிலுதிர்ந்த
உணர்வுகளை
உதிராமல் கோத்தாய்!

கோத்த நினைவுகளை
பொக்கிஷமாக்கி-அதை
தொலைந்துவிடாதவாறு
மனதிற்குள் புதைத்தாய்!

மூங்கிலின் காற்றுக்குள்
மூச்சுமுட்ட செய்தாய்
மூழ்காமல் கடலுக்குள்
முத்தெடுக்க வைத்தாய்!

எனக்குள் உன்னைத் தந்து
மனச்சிறகையும் நெய்து தந்து
மனவானில் பறக்கும்போது
சிறகுகளை ஏன் கேட்கிறாய்!

முயன்றுதான் பார்க்கிறேன்
முடியாமல் தோற்கிறேன்
மறக்கமுடியா நினைவுகளை
மீண்டும்
மனத்திற்குள் பூட்டுகிறேன்

அடப்போடா காதலனே!
என்றுமே நீதான்
என் கணவனே!

இது நான் 2009 நவம்பர் மாதம் 3 ந்தேதி எழுதியது. அதிலிருந்து இதில் சின்ன மாற்றம் செய்து வெளியிட்டுள்ளேன். அது என்னான்னு கண்டுபிடிங்க..
 கண்டுபிடி கண்டுபிடி அட சும்மாதான். கண்டு பிடிங்களேன்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

25 கருத்துகள்:

  1. மூங்கிலின் காற்றுக்குள்
    மூச்சுமுட்ட செய்தாய்
    மூழ்காமல் கடலுக்குள்
    முத்தெடுக்க வைத்தாய்!//

    என்னமா எழுதுறீங்கக்கா . அப்படியே அள்ளிக்கலாம்போல இருக்கு உங்களை.

    என்ன சொல்வதென்றே தெரியவில்லைபோங்க. நானும் இருக்கேனே வெட்டியா. இன்னும் கொஞ்ச நாளில் நானும் எழுதபோறேன் உங்களைபார்த்து.. என் குருவே சொல் எனை ஒரு வார்த்தை எழுதென்று உனக்காக படைக்கிறேன் கவிதைகளை ஆகா கவிதை வந்துருச்சே.. ஹைய்யா ஹைய்யா ஹைய்யா..

    பதிலளிநீக்கு
  2. ///இது நான் 2009 நவம்பர் மாதம் 3 ந்தேதி எழுதியது.அது என்னான்னு கண்டுபிடிங்க.. கண்டுபிடி கண்டுபிடி அட சும்மாதான். கண்டு பிடிங்களேன்///

    அது என்னவா இருக்கபோகிறது...!

    எல்லாம்..!
    உங்க மச்சான்
    உங்ககிட்ட மாட்டிக்கிட்ட நாள்தான்...!

    ஆயுள் தண்டனை கைதியாய்...!

    எப்புடி...!
    ஹா...! ஹா..! ஹா..!

    பதிலளிநீக்கு
  3. அருமையான காதல் கவிதை
    கடைசியாகச் சேர்த்தது
    ஈற்றடியாகத்தான் இருக்கும்
    மனம் கவர்ந்த பதிவு
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. ///அடப்போடா காதலனே!
    என்றுமே நீதான்
    என் கணவனே!///

    ஆமா...!

    முத்துப்பேட்டைல எல்லாம் கணவரை "அடப்போடா" என்றுதான் போகச்சொல்வீரோ...!

    எதோ என்னாலான கைங்கரியம்...!

    ஹோ...! ஹோ....!

    ஆனா..! இப்பத்து சினிமா பாடல்களில் வரும் உறவுகளுக்கு மரியாதைக் குறைவாக அழைக்கும் பாடல் வரியைவிட இதுமேல்...!

    இந்தக்காலத்தவர்களை கேட்டால் "அன்பின் உச்சம்" இப்படி அழைப்பது என்பர்...!

    நம் முன்னோரின் "அன்பின் எச்சம்" நாம் என்பேன் நான்...!

    நாம் எப்படிப்பட்ட சாதனைகளை படைத்தாலும்... நம் முன்னோர் நடந்துவந்த பாதையில்தான்... நாமும்...! இன்றைய தங்களைத்தானே அறிவாளிகள் என்று சொல்லிக்கொள்ளும் இளையதலைமுறையினரும் பயணித்து வெற்றிகளை பெற்றிருகிறார்களே தவிர, இவர்கள் பெற்ற வெற்றிக்கு இவர்கள் புதிய தனி பாதை ஏதும் அமைக்கவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை...! யதார்த்த உண்மை...!

    பதிலளிநீக்கு
  5. வழக்கம்போல் கவிதை அருமை...!

    குறிப்பாக...!

    ///விழிகளில் வினவினாய்
    இதயத்தை தழுவினாய்
    விழிமூடும் போதெல்லாம்
    உயிருக்குள் உலவினாய்

    உயிரின் வேர்களை
    உலுக்கி -அதிலுதிர்ந்த
    உணர்வுகளை
    உதிராமல் கோத்தாய்!////

    கோடிடவேண்டிய வரிகள்...!

    நல்ல கவிதை...!

    வாழ்த்துக்கள்...!

    *************

    அதுசரி...!
    பிட்டுபிட்டா....பிட்டா....பிட்டா

    பெயரன், பேத்தி எடுக்க போறப்ப....!
    நேற்றும்... அதற்கு முன்பும் இந்தமாதிரி "ரொமான்ஸ்" கவிதைகள் தேவையா? அப்படீன்னு...நான் கேட்கல...!

    அய்யாச்சாமி கேட்கசொன்னாரு...!

    ஜருகண்டி...! ஜருகண்டி...!

    பதிலளிநீக்கு
  6. பூட்டிய கையோடு
    சாவியைத் தொலைத்ததால்
    பாட்டியாய் போனாலும்
    பசுமையாய் நிலைக்கும் :)

    அழகான கவிதை.
    வாழ்த்துகள் சகோதரி

    பதிலளிநீக்கு
  7. அனுஜா கூறியது...

    மூங்கிலின் காற்றுக்குள்
    மூச்சுமுட்ட செய்தாய்
    மூழ்காமல் கடலுக்குள்
    முத்தெடுக்க வைத்தாய்!//

    என்னமா எழுதுறீங்கக்கா . அப்படியே அள்ளிக்கலாம்போல இருக்கு உங்களை.

    என்ன சொல்வதென்றே தெரியவில்லைபோங்க. நானும் இருக்கேனே வெட்டியா. இன்னும் கொஞ்ச நாளில் நானும் எழுதபோறேன் உங்களைபார்த்து.. என் குருவே சொல் எனை ஒரு வார்த்தை எழுதென்று உனக்காக படைக்கிறேன் கவிதைகளை ஆகா கவிதை வந்துருச்சே.. ஹைய்யா ஹைய்யா ஹைய்யா..//


    அப்படியா பொய்யுக்கும் ஒரு அளவு இருக்கு அனுஜா.. ஹா ஹா

    அப்படியே தொடர்ந்து எழுது. கவிஞர்களுக்கெல்லாம் கவிஞராகிவிடுவாய்..

    இங்கே பல ”குரு” க்கள் உலாவுகிறார்கள்.[யானையோடும். பச்சைரோஜாவோடும்] என்னைபோய் குரு எங்கிறாய் நான் என்றுமே சிஷ்யன் தானம்மா இறைவனுக்கும் எனது எழுத்துக்களுக்கும்..

    பதிலளிநீக்கு
  8. காஞ்சி முரளி ///இது நான் 2009 நவம்பர் மாதம் 3 ந்தேதி எழுதியது.அது என்னான்னு கண்டுபிடிங்க.. கண்டுபிடி கண்டுபிடி அட சும்மாதான். கண்டு பிடிங்களேன்///

    அது என்னவா இருக்கபோகிறது...!

    எல்லாம்..!
    உங்க மச்சான்
    உங்ககிட்ட மாட்டிக்கிட்ட நாள்தான்...!

    ஆயுள் தண்டனை கைதியாய்...!

    எப்புடி...!
    ஹா...! ஹா..! ஹா..!// ஹலோ எச்சூஸ்மி.. 2009. போட்டிருக்கேன் நல்லாபாருங்கப்பூ. அதுக்கு 15 வருசத்துக்கு முன்னாடியே மாட்டிட்டாங்கப்பூ அவுங்க..

    பதிலளிநீக்கு
  9. Ramani கூறியது...

    அருமையான காதல் கவிதை
    கடைசியாகச் சேர்த்தது
    ஈற்றடியாகத்தான் இருக்கும்
    மனம் கவர்ந்த பதிவு
    வாழ்த்துக்கள்//

    வாங்கய்யா.

    அய்யாவின் கண்டுபிடிப்புக்கு மகிழ்ச்சி. ஆனால் அந்த ஈரடியில் வேறடி சேர்திருந்தேன். அதைதான் கேட்டேன். நான் எழுதியவைகளை புரட்டினால் தெரியும்..

    அன்பு நிறைந்த வாழ்த்துக்கும் கண்டுபிடிக்க முயற்ஸித்தமைக்கும் மிக்க நன்றி அய்யா..

    பதிலளிநீக்கு
  10. Rathnavel கூறியது...

    அழகு கவிதை.
    வாழ்த்துகள்.//

    வாங்கய்யா. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  11. /காஞ்சி முரளி கூறியது...

    ///அடப்போடா காதலனே!
    என்றுமே நீதான்
    என் கணவனே!///

    ஆமா...!

    முத்துப்பேட்டைல எல்லாம் கணவரை "அடப்போடா" என்றுதான் போகச்சொல்வீரோ...!

    எதோ என்னாலான கைங்கரியம்...!///

    எச்சூஸ்மி நல்லா படிக்கவும் ”அடபோடா காதலனே!” என்றுமே நீதான் என் கணவனே! ஆக அடேவாக இருந்த காதலன் அன்பான கணவராகிவிட்டார்.. நாங்களெல்லாம் சிக்குவோமா..

    ஏங்கப்பூ ஏன் நல்லாயிருக்கிற குடும்பத்துல இல்லயில்லை ஊருக்குள்ள கும்மியடிக்க கிளம்பிருக்கிறீங்க.. அதெல்லாம் இங்கு வேகாதுங்கப்பூ..

    ஏனுங்க பாவா இஞ்ச கொஞ்சம் வாங்களேன் அப்படி கூப்பிட சொல்லுறேளா. அண்ணி அழாகாக கூப்பிடுவதைதான் பார்த்தேனே..

    பதிலளிநீக்கு
  12. /பெயரன், பேத்தி எடுக்க போறப்ப....!
    நேற்றும்... அதற்கு முன்பும் இந்தமாதிரி "ரொமான்ஸ்" கவிதைகள் தேவையா? அப்படீன்னு...நான் கேட்கல...!

    அய்யாச்சாமி கேட்கசொன்னாரு...!

    ஜருகண்டி...! ஜருகண்டி..// அய்யா அய்யாசாமி. பேரன் பேத்தி எடுத்தாலென்ன. பேத்தியே பேராண்டி எடுத்தாலென்ன. நான் மச்சானின் மனைவிதானே எப்புடி ஹா ஹா

    அட்டகாச கருத்துகள் உங்களைவிட்டா யாரால எழுத முடியும். ஐஸ் ஐஸ் அப்படின்னு பச்சை ரோஜா சொல்லும்பாருங்க..

    பதிலளிநீக்கு
  13. ஹேமா கூறியது...

    அழகான காதல் கவிதை !//

    மிக்க நன்றி தோழி..

    பதிலளிநீக்கு
  14. sabeer.abushahruk கூறியது...

    பூட்டிய கையோடு
    சாவியைத் தொலைத்ததால்
    பாட்டியாய் போனாலும்
    பசுமையாய் நிலைக்கும் :)

    அழகான கவிதை.
    வாழ்த்துகள் சகோதரி//

    வாங்க சகோ எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்.. நலமா?

    தொலைத்த சாவியை
    இனிமேல்
    தேடியெடுக்கவே வேண்டாமென்றுதான்!!!!!!!
    .. மிக்க நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  15. சிநேகிதி கூறியது...

    அழகான வரிகள்..//

    வாங்க ஃபாயிஜா. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  16. மூங்கிலின் காற்றுக்குள் | மூச்சுமுட்ட செய்தாய் | மூழ்காமல் கடலுக்குள் | முத்தெடுக்க வைத்தாய்!
    -அருமையான வரிகள் மலிககா! மிகமிக ரசித்தேன். இதற்காக நான் முத்துப்பேட்டை வரும்போது உனக்கொரு ஸ்பெஷல் பரிசு காத்திருக்கு!

    அனுஜா கூறியது: என் குருவே சொல் எனை ஒரு வார்த்தை எழுதென்று உனக்காக படைக்கிறேன் கவிதைகளை ஆகா கவிதை வந்துருச்சே.. ஹைய்யா ஹைய்யா ஹைய்யா..

    நான்: அவ்வ்வ்வ்வ்வ! இப்டிச் சொன்னயின்னா அப்புறம் நானும் கவிதை எழுத ஆரம்பிச்சுடுவேன், கபர்தார்!

    பதிலளிநீக்கு
  17. நான்: அவ்வ்வ்வ்வ்வ! இப்டிச் சொன்னயின்னா அப்புறம் நானும் கவிதை எழுத ஆரம்பிச்சுடுவேன், கபர்தார்!//


    அச்சோ அச்சச்சோ வேண்டாங்கய்யா வேண்டாம்.
    நான் இனி கவிதையே எழுதமாட்டேன்[என்னவோ ஐய்யாயிரம் எழுதி தள்ளிட்டமாதரி ஹி ஹி]

    அதென்னங்கய்யா கபர்தார்

    பதிலளிநீக்கு
  18. //கணேஷ் கூறியது...அருமையான வரிகள் மலிக்கா! மிகமிக ரசித்தேன். இதற்காக நான் முத்துப்பேட்டை வரும்போது உனக்கொரு ஸ்பெஷல் பரிசு காத்திருக்கு!//

    யக்கோவ் அய்யா ஏதோ பெரிய பரிசு கொண்டுவாராங்களாமாம். அதை நீங்கமட்டும் பார்த்துவிட்டு வச்சுகிடாதீங்க எங்ககிட்டேயும் காட்டுங்க. ஓகே..

    பதிலளிநீக்கு
  19. அம்மா அனுஜா... கபர்தார்ன்னா ஜாக்கிரதைன்னு அர்த்தம்மா...

    பதிலளிநீக்கு
  20. கணேஷ் கூறியது...

    அம்மா அனுஜா... கபர்தார்ன்னா ஜாக்கிரதைன்னு அர்த்தம்மா...//

    அம்மாடியோ கடவுளே என்னை காப்பாத்து. கணேஷ் அய்யாகிட்டேர்ந்து..

    பதிலளிநீக்கு
  21. //விழிகளில் வினவினாய்
    இதயத்தை தழுவினாய்
    விழிமூடும் போதெல்லாம்
    உயிருக்குள் உலவினாய்//

    சந்தம் கலக்குகிறது.. அருமையான கவிதை அக்கா. வாழ்த்துக்கள்.

    இன்றுதான் நீராட வருகிறேன். நீரோடை சில்லென்றிருக்கிறது..

    பதிலளிநீக்கு
  22. ஊர் ஜாமாதில் ஒற்றுமை குலைந்து கிடக்கும் ஊர்களுக்கும் இது பொருந்தும் கவிதையாக உலா வரும்

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது