நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..


உணர்வுகளின் ஓசைக்கு அன்போடு வாழ்த்துரை வழங்கிய சகோதரர். நர்கீஸ் இதழ் கெளரவ ஆசிரியரும் மற்றும் பிரபல இஸ்லாமிய நாவலாசிரியருமான டாக்டர் ஹிமானா சையத் அவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதுமான நன்றிகள்.

திருச்சி எழுத்தாளர் அண்ணன் சையத் அவர்கள் சொல்லி மெயில்வழியே அறிமுகமான சகோதரர் அவர்கள்தான் டாக்டர் ஹிமானா சையத் அவர்கள். நர்கீஸ் நடத்திய சர்வதேச போட்டியில் கலந்துகொள்ள எனது கவிதைகளை கடைசி நிமிடத்தில்தான் அனுப்பினேன். அதில் ஆறுதல் பரிசுகளாக  இரு கவிதைகளுக்கு 2000ம் பெற்றேன். அவர்களின் சகோதரத்துவமான தொடர்புகள் மெயில்வழியே தொடர்ந்தது, அப்போதுதான் எனது முதல் கவிதை நூலுக்கு அவர்களிடம் வாழ்த்துரை வாங்க நினைத்து மெயில் அனுப்பினேன். மறுப்பேதும் சொல்லாமல் என் கவிதைகளை அனுப்பச்சொன்னார்கள். அனுப்பியதும் அதற்கான வாழ்த்துரை என் உணர்வுகளுக்கு வந்தது. அதனைக்கண்டதும் இரட்டிப்பு சந்தோஷம் ஏன் தெரியுமா? எனது மச்சானைப்பற்றி அவர்கள் அதில் குறிப்பிட்டு இருந்ததுதான்.

ஒளிதரும் வெளிச்சத்தைதான் பார்க்கிறோம் அதற்காக உருகும் மெழுகையாரும் உணர்வதில்லை. ஆனால் அதை உணர்த்தும் விதமாக சகோதரர் அவர்கள் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டிருந்தது நெஞ்சுக்குள் மகிழ்வை குளிரச்செய்தது.அவர்களின் நல்ல மனதிற்க்கு இறைவன் அவர்களுக்கு ஈருலகிலும் நற்பாக்கியத்தை வழங்குவானாக..

இதோ அவர்கள் வழங்கிய வாழ்த்துரை..

சகோதரி மலிக்காவின் கவிதைகள் சமீபத்தில்தான் அறிமுகம்.


நர்கிஸ் இதழ்- மல்லாரிபதிப்பகம் இணைந்து நடத்திய சர்வதேச கவிதைப் போட்டியில் கடைசி நேரத்தில் அவர் கலந்து கொண்டார்; ஆறுதல் பரிசுகளையும் வென்றார்.


இப்போது தினமும் அவரது பழைய - புதிய கவிதைகளை வலைத்தளத்தில் வாசிக்கிறேன் என்பதை விட வாசிக்க வைக்கிறார் என்பேன்.


அவரது சுறுசுறுப்பு வியக்கவைக்கிறது!எளிய வார்த்தைகளில் அவர் பேசுகிற கருத்தாக்கம் நீண்ட நேரம் சிந்திக்க வைக்கிறது!


'உரிய வாய்ப்புகள் தரப்பட்டால் முஸ்லிம் பெண்கள் குடும்பத்தின் 'சுமை'யாக இல்லாமல், 'சொத்தா'க மாறுவார்கள்' என்று 35 ஆண்டுகளுக்கு முன் நானும் என்னைப் போன்றவர்களும் எழுதியபோது/ பேசியபோது சிலர் இளக்காரமாகப் புன்னகைப்பார்கள். ஆனால், இப்போது அந்த நிலை வெகுவாக மாறியிருக்கிறது!


தங்கை மலிக்காவின் கணவரை நான் பெரிதும் பாராட்டுகிறேன். பல ஆயிரம் சரசரிகளுக்கு மத்தியில் அவர் ஓர் அபூர்வ மனிதர்!


மலிக்காவை - அவரது திறமையை அறிந்து இயல்பாக இயங்க விட்டமைக்காக எத்தனை பேர் பரிகசித்திருப்பார்கள் என்பதை என்னால் யூகிக்கமுடியும்.


எத்தனை பாத்திமாக்கள், ஆமினாக்கள், ஹாஜராக்கள், ஜரீனாக்கள் எழுத்துலகத் தொடுவானத்தில் பளிச்சிட்டு -மிகப் பெரிய எதிர்காலத்துக்கு முன்னுரை எழுதியும்,திருமணத்துக்குப் பின் காணாமல் போனார்கள், வாழப்போன வீடுகளின் ஒத்துழைப்பும் ஊக்குவிப்பும் இல்லாமையால் என்பதை நான் நன்கு அறிந்தவன் என்பதால், மலிக்காவின் கணவர் நம் நன்றிக்குரியவர் என உரக்க முழங்குகிறேன்.


எழுத அனுமதித்ததுடன், அவரது ஆக்கங்களை நூலாக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.


உளம் நெகிழ வாழ்த்துகிறேன்; தங்கை மலிக்காவின் எழுத்துல வெற்றிக்கு என்னுடைய பிரார்த்தனைகள்!

மிக்க அன்புடன்...
ஹிமானா சையத்
சிங்கப்பூர்
+65- 92717237
himanasyed@yahoo.com
himanasyed@gmail.com

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

34 கருத்துகள்:

 1. உங்களின் கவிதை நூலை படிக்க ஆவலாக உள்ள சிஸ்டர். நான் சென்னை வரும்போது கட்டாயம் வாங்கிப்படித்து கருத்துகளை சொல்கிறேன். இன்னும் நீங்கள் பல நூல்கள் வெளியிட மனமார்ந்த பிராத்தனைகள்

  பதிலளிநீக்கு
 2. //மிகப் பெரிய எதிர்காலத்துக்கு முன்னுரை எழுதியும், திருமணத்துக்குப் பின் காணாமல் போனார்கள்//

  உண்மையே மலிக்கா. பெண் என்றால் இதெல்லாம் அநாவசியம், நீ எழுதித்தான் சமுதாயம் திருந்தப்போகிறதா என்றெல்லாம் இளக்காரம் செய்யப்படுவதற்குப் பயந்தே பலர் தம் திறமைகளை ஏறக்கட்டி விடுகிறார்கள்.

  உங்களிடமே நான் பலமூறை உங்களவரை மிகவும் வியந்து பாராட்டியிருக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்!!

  பதிலளிநீக்கு
 3. உண்மையே மலிக்கா. பெண் என்றால் இதெல்லாம் அநாவசியம், நீ எழுதித்தான் சமுதாயம் திருந்தப்போகிறதா என்றெல்லாம் இளக்காரம் செய்யப்படுவதற்குப் பயந்தே பலர் தம் திறமைகளை ஏறக்கட்டி விடுகிறார்கள்.
  //

  நீங்கள் சொன்னதும் உண்மைதான் ஹுசைனம்மா. எத்தனையோ பேர்கள் முடக்கப்பட்டுள்ளார்கள். எல்லாருக்கும் அக்காவின் கணவர்போல் வாய்த்த்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்..

  அக்கா நீங்க ரொம்ப கொடுத்துவைத்தவங்க கடவுளின் ஆசி இருக்கு உங்களுக்கு..

  பதிலளிநீக்கு
 4. World No.1 Money Making Site. 100% Without Investment Job.

  Visit Here: http://adf.ly/4FKbj

  பதிலளிநீக்கு
 5. மலிக்கா உங்கள் மச்சானை பற்றி நன்கு அறிவேன். சிலர் என்ன தான் நல்ல எழுததாளர்கள்ா் இருந்தாலும் பெண்கள் எழுத்தை வெளிகொணர விடுவ்த்ிலை அந்த விதத்தில் நீங்கள் மிகவ்ும் கொடுதது வைத்தவ்ர்.

  உங்கள் நி்ரோடை உலகமெங்கும் வெற்றி நடை போட வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. CHENNAI PLAZA

  No, 277/30 Pycrofts Road,1st Floor,
  (opp:shoba cut piece)
  Triplicane , Chennai 600 005
  Tel: 91 44 4556 6787
  Mr.Mohideen Mob: 91 78 45367954
  Mr.Ibrahim Mob: 91 98 43709497

  சென்னையில் புத்தகம் தே்வைபடுகி்றவர்கள் இந்த அட்ரெஸில் வாங்கிக்கொள்ளலாம்

  பதிலளிநீக்கு
 7. R. ராபின் கூறியது...

  உங்களின் கவிதை நூலை படிக்க ஆவலாக உள்ள சிஸ்டர். நான் சென்னை வரும்போது கட்டாயம் வாங்கிப்படித்து கருத்துகளை சொல்கிறேன். இன்னும் நீங்கள் பல நூல்கள் வெளியிட மனமார்ந்த பிராத்தனைகள்.//

  வாங்க ராபின் தங்களின் வருகைக்கும் மனமார்ந்த பிராத்தனைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

  நிச்சயம் கருத்துகளை சொல்லுங்கள். எதிர்பார்கிறேன்..

  பதிலளிநீக்கு
 8. ஹுஸைனம்மா கூறியது...

  //மிகப் பெரிய எதிர்காலத்துக்கு முன்னுரை எழுதியும், திருமணத்துக்குப் பின் காணாமல் போனார்கள்//

  உண்மையே மலிக்கா. பெண் என்றால் இதெல்லாம் அநாவசியம், நீ எழுதித்தான் சமுதாயம் திருந்தப்போகிறதா என்றெல்லாம் இளக்காரம் செய்யப்படுவதற்குப் பயந்தே பலர் தம் திறமைகளை ஏறக்கட்டி விடுகிறார்கள்.//

  நிறையபேர் சொல்லக்கேட்டிருக்கேன் ஹுசைனம்மா. ஏன் இப்படியிருக்கிறார்கள் என நினைத்துக்கொள்வேன் வேறு என்ன செய்யமுடியும்.. ஆனால் நம்மிடம் பேசும்போது அப்படியெல்லாம் இல்லாவர்கள்போல் காட்டிக்கொள்வார்கள்..

  //உங்களிடமே நான் பலமூறை உங்களவரை மிகவும் வியந்து பாராட்டியிருக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்!!//

  நிச்சயமாக இறைவனுக்குதான் நான் அதிகம் நன்றி சொல்லவேண்டும். .. தாங்கள் எத்தனையோ முறை சொல்லியுள்ளீர்கள். அப்போவெல்லாம் மிகுந்த சந்தோஷமாக இருக்கும். தங்களின் அன்பான கருத்துப்பகிர்தலுக்கு மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள் மலிக்கா அக்கா.. உங்களின் கவிதை நூல் வெளியீட்டுக்கு. இன்னும் பல வெளியிடனும்.

  பதிலளிநீக்கு
 10. நல வாழ்த்துக்கள் சகோதரி..
  பல புத்தகங்கள் படைக்க இறைவன்
  அருள்புரியட்டும் தங்களுக்கு.

  பதிலளிநீக்கு
 11. நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார்கள்
  தொலைந்த பொருளை தேடுவது போல் வாழ்க்கையில் கல்வியை தேடிக்கொண்டே இருங்கள் என்று நபிகள் நாயகம்(ஸல்)


  அறிவு அடைவதில் அடைந்ததில் ஆணுக்கு பெண் சாமானவரே. ஆய்சா(ரலி) அவர்கள் பெற்ற அறிவு மிகவும் உயர்வானது, வியக்கத் தக்கது .

  "நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கிற எதுவாயினும் அதற்குரிய பலன் உங்களுக்கு அளிக்கப்பட்டே தீரும். உங்கள் மனைவியின் வாயில் ஊட்டும் (ஒரு கவளம்) உணவாயினும் சரியே" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

  நூல்: புஹாரி எண் 6373

  " பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம் பேதமை அற்றிடும் காணீர்"

  தங்கள் கணவர் கொடுத்துவைத்தவர் அறிவான பண்பான மனைவி பெற்றமைக்கு .நீங்கள் அதைவிட கொடுத்து வைத்தவர் உங்கள் மீது அன்பு செலுத்துவதோடு உங்கள் அறிவின் ஆற்றல் மக்களுக்கு பயன் பட வைத்தமைக்கு .
  "உங்களின் உயர்ந்தவர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு ஏற்றி வைத்தவர்"

  அன்போடு வாழ்த்துகள் .

  பதிலளிநீக்கு
 12. உண்மையைச் சொல்லியுள்ளார்...!
  இதில் வியப்பேதும் இல்லை...!

  ஆமா...!
  இத இத்தனை நாள் சென்று பதிவிட்டுள்ளீர்கள்...!
  உங்க ஆத்துக்கார்கிட்ட எதாவது கோரிக்கை வைத்திருக்கிறீர்களோ...?
  ஓஹோ..! இந்த பதிவப் போட்டு எதாச்சும் நகை வாங்க பிளான் போலிருக்கு...!
  ஹா...! ஹா...!

  பதிலளிநீக்கு
 13. rompa aasariuyamaaka iruuku islaamiya samuthayaththin penkalukkalai puudi vaippaangka kanavarkala ena sollakkeelvipaddirukkeen. aanaal athu poy ena nirupiththu uyarnvaraakividdaar ungkalavar..

  vaazththukal.malikka..

  பதிலளிநீக்கு
 14. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்!
  பகிர்விற்கு நன்றி சகோதரி!
  என் வலையில்:
  "நீங்க மரமாக போறீங்க..."

  பதிலளிநீக்கு
 15. நல்வாழ்த்துக்கள் மலிக்கா. தொடருங்கள் உங்கள் கவிதைப் பயணத்தை..மென்மேலும் புகழடைய வாழ்த்துக்கள்.உங்கள் மச்சானுடைய கடின ஒத்துழைப்பிற்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 16. உங்களிடம் நிறையவே திறமைகள் இருக்கிறது.மனம் நிறைந்த வாழ்த்துகள் மல்லிக்கா !

  பதிலளிநீக்கு
 17. அக்கா நீங்க ரொம்ப கொடுத்துவைத்தவங்க கடவுளின் ஆசி இருக்கு உங்களுக்கு..//

  இறைவனுக்கே புகழனைத்தும்..
  அவன்கொடுத்த அழகிய வாழ்க்கை அதனை அன்போடு வாழ்ந்து அழகியமுறையில் செயல்படுத்த விரும்புகிறேன் இறைவனின் துணையோடு.

  மிக்க நன்றி அனுஜா..

  பதிலளிநீக்கு
 18. Jaleela Kamal கூறியது...

  மலிக்கா உங்கள் மச்சானை பற்றி நன்கு அறிவேன். சிலர் என்ன தான் நல்ல எழுததாளர்கள்ா் இருந்தாலும் பெண்கள் எழுத்தை வெளிகொணர விடுவ்த்ிலை அந்த விதத்தில் நீங்கள் மிகவ்ும் கொடுதது வைத்தவ்ர்.

  உங்கள் நி்ரோடை உலகமெங்கும் வெற்றி நடை போட வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்//

  உண்மைதான் அக்கா பலர் வெளிவருவதேயில்லை திறமைகள் முடக்கப்படுவருகிறது. இறைவன் எதை நாடுகிறானோ அதுவே நடக்கும்..

  தங்களைப்போன்ற சகோதரிகள் எனக்கு கிடைக்கவும் இறைவன் கொடுத்த இந்த எழுத்துதானே காரணம் அல்ஹம்துலில்லாஹ்..

  மிக்க நன்றிக்கா.

  பதிலளிநீக்கு
 19. சென்னையில் புத்தகம் தே்வைபடுகி்றவர்கள் இந்த அட்ரெஸில் வாங்கிக்கொள்ளலாம்//

  ஆமாம். அப்படியே அக்கா கடையில் ஒரு ரவுண்ட் அடித்துவாங்க அசத்தலான பொருள்களை அள்ளிக்கொண்டு போங்க..

  பதிலளிநீக்கு
 20. ராமலக்ஷ்மி கூறியது...

  நல்வாழ்த்துகள் மலிக்கா.//

  மிகுந்த சந்தோஷம் மிக்க நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 21. Riyas கூறியது...

  வாழ்த்துக்கள் மலிக்கா அக்கா.. உங்களின் கவிதை நூல் வெளியீட்டுக்கு. இன்னும் பல வெளியிடனும்.//

  அடடா நம்ம ரியாஸா வாங்க. என்ன ஆளையே காணோம் நலமா?

  அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றிமா..

  பதிலளிநீக்கு
 22. மகேந்திரன் கூறியது...

  நல வாழ்த்துக்கள் சகோதரி..
  பல புத்தகங்கள் படைக்க இறைவன்
  அருள்புரியட்டும் தங்களுக்கு.//

  ஆமீன்..
  வாங்க சகோ மனமாந்த வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 23. தங்கள் கணவர் கொடுத்துவைத்தவர் அறிவான பண்பான மனைவி பெற்றமைக்கு .நீங்கள் அதைவிட கொடுத்து வைத்தவர் உங்கள் மீது அன்பு செலுத்துவதோடு உங்கள் அறிவின் ஆற்றல் மக்களுக்கு பயன் பட வைத்தமைக்கு .
  "உங்களின் உயர்ந்தவர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு ஏற்றி வைத்தவர்"

  அன்போடு வாழ்த்துகள் .//

  அன்புத்தந்தையின் பாசமிகு கருதுகளுக்கு நேசமிகு நன்றிகள்.

  அருமையான ஹதீஸுகளை இங்கே பதிந்தமைக்கும் மீண்டும் எனது நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 24. காஞ்சி முரளி உண்மையைச் சொல்லியுள்ளார்...!
  இதில் வியப்பேதும் இல்லை...//! இருந்தாலும் உண்மையை சொல்லியிருக்காங்களே அது அனைவருக்கும் தெரியனுமல்லவா அதென்..

  //ஆமா...!
  இத இத்தனை நாள் சென்று பதிவிட்டுள்ளீர்கள்...!
  //

  போடனும் போடனும் என நினைத்து தற்போதுதான் சந்தர்ப்பம் வந்திருக்கு. இனி உணர்வுகளுக்கு ஊக்கம் தந்தவர்களின் பட்டில் போடப்படும்..

  //உங்க ஆத்துக்கார்கிட்ட எதாவது கோரிக்கை வைத்திருக்கிறீர்களோ...?

  ஓஹோ..!
  இந்த பதிவப் போட்டு
  எதாச்சும் நகை வாங்க பிளான் போலிருக்கு...!//

  ஹய்யோடா நகையா அதெதுக்கு எல்லாத்துக்கும் பெண்கள் நகைக்குத்தேன் பிட்டப்போடுவாங்கன்னு நினைப்பதுக்கே ஒரு கேஸப்போடனும் NP ko செக்‌ஷனுல ஹி ஹி.. கேட்பவங்களும் இருக்காங்க அது நாங்க இல்லீங்கோ..

  ஹா...! ஹா...!..

  பதிலளிநீக்கு
 25. சம்பத் கூறியது...

  rompa aasariuyamaaka iruuku islaamiya samuthayaththin penkalukkalai puudi vaippaangka kanavarkala ena sollakkeelvipaddirukkeen. aanaal athu poy ena nirupiththu uyarnvaraakividdaar ungkalavar..

  vaazththukal.malikka..//

  வாங்க சம்பத். அப்படியில்லை சம்பத். இஸ்லாத்தில் அப்படிச்சொல்லவில்லை பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கு அதை எப்படி கடைப்பிடிக்கனும் என்பதையும் சொல்லிக்கொடுத்திருக்கு. ஒருசிலர் சொல்வதை வைத்து செய்வதை வைத்து அனைவரையும் அப்படிசொல்லக்கூடதல்லவா?

  சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது அதை பயன்படுத்த அனுமதி கொடுக்கப்படும் அதை சரியாக பயன்படுதினால் அனைவருக்கும் நல்லது. தவறான வழியில் கையாண்டால் அனைவருக்குமே தீங்கல்லவா ..

  தங்களின் வருகைக்கும் கருத்துபரிமாறுதலுக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 26. சமுதாயம் பயனுறும் வகையில் மேலும் மேலும் பல நூல்கள் எழுதி வெளியிட வாழ்த்துக்கள் மலிக்கா. தங்களுக்கும் தங்கள் கணவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 27. என்னுடைய இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்ம்மா! இன்னும் பல புத்தகங்கள் வெளிவரணும், மேலும் நிறைய வெற்றிகளை நீங்க அடையணும்னு மனம் நிறைய வாழ்த்துறேன்! (உங்களவருக்கும் சேர்த்துத்தான்)

  பதிலளிநீக்கு
 28. திண்டுக்கல் தனபாலன் கூறியது...

  மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்!
  பகிர்விற்கு நன்றி சகோதரி!
  என் வலையில்:
  "நீங்க மரமாக போறீங்க..."//

  வாங்கண்ணா தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 29. asiya omar கூறியது...

  நல்வாழ்த்துக்கள் மலிக்கா. தொடருங்கள் உங்கள் கவிதைப் பயணத்தை..மென்மேலும் புகழடைய வாழ்த்துக்கள்.உங்கள் மச்சானுடைய கடின ஒத்துழைப்பிற்கு பாராட்டுக்கள்.//

  வாங்கக்கா. பாசமான தங்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ஆசியாக்கா,,

  பதிலளிநீக்கு
 30. ஹேமா கூறியது...

  உங்களிடம் நிறையவே திறமைகள் இருக்கிறது.மனம் நிறைந்த வாழ்த்துகள் மல்லிக்கா !//

  வாங்க தோழி. எல்லாப்புகழும் இறைவனுக்கே. அவன் நாடியதை இவ்வுலகில் நாம் செய்கிறோம்.. தோழின் நேசமிகு வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 31. கீதா கூறியது...

  சமுதாயம் பயனுறும் வகையில் மேலும் மேலும் பல நூல்கள் எழுதி வெளியிட வாழ்த்துக்கள் மலிக்கா. தங்களுக்கும் தங்கள் கணவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.//

  வாங்க கீதா. ஊக்கமென்னும் கருதுகள் அளித்து என்னை இன்னுமின்னும் எழுததூண்டும் உங்களைபோன்ற தோழமைகள் கிடைக்கசெய்த இறைவனௌக்கே புகழனைத்தும். இறைவன் நாடினால் இன்னும் பல நூல்கள் வெளியிட ஆவல்கொண்டுள்ளேன். அடுத்த நூல் வெளியிட உள்ளேன் பிராத்தியுங்கள்..

  அன்பான கருத்துகளுக்கு மனமார்ந்த நன்றிகள் கீதா..

  பதிலளிநீக்கு
 32. கணேஷ் கூறியது...

  என்னுடைய இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்ம்மா! இன்னும் பல புத்தகங்கள் வெளிவரணும், மேலும் நிறைய வெற்றிகளை நீங்க அடையணும்னு மனம் நிறைய வாழ்த்துறேன்! (உங்களவருக்கும் சேர்த்துத்தான்)//

  வாங்க கணேஷண்ணா. இதயம் நிறைந்த பாசமிகு வாழ்த்துகளுக்கும் அன்பு நிறைந்த பிராத்தனைக்கும் தங்கையின் பாசமான நன்றிகள்..நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 33. வாழ்த்துகள் மலிக்காக்கா. இதை கேட்கும்போது (படிக்கும்போது)ரொம்ப சந்தோசமா இருக்கு.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது